இன்று சந்திர கிரகணம்! அற்புதமாக ஜொலிக்க போகும் "ரத்த நிலா.." வெறும் கண்களால் பார்க்கலாமா! முழு தகவல்
சென்னை: இன்று முழு சந்திர கிரகணம் நிகழும் நிலையில், இதை வெறும் கண்களால் பார்க்கலாமா என்பதே இங்குப் பலருக்கும் உள்ள கேள்வியாக உள்ளது.
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலையில், இப்போது நாம் இந்தாண்டின் கடைசி சந்திர கிரகணத்தைப் பார்க்க உள்ளோம்.
சந்திர கிரகணத்தின் சமயத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் மாறும். இந்தாண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது.

சந்திர கிரகணம்
கடைசியாக இந்தியாவில் கடந்த நவம்பர் 19, 2021இல் சந்திர கிரகணம் தெரிந்தது. இருப்பினும், அந்த சமயம் அது முழு சந்திர கிரகணமாக இல்லாமல் பகுதி சந்திர கிரகணமாகவே இருந்தது. இப்போது மீண்டும் நமக்குச் சந்திர கிரகணத்தைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. இதையும் நீங்கள் மிஸ் செய்துவிட்டால்.. அடுத்து அக்டோபர் 28, 2023 வரை காத்திருக்க வேண்டும்.

ரத்த நிலா
சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவே பூமி வரும்போது, அதுவே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. சந்திரன் பூமி சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படும்.. இந்த கிரகணத்தின் போது சந்திரனை பிளட் மூன் என அழைப்பார்கள். ஏனென்றால் அப்போது சந்திரன் ரத்தச் சிவப்பு நிறத்தில் மாறிவிடும். இதை நாம் பூமியில் இருந்தபடி பார்க்கலாம்.

வெறும் கண்களால்
ஆனால், இதை வெறும் கண்ணால் பார்க்கலாமா? ஏனென்றால் சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு சூரிய கிரகணம் ஏற்பட்ட போது, அதை வெறும் கண்களால் கண்டிப்பாகப் பார்க்கக் கூடாது என ஆய்வாளர்கள் எச்சரித்து இருந்தனர். ஏனென்றால் சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிர்கள் நமது கண்களைப் பாதிக்கும் ஆபத்து உள்ளது. இதன் காரணமாகவே வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்றார்கள்.

ஆபத்தானதா
அதேநேரம் நிலவில் இருந்து வரும் கதிர்கள் சூரிய கதிர்கள் அளவுக்குத் தீவிரமானவை இல்லை. எனவே, சூரிய கிரகணத்தைப் போல இல்லாமல் சந்திர கிரகணத்தை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம். இதனால் நமக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படப் போவதில்லை. இது முற்றிலும் பாதுகாப்பானது.. இருந்தாலும் உங்களுக்கு எதாவது தயக்கம் இருந்தால்... நேரடியாகப் பார்க்காமல், டெலஸ்கோப் உதவியுடன் அதை நீங்கள் இன்னும் கூட தெளிவாகப் பார்க்க முடியும்.

எங்குத் தெரியும்
2022ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் உலகின் பல பகுதிகளில் தெரியும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ரஷ்யா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா பகுதிகளில் இந்த சந்திர கிரகணம் தெளிவாகத் தெரியும். அதேநேரம் இந்தியாவில் இந்த சந்திர கிரணம் பகுதி சந்திர கிரணமாகவே தெரிய உள்ளது. சென்னையிலும் கூட இது பகுதி சந்திர கிரகணமாகவே தெரிய உள்ளது.

நேரம்
இந்த அற்புதமான முழு சந்திர கிரகணம் நிகழ்வு இன்று மாலை 3:46 மணிக்குத் தொடங்கும். மாலை 4.29 மணி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பகுதி சந்திர கிரகணம், அதாவது சூரியனைப் பூமி மறைக்கத் தொடங்கும் நிகழ்வு பிற்பகல் 2:39 மணிக்கே தொடங்கிவிடும். மாலை 5:11 வரை இந்த நிகழ்வு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னையில் சந்திர கிரகணம் மாலை 5:39 மணிக்குத் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications