தென் மாவட்ட ‘மாஜி’ சைலண்ட்.. கவனிச்சீங்களா..? ‘விரைவில் எங்க பக்கம்’ - குதூகலிக்கும் ஓபிஎஸ் டீம்!
சென்னை : தென் மாவட்டத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சர் ஒருவர் ஓபிஎஸ் தரப்பின் பேச்சுவார்த்தைக்கு ஓகே சொல்லி இருப்பதாகவும், விரைவில், ஓபிஎஸ் டீமுக்கு அவர் தாவக்கூடும் என்றும் பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.
Recommended Video
அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பைத் தொடர்ந்து, இணைந்து செயல்படலாம் வாங்க என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், ஈபிஎஸ் அந்த அழைப்பை நிராகரித்தார்.
இந்நிலையில், தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனது ஆதரவாளர்களை தனது பண்ணை வீட்டில் சந்தித்துப் பேசி வருகிறார்.
இதுஒருபுறமிருக்க, தென் மாவட்டங்களைச் சேர்ந்த, தற்போது ஈபிஎஸ் பக்கமிருக்கும் சில முன்னாள் அமைச்சர்களிடமும் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில்
ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23க்கு முன்னர் இருந்த நிலையே தொடரும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் ஈபிஎஸ்ஸின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவி செல்லாததாகியுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளது. அதன் மீது ஓ.பன்னீர்செல்வமும் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

செல்வாக்கை உயர்த்த
தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்த நிலையில், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என அழைப்பு விடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் இந்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். ஓபிஎஸ் தரப்பில் இருந்து சில முக்கிய புள்ளிகள், ஈபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவர்களிடம் பேசியும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து, கட்சியில் தனக்கான செல்வாக்கை நிலைநாட்டுவதில் ஓபிஎஸ் காய் நகர்த்தி வருகிறார்.

அசைன்மெண்ட்
ஓபிஎஸ் தரப்பு, ஈபிஎஸ் வசமிருக்கும் முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் ஈர்க்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது. பெரிய அளவில் பொதுக்குழு உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஓபிஎஸ் தரப்பினர் ஈடுபட்டு வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது. இதற்காக முக்கிய நிர்வாகிகளுக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதில் நல்ல விளைவுகள் தென்படக் தொடங்கியுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

பண்ணை வீட்டில் ஆலோசனை
நேற்று முன் தினம் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்குச் சென்ற ஓபிஎஸ், தனது பண்ணை வீட்டில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசி வருகிறார். நேற்று காலை முதல் இரவு வரை மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, சென்னை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் சந்தித்துப் பேசியுள்ளனர்.

தென் மாவட்ட புள்ளிகளுக்கு குறி
மேலும், தீர்ப்பை சாதகமாக்கி தென் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளை இழுக்கவும் ஓபிஎஸ் தரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதாம். குறிப்பாக, ஓபிஎஸ் சார்ந்துள்ள முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சர்கள் சிலரிடம் ஓபிஎஸ்ஸின் மகன்கள் ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் ஆகியோர் பேசியதாகக் கூறப்படுகிறது.

கிரீன் சிக்னல் கொடுத்த மாஜி
இந்தப் பேச்சுகளுக்கு இப்போது கிரீன் சிக்னல் விழத் தொடங்கியுள்ளதாம். சீனியரான உங்களுக்கு கட்சியில் முக்கிய இடம் கிடைக்கும் என ஓபிஎஸ் தரப்பு உறுதியளித்ததை மாஜி ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளாராம். சில நாட்களுக்கு முன்பு வரை ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்துப் பேசிவந்த அந்த முன்னாள் அமைச்சர் இப்போது ஆஃப் ஆகியுள்ளார் பார்த்தீர்களா என்று நிலைமையைச் சுட்டிக்காட்டுகிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.












Click it and Unblock the Notifications