மலைடா அண்ணாமலை! படத்துக்கு மட்டும் 30 வயசு இல்லைங்க! ‘இந்த’ விஷயத்துக்கும் தான்! இத நோட் பண்ணலையே!
சென்னை : 'அண்ணாமலை' சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், படத்துக்கு மட்டும் 30 வயது ஆகவில்லை.. ஓவ்வொரு படம் ரிலீசாகும் போதும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் இந்த விஷயத்துக்கும் தான்.. அது என்ன என்பதை பார்க்கலாம்..
அண்ணாமலை திரைப்படத்தை அவ்வளவு சீக்கிரமாக யாரும் மறந்து விட முடியாது நடிகர் ரஜினிகாந்தின் கேரியரில் மிக முக்கிய மாஸ் கிளாஸ் திரைப்படம் என்றால் அண்ணாமலைக்கு எப்போதுமே தனி இடம் உண்டு.
ஒரு சாதாரண ஏழை பால் வியாபாரி தனது நண்பன் செய்த துரோகத்தால் ஆக்ரோஷத்துக்கு உள்ளாகி மிகப்பெரும் ஹோட்டல் அதிபராக மாறுவது எப்படி என்பதை ரஜினிக்கே உரிய டிரேட்மார்க் ஹீரோயிஸ கண்டண்டுகளுடன் வெளிவந்த இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்ததோடு ரஜினிகாந்த் எனும் நடிகரின் கிரீடத்தில் ஒரு வைரக்கல்லாகவே பதிந்துவிட்டது.

அண்ணாமலை படம்
கவிதாலயா நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் 1992ஆம் ஆண்டு வெளிவந்தது. நடிகர் சுரேஷ் கிருஷ்ணா வாழ்வில் மறக்க முடியாத திரைப்படமாகவும் இது அமைந்தது. ரஜினிகாந்த் மட்டுமல்லாது அந்தக் காலத்தில் மிகப்பெரிய அளவில் கொடிகட்டிப் பறந்த குஷ்பூ இப்படத்தில் ஜோடி சேர்ந்தார் மேலும் மனோரமா, ஜனகராஜ், நிழல்கள் ரவி, ராதாரவி, சரத்பாபு என மிகப்பெரிய ஒரு நட்சத்திரப் பட்டாளமே இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்து இருந்தது. ஆனால் அவ்வளவு சீக்கிரம் இந்த திரைப்படம் எளிதாக வெற்றியை குவித்து விடவில்லை பல்வேறு சிக்கல்கள் அரசியல் நெருக்கடிகளை கடந்து இந்த படம் வெளியானது.

நடிகர் ரஜினிகாந்த்
முதலில் இந்த படத்தை அப்போது பிரபல இயக்குனராக இருந்த வசந்த் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் விலகியதை அடுத்து இந்த வாய்ப்பு சுரேஷ் கிருஷ்ணாவுக்கு போனது. அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட சுரேஷ்கிருஷ்ணா தனது சிறப்பான பணிகளால் படத்தை வெற்றி பெறச் செய்தார். மேலும் இசை இந்த படத்துக்கு மிக முக்கியமாக அமைந்தது. வந்தேன்டா பால்காரன் , அண்ணாமலை அண்ணாமலை, ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் உள்ளிட்ட பாடல்கள் படத்திற்கு தூணாக விளங்கியது. மேலும் வைரமுத்துவின் பாடல் வரிகளை படத்துக்கு மெருகேற்றியது.

பிரம்மாண்ட வெற்றி
சுவரொட்டிகளுக்கு கூட தடை என அப்போதைய தமிழக அரசால் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆனபோதிலும் இதுபோன்ற பரபரப்புகளே படத்திற்கு விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. வெளியான தியேட்டர்களில் 175 நாட்களுக்கும் மேலாக ஓடி வெற்றிக்கொடி நாட்டிய இந்த படம், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தனது வீடு இடிக்கப்பட்டபோது நடிகர் ரஜினிகாந்த் ஆவேசத்துடன் பேசும், "அசோக் இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சி வெச்சிக்கோ" என்ற காட்சி சிங்கிள் ஷாட்டாக பதிவு செய்யப்பட்டது. ஆவேசமான அந்த வசனத்தை ஒரே டைட்டில் பேசி அசத்தியிருப்பார் ரஜினிகாந்த் அந்த வசனத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது.

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா
இந்த திரைப்படத்தில் நிறைய விஷயங்களை ரஜினிகாந்த்துக்காக பார்த்து பார்த்து செதுக்கி இருந்தார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. அதில் ஒன்று ஹீரோவுக்கான இன்ட்ரோ பாடல். மாட்டுப்பொங்கலன்று பறந்து வந்த பறையை பாய்ந்து வந்து பிடித்து கண்ணடித்து அறிமுகமான ரஜினிகாந்தின் அறிமுக பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. அதன்பிறகுதான் ஹீரோவுக்கான இன்ட்ரோ பாடல்கள் ஒவ்வொரு திரைப்படங்களில் நடிகர்கள் அடம்பிடித்து கேட்டும் அளவுக்கு கொண்டு வந்தது. அதே போல் ஒரே பாடலில் ஹீரோ பணக்காரனாவது என்ற புதிய பார்முலாவை இந்த திரைப்படத்தில் தான் சுரேஷ் கிருஷ்ணா கொண்டுவந்தார், அது சூரிய வம்சம், தமிழ்படம் வரை தொடர்ந்தது.

மாஸ் டைட்டில் கார்ட்
சரி நான் விஷயத்துக்கு வருவோம் ஜேம்ஸ் பாண்ட் படங்களை ஹீரோ அறிமுகம் ஆவதற்கு முன்னதாக பிரத்தியேக இசையுடன் ஜேம்ஸ் பாண்ட் 007 என்ற டைட்டில் திரையில் வந்து போகும் போது ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டாடினர். சூப்பர்ஸ்டார் என்ற பெயரைக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இதே போன்ற ஒரு டைட்டில் கார்டை உருவாக்க வேண்டும் என நினைத்தார் சுரேஷ் கிருஷ்ணா. மாசான தீம் மியூசிக் உடன், சீரியல் பல்புகள் சூப்பர்ஸ்டார் என எழுத்துக்களோடு தோன்ற நெருப்பு போல் வந்து சென்ற ரஜினி என்ற டைட்டில் கார்டு ரசிகர்களால் அப்போது திருவிழா போல கொண்டாடப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை நடிகர் ரஜினிகாந்த் படம் என்றாலே இந்த டைட்டில் கார்டு இடம்பெறாமல் இல்லை. அந்த அளவுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதனை உருவாக்கியவர் சுரேஷ்கிருஷ்ணா. அந்த டைட்டில் கார்டுக்கு தற்போது 30 ஆண்டுகள் வயது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
அரசு பள்ளி முட்டை.. ₹3.70க்கு வாங்கி ₹5.63 விற்பனை. விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை -
பெருந்துறை இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? பாஜகவில் செல்வாக்கை நிரூபிக்க ஆசிட் டெஸ்ட்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!












Click it and Unblock the Notifications