“பாஜக அப்படி என்ன பண்ணிட்டாங்க?” சைடு வாங்கும் டிடிவி தினகரன்.. என்ன டோன் மாறுது.. கவனிச்சீங்களா?
சென்னை : அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வெளிப்படையாக பாஜக ஆதரவு ஸ்டாண்ட் எடுத்திருப்பது அனைத்து அரசியல் கட்சிகளையும் உற்றுநோக்க வைத்திருக்கிறது.
கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜகவுக்கு நெருக்கமானவர்களாகச் செயல்பட்டு வந்த போதெல்லாம் டிடிவி தினகரன், பாஜகவை விமர்சித்தே பேசி வந்தார்.
2019 எம்.பி தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செயல்படுவது பற்றி விமர்சித்து வந்தார். எஸ்.டி.பி.ஐ கட்சியும் அமமுகவும் கூட்டணியில் இருக்கிறது.
இந்நிலையில், அதிமுக விவகாரத்தில் பாஜகவின் கணக்குப்படி, டிடிவி தினகரன் கூட்டணியில் இணையவிருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் வெளிப்படையாக பாஜகவை ஆதரித்துப் பேசத் தொடங்கியிருக்கிறார் தினகரன்.

பாஜக விருப்பம்
அதிமுகவில் கடந்த நான்கு மாதங்களாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், அவர்களை இணைந்து செயல்படுமாறு டெல்லி பாஜக தலைமை அறிவுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய 4 பேரும் இணைந்தால் தான் அதிமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் இருக்கும் என்பதால் அதையே பாஜக தலைமையும் விரும்புவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக டெல்லியில் இருந்து ஓபிஎஸ், தினகரன். ஈபிஎஸ் ஆகியோருக்கு சேதிகள் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மூன்று பேரின் நிலைப்பாடு
பாஜக தலைமை மட்டுமல்லாமல், திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் - டிடிவி ஒன்றுபட வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினரும் பேசி வருகின்றனர். ஓபிஎஸ், எடப்பாடி, டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை ஏற்கனவே தெரிவித்துவிட்டார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர் செல்வத்துடன் இனி இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்று முரண்டு பிடித்து வருகிறார். அதேசமயம், அதிமுகவில் இணையமாட்டோம், கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என டிடிவி தினகரன் கூறி வருகிறார்.

வெளிப்படையாக ஆதரவு பேச்சு
இந்நிலையில், நேற்று வெளிப்படையாகவே பாஜகவுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார் டிடிவி தினகரன். பாஜக பற்றிய திமுகவின் பிரச்சாரத்தை விமர்சித்துப் பேசி இருக்கிறார் தினகரன். திமுக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து அமமுக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

திமுக - மதம்
அப்போது பேசிய தினகரன், திமுக புதிதாக மதத்தை கையில் எடுத்திருக்கிறது. மதச் சார்பற்றவர்கள் என்றால் எந்த மதத்திற்கும் சார்பாக இருக்கக்கூடாது. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என எந்த மதத்தினருக்கு பாதிப்பு வந்தாலும் தோளோடு தோள் நின்று போராடுபவர்கள்தான் மதச்சார்பற்ற அரசியல்வாதிகள். தனது விருப்பு வெறுப்புக்காக செயல்படக் கூடாது.

மைனாரிட்டிக்கு எதிராக திமுக
சமீபகாலமாக இந்துக்களை திட்டினால் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைத்துவிடும் என நம்பி பேசிக் கொண்டிருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்வோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையாக முடியாதவாறு திமுக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இனியும் நீங்கள் மைனாரிட்டிகளை ஏமாற்ற முடியாது.

பாஜக என்ன செய்துவிட்டது
சிறுபான்மை மக்களை பாஜகவை காட்டி பயமுறுத்தினார்கள். நான் பாஜகவுக்கு ஆதரவாகப் பேசவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்து ஏழெட்டு வருடங்கள் ஆகிவிட்டன. நம்மை என்ன செய்து விட்டார்கள்? எஸ்.டி.பி.ஐ கட்சி நம் கூட்டணிக் கட்சிதான். அவர்களின் அங்கீகாரத்தை தடை செய்ய மாட்டோம் என தேர்தல் ஆணையமே சொல்லிவிட்டதே. நான் யாருக்கும் வக்காலத்து வாங்கி பேசவில்லை. உண்மையைச் சொல்கிறேன்.

இந்துக்கள் ஒன்றிணைந்தால்
கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம். நாம் திமுக போல தொடை நடுங்கிகள் கிடையாது. பாஜகவை தமிழ்நாட்டில் வளர்ப்பது திராவிட மாடல் திமுகவும், திருமாவளவனும் தான். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு பயந்து கொண்டு இருப்பது அதிமுக அல்ல திமுக தான். இந்துக்கள் ஒன்றாக இணைய மாட்டார்கள் என நினைத்துவிட்டார்கள். இந்துக்கள் ஒன்றிணைந்தால் அவர்களுக்குத்தான் ஆபத்து" எனப் பேசியிருக்கிறார் தினகரன்.

அப்படியே பாஜக பக்கம்
பாஜகவை காட்டி திமுக பயமுறுத்தியது, ஆனால், அவர்கள் சொல்வது போல இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக அரசு நடந்துகொள்ளவில்லை, திமுக தான் மதத்தை கையில் எடுத்திருக்கிறது என்கிற ரீதியில் பேசியிருக்கிறார் தினகரன். தினகரனின் இந்த வெளிப்படையான பாஜக ஆதரவு ஸ்டாண்ட், அவர் டெல்லி உத்தரவின்படி, ஓபிஎஸ் - ஈபிஎஸ் உடன் அணி அமைக்கத் தீவிரமாக தயாராகிவிட்டதையே காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications