சான்ஸே இல்ல.. “நெவர்”.. மொத்தமாக முட்டுக்கட்டை போட்ட எடப்பாடி டீம்! பாஜக ‘டீல்’ நிராகரிப்பு? காலி!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியில் இருப்பவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளனர். பாஜக தலைமையின் முடிவு, ஓபிஎஸ் + ஈபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும் என்பதாகவே இருக்கிறது. ஆனால், ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்புமே, பாஜகவின் முடிவுக்கு மாறாக தீவிரமாக இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில், நடைபெற்று வருகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பற்றி அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்வது பற்றி ஆலோசித்து வருகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி அணியினர் அனைவருமே, ஓபிஎஸ்ஸை இனி ஒருபோதும் கட்சியில் சேர்க்கவே கூடாது என்கிற ரீதியில் பேசியுள்ளனர். இதனால், பாஜகவின் இணைப்பு முயற்சியை ஈபிஎஸ் தரப்பு நிராகரித்துள்ளது தெளிவாகியுள்ளது.

மா.செக்கள் கூட்டம்
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எடப்பாடி அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

முக்கிய ஆலோசனை
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் ஜனவரி 4ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு, ஜனவரி 9 ஆம் தேதி தொடங்க உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுக்காதது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் வேண்டவே வேண்டாம்
இந்தக் கூட்டத்தின் போது, அதிமுகவில் எந்தச் சூழலிலும் ஓபிஎஸ் அணியினரை இணைக்கக்கூடாது என மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஒருமித்த குரலை எழுப்பியுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, நாடாளுமன்ற தேர்தலையும் உங்கள் தலைமையில் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

சீனியர்கள் பேச்சு
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுக துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம், அரசியலில் போலி ஓபிஎஸ். கட்சியிலிருந்து அவர் ஒதுக்கப்பட்டதில் மாற்றம் ஏதும் இல்லை, எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்படும் எனப் பேசியுள்ளார். அதேபோல, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் மீண்டும் இணைக்கவே கூடாது என்றும், ஓபிஎஸ் மட்டுமல்ல, அந்த அணிக்கு சென்றவர்களையும் இனி சேர்க்கவே கூடாது என்றும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.

ஒரே குரல்
எடப்பாடி பழனிசாமி அணியின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இனி ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்றும், ஓபிஎஸ் அணியில் இருந்து யார் வந்தாலும் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்றும் நம் அணி ஏற்கனவே பலமாகத்தான் இருக்கிறது என்றும் ஈபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஒருமித்த குரலில் பேசியுள்ளனர்.

போட்டுப் பார்க்கலாம்
சமீபத்தில் நடைபெற்ற ஓபிஎஸ் அணி மா.செக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசினர். இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிற ரீதியில் பேசி வருகின்றனர். இதனால், சமரசம் ஏற்படுவதற்கான வாய்ப்பே இனி இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை, மோதிப் பார்க்கலாம் என இரு தரப்பும் முடிவெடுத்துள்ளது தெளிவாகியுள்ளது.

பாஜக விருப்பம் நிராகரிப்பு
அதிமுக விவகாரத்தைப் பொறுத்தவரை பாஜக தலைமையின் முடிவு, ஓபிஎஸ் + ஈபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும் என்பதாகவே இருக்கிறது. ஒன்றிணைந்த அதிமுகவே தங்களுக்கு தேர்தலில் பலன் தரும் என்பது பாஜகவின் கணக்காக இருக்கிறது. ஆனால், ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்புமே, பாஜகவின் முடிவுக்கு மாறாக, இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என தீவிரமாக இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications