அசிங்கப்படுத்திட்டாங்க! தென்மண்டலத்தில் ஓபிஎஸ்ஸுக்கு அனுதாப அலை.. பல்ஸ் பார்த்த எடப்பாடி! பளீர் மூவ்
சென்னை: அதிமுகவில் மீண்டும் தனக்கான ஆதரவை நிலைநாட்டும் வகையில் தென் மண்டலத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். தன்னுடைய பழைய ஆதரவாளர்களை மீண்டும் தனது கேம்பிற்கு கொண்டு வர வைக்கும் விதமாக ஓபிஎஸ் பயணம் மேற்கொண்டுள்ளார்.
Recommended Video
அதிமுகவில் எப்படியாவது பொதுச்செயலாளர் பதவியை பெற்று விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார். ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்டி அதே நாளில் அதிமுகவின் ஒற்றை தலைமையாக உருவெடுக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.
ஆனால் ஓபிஎஸ்ஸோ.. நான்தான் ஒருங்கிணைப்பாளர்.. நான் இல்லாமல்.. உங்களால் கூட்டத்தையே கூட்ட முடியாது. எந்த தீர்மானமாக இருந்தாலும் அதற்கு நான்தான் அனுமதி அளிக்க வேண்டும். நான் இல்லாமல் எப்படி கூட்டத்தை கூட்டுவீர்கள் என்று ஓபிஎஸ் கூறி வருகிறார்.

தென் மண்டல பயணம்
இந்த நிலையில்தான் தற்போது தென் மண்டலங்களுக்கு ஓபிஎஸ் திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த பொதுக்குழுவிற்கு முன்பாக ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்து வந்த மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலர், முன்னாள் எம்எல்ஏக்கள், தென்மண்டல நிர்வாகிகள், ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பலர் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவினார்கள். பொதுக்குழுவிற்கு முந்தைய 2 நாட்களில் வரிசையாக நிர்வாகிகள் அணி மாறினார்கள்.

அதிர்ச்சி
இது ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவை கொடுத்தது. இந்த நிலையில்தான் அதிமுகவில் மீண்டும் தனக்கான ஆதரவை நிலைநாட்டும் வகையில் தென் மண்டலத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். தன்னுடைய பழைய ஆதரவாளர்களை மீண்டும் தனது கேம்பிற்கு கொண்டு வர வைக்கும் விதமாக ஓபிஎஸ் பயணம் மேற்கொண்டுள்ளார். தென் மண்டலங்களில் இருக்கும் முக்குலத்தோர் சொந்தங்களை தன் பக்கம் இழுக்க ஓபிஎஸ் தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது?
தென் மண்டலத்தில் உள்ள முக்குலத்தோர் பிரிவினர் பலர் ஓபிஎஸ் தேவையின்றி அசிங்கப்படுத்தப்பட்டதாக கருதுகிறார்கள். ஒற்றை தலைமை வேண்டும் என்றால்.. பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தி இருக்கலாம். அதை நீதிமன்றத்தில் கொடுத்து தீர்மானத்திற்கு அனுமதி வாங்கி இருக்கலாம். ஆனால் ஓபிஎஸ்ஸை ஏன் அசிங்கப்படுத்த வேண்டும். அவர் அதிர்ந்து கூட பேச மாட்டாரே. எடப்பாடி தரப்பு செய்தது தப்பு என்று முக்குலத்தோர் பிரிவினர் கருதுகிறார்களாம்.

மோசமான செயல்
அதோடு பெரியகுளத்து பெரியமனசுக்காரர் ஓபிஎஸ்.. அவரை போய் இப்படி அசிங்கப்படுத்துவது எப்படி நன்றாக இருக்கும் என்றும் கருதுகிறார்களாம். எடப்பாடி தரப்பு ஆணவத்தில் ஆடுகிறது என்றும் முக்குலத்தோர் பிரிவினர் ஓபிஎஸ் மீது அனுதாப அலைகளை வீசி வருகிறார்களாம். இதனால்தான் நேற்று முதல்நாள் இரவு சென்னை விமான நிலையத்தில் அதிமுக மகிளிர் அணி ஓபிஎஸ்ஸுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தது.

சிறப்பான வரவேற்பு
அதோடு மதுரையிலும், தேனியிலும் ஓபிஎஸ்ஸுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொண்டர்கள் பலர் கூடி அவரை வரவேற்றனர். கடந்த வாரம் அவமதிக்கப்பட்ட அதே ஓபிஎஸ்ஸுக்கா இவ்வளவு பெரிய வரவேற்பு என்று கேட்கும் அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில்தான் ஓபிஎஸ் பயணத்திற்கு வரவேற்பு வருவதை எடப்பாடி பல்ஸ் பார்த்துவிட்டார் என்கிறார்கள். இந்த தென் மண்டல பயணம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் உணர்ந்துவிட்டார்.

முக்குலத்தோர்
முக்குலத்தோர் பிரிவு ஓபிஎஸ் பக்கம் சாய போவதை உணர்ந்துவிட்டார். இதன் காரணமாகவே ஓபிஎஸ் பயணத்திற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக எடப்பாடி தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்திற்கு பின் வேறு காரணங்கள் எதுவும் இல்லை. இப்படி கூட்டம் கூட்டினால்..என்னமோ ஏதோ என்று நினைத்துக்கொண்டு ஓபிஎஸ் ஓடோடி வருவார். அதனால்தான் இப்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஓபிஎஸ் பயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி இப்படி ஸ்மார்ட்டாக செயல்பட்டுள்ளார் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அதன்படியே இன்று ஓபிஎஸ் தென் மண்டல பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை திரும்புவது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications