சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்கள் வீரர்களுடன் ரகசிய டீல் பேசுகிறார்கள்.. ஐபிஎல்லில் முட்டிக்கொள்ளும் டாப் அணிகள்.. பறந்த புகார்

Google Oneindia Tamil News

சென்னை: ஐபிஎல் 2021 ரீ டென்ஷன் முடியும் முன்பே தங்கள் அணி வீரர்களை லக்னோ அணி மறைமுகமாக வாங்க முயல்வதாக பஞ்சாப், ஹைதராபாத் அணிகள் புகார் கொடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஐபிஎல் 2022 ஏலம் அடுத்த வருடம் ஜனவரி பிப்ரவரியில் நடக்க உள்ளது. அகமதாபாத், லக்னோ அணிகள் இந்த முறை ஐபிஎல்லில் ஆட உள்ளது. விரைவில் இடத்ற்கான மெகா ஏலம் நடக்க உள்ளது.

ஏலத்திற்கு முன்பே இந்த முறை ரீ டெயின் வீரர்கள் பட்டியலை அளிக்க வேண்டும். உத்தேச ரீ டெயின் வெளியாகி உள்ள காரணத்தால் 2022 ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு, ஆரவாரம் எல்லாம் இப்போதே தொடங்கிவிட்டது.

 விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றம்- லோக்சபா பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றம்- லோக்சபா பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு

என்ன ரூல்ஸ்

என்ன ரூல்ஸ்


இந்த நிலையில் தற்போது ரீ டெயின் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு அணியும் 4 வீரர்கள் வரை தக்க வைக்க முடியும். நாளையோடு இதற்கான அவகாசம் முடிகிறது. அதன்பின் புதிதாக வந்துள்ள லக்னோ, அஹமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் தங்கள் அணிக்கு என்று தலா 4 வீரர்களை ஏலத்திற்கு முன்பாக எடுக்க முடியும்.

பேசலாம் - பேச கூடாது

பேசலாம் - பேச கூடாது

அதே சமயம் ஒவ்வொரு அணியிலும் உள்ள வீரர் ரீ டெயின் செய்யப்படும் போது கூடுதல் தொகை கேட்கலாம். உதாரணமாக சிஎஸ்கேவில் ருத்துராஜ் ரீ டெயின் செய்யப்படும் போது அவர் விருப்பப்பட்டால் கூடுதல் தொகை கேட்கலாம். அவரை அணி நிர்வாகம் கூடுதல் தொகைக்கு எடுக்க விரும்பினால் ரீ டெயின் செய்யலாம். ஆனால் எந்த வீரரும் ரீ டெயின் அவகாசம் முடியும் முன் புதிய இரண்டு அணிகளோடு பேரம் செய்ய கூடாது.

மீறல்

மீறல்

அதாவது அகமதாபாத், லக்னோ ஆகிய அணிகள் தலா 4 வீரர்களை ரீ டெயின் முடிந்த பின்பே முடிவு எடுக்க முடியும். ரீ டெயின் நடந்து கொண்டு இருக்கும் போதே ருத்துராஜிடம் கூடுதல் பணம் கொடுப்பதாக கூறி அவரை தங்கள் அணிக்குள் இழுக்க முடியாது. இது மினி ரகசிய ஏலம் போல ஆகிவிடும். அதேபோல் ரீ டெயின் செய்வதை இது பாதிக்கும். அகமதாபாத், லக்னோ அணிகளுக்கு இது தொடர்பாக ஏற்கனவே கண்டிப்புடன் விதிகள் சொல்லப்பட்டுள்ளது.

புகார்

புகார்

இந்த நிலையில்தான் விதியை மீறி ஆர்பிஎஸ்ஜி நிறுவனத்தின் லக்னோ அணி இரண்டு வீரர்களை கூடுதல் விலைக்கு வாங்க முயன்றுள்ளதாம். அதன்படி ரீ டெயின் நடக்கும் முன்பே கே எல் ராகுலிடம் லக்னோ அணி பேசி உள்ளதாக கூறப்படுகிறது. கூடுதல் தொகை கொடுப்பதாக அழைத்துள்ளது. இதனால்தான் அவர் பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்தார் என்று ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷீத்

ரஷீத்

அதேபோல் ஹைதராபாத் அணியில் ரஷீத் கான் 14 -15 கோடி ரூபாயை ரீ டெயின் செய்ய கேட்டு இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கும் போதே அதே தொகையை கொடுத்து அவரை எடுக்க லக்னோ அணி முன் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதை பற்றி தற்போது பஞ்சாப், ஹைதராபாத் அணிகள் புகார் கொடுத்துள்ளதாம்.

ஐபிஎல் தகவல்

ஐபிஎல் தகவல்

தங்களின் வீரர்களை ரீ டெயின் செய்வதற்கு முன் தூக்குகிறார்கள் என்று புகார் பஞ்சாப், ஹைதராபாத் அணிகள் புகார் கொடுத்துள்ளதாம். இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகி ஒருவர் அளித்த தகவலில், பிசிசிஐக்கு புகார் சென்றுள்ளது. ஆனால் புகார் கடிதம் அளிக்கப்படவில்லை. வாய்மொழி புகார்தான் சென்றுள்ளது. இதை பற்றி விசாரித்து அணிகளுக்கு முறையான அறிவுரை வழங்குவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
IPL 2022: 2 Team complain against the new team on poaching of players.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X