சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆ ராசா + செந்தில் பாலாஜி + அனிதா.. தமிழ்நாடு பக்கம் திரும்பிய போகஸ்.. டெல்லி களமிறக்கும் "ஆபரேஷன்"?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை, சிபிஐ தனது போகஸை திருப்ப தொடங்கி உள்ளதோ என்ற கேள்வி திடீரென எழுந்துள்ளது. பல்வேறு வடமாநிலங்களில் எதிர்கட்சிகளை முடக்க அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாக ஒரு புகார் உள்ளது. முக்கியமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க, ஆபரேஷன் கமலாவை மேற்கொள்ள பாஜக இந்த மத்திய விசாரணை ஆணையங்களை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் புகார் வைத்து வருகின்றனர்.

கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழவும் இதுவே காரணமாக எதிர்கட்சிகளால் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை, சிபிஐ இரண்டும் தங்கள் பார்வையை திருப்பி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை விசாரணை திரும்பும் என்று கூட சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். அவர் அளித்த பேட்டியில், வெயிட் பண்ணுங்கண்ணா அமலாக்கத்துறை கொஞ்சம் பிஸியா இருக்காங்க. முடிச்சிட்டு இங்கதான் வருவாங்க. விரைவில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வார்கள், என்று கூறினார்.

அடுத்து என்ன.. அந்த அமைச்சரா? கலெக்‌ஷன் காட்டிட்டாரே! செந்தில் பாலாஜியை விடாமல் சீண்டும் அண்ணாமலை!அடுத்து என்ன.. அந்த அமைச்சரா? கலெக்‌ஷன் காட்டிட்டாரே! செந்தில் பாலாஜியை விடாமல் சீண்டும் அண்ணாமலை!

 அமலாக்கத்துறை

அமலாக்கத்துறை

இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அப்போதே பதில் அளித்து இருந்தார். அதில், அண்ணாமலை எப்போது அமலாக்கத்துறை இயக்குநரா? அல்லது அவர் இணை இயக்குநரா? ஒன்றிய அரசில் அவர் என்ன நிதி அமைச்சராக இருக்கிறாரா? அரவக்குறிச்சியில் தோல்வி அடைந்து ஓடினாரே.. அவர் தானே? என்ன பொறுப்பில் இருக்கிறார் அவர்? அந்த பக்கமே அவரை பார்க்கக் முடிய வில்லையே? அமலாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேச முடியும்?. தன்னிச்சையாக செயல்பட கூடிய அமலாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேசலாம். அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவது வெட்ட வெளிச்சம் ஆகிறது, என்று குறிப்பிட்டு இருந்தார்.

விசாரணை

விசாரணை

இந்த நிலையில்தான் அண்ணாமலை சொன்னது போலவே தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தனது பார்வையை திருப்பி உள்ளது. அதன்படி, திமுக எம்பி, துணை பொதுச்செயலாளர் ஆ ராசாவின் பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று முடக்கி உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கோவையில் ராசாவின் பினாமிக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை முடக்குவதாக குறிப்பிட்டுள்ளனர். இதன் மதிப்பு 55 கோடி ரூபாய் ஆகும். 2004 - 2007 காலகட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது ஆ ராசா இருந்த போது இந்த முறைகேட்டை செய்ததாக கூறப்படுகிறது. அதாவது ஹரியானவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்றிற்கு ரியல் எஸ்டேட் அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் வாங்கியதில் இந்த நிலம் வணக்கப்பட்டதாகவும்.

அறிக்கை

அறிக்கை

தனது நண்பர்கள், உறவினர்கள் நிறுவனங்கள் மூலம் பினாமி நிறுவனங்களை உருவாக்கி இந்த நிலத்தை ஆ. ராசா வாங்கியதாக இந்த அறிக்கையில் கூறப்படுகிறது. இதனால் அந்த நிலங்களை முடக்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அமலாக்கத்துறை தமிழ்நாடு பக்கம் தலையை திருப்பி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே போக்குவரத்து துறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக காலத்தில் அமைச்சராக இருந்த போது முறைகேடு செய்ததாக புகார்கள் வைக்கப்பட்டன. இது தொடர்பான அமலாக்கத்துறை வழக்கு விசாரணையும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 அனிதா

அனிதா

இன்னொரு பக்கம் கடந்த 2002-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது. சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் செய்திருந்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் அமலாக்கத்துறை இடைக்கால தடை நீக்கப்பட்டதும் விசாரணையை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2ஜி வழக்கு

2ஜி வழக்கு

இன்னொரு பக்கம் திமுக எம்பி ஆ.ராசாவிற்கு எதிராக சிபிஐ அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிபிஐ அமைப்பின் இரண்டு பெரிய வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதில் வருமானத்துக்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவிற்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த தொடர் வழக்குகள் நடவடிக்கைகள் காரணமாக மத்திய அரசின் விசாரணை ஆணையங்கள் தமிழ்நாடு பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது,.

English summary
Is Enforcement Directorate moving its focus towards Tamil Nadu? Is DMK being targetted?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X