கைலாசநாதன் தமிழ்நாட்டிற்கு வருகிறார்? என்னங்க சொல்றீங்க.. மோடி போடும் "மாஸ்டர்" பிளான்.. போச்சு
சென்னை: புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ள குனியில் கைலாசநாதன் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர். இவரை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் திட்டமும் மோடியிடம் இருப்பதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி டெல்லி அரசியலுக்கு போன பின் குஜராத்தில் ஆட்சியை கவனிக்க குனியில் கைலாசநாதனை மோடிதான் களமிறக்கினார்.

குனியில் கைலாசநாதன் ஓய்வுபெற்ற 1979 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார், இவர் தற்போது புதுச்சேரியின் லெப்டினன்ட் கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இதற்கு முன்பு 2013 முதல் 2014 வரை அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தலைமை முதன்மைச் செயலாளராக பணியாற்றினார். அதன்பிறகு, அவர் ஜூன் 30, 2024 வரை அதே பதவியில் பணியாற்றினார். மோடி இல்லாத போது.. குஜராத்தில் அரசை கவனிக்க இவரைதான் தனது லெப்ட் ஹேண்டாக மோடி அனுப்பி வைத்தார்.
இவர் கேரளாவில் பிறந்தாலும்.. தமிழ்நாட்டில்தான் வளர்ந்தார். அதனால் நன்றாக தமிழ் பேசுவார். தமிழ்நாடு அரசியலும் தெரியும். அவர் ஊட்டியில் வளர்ந்தார், அங்கு அவரது தந்தை தபால் துறையில் பணிபுரிந்தார். குனியில் கைலாசநாதன், செப்டம்பர் 1, 1981 இல் உதவி கலெக்டராக ஜூனியர் டைம்ஸ்கேலாக தனது பணியை தொடங்கினார். அவர் சுரேந்திரநகர் (1985) மற்றும் சூரத் (1987) கலெக்டராக பணியாற்றினார்.
குஜராத் பணிகள்: குஜராத் கடல்சார் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்துள்ளார். நகர்ப்புறத் துறையில், அவர் 1999 முதல் 2001 வரை அகமதாபாத்தின் முனிசிபல் கமிஷனராகவும் [2] குஜராத்தின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வீட்டுவசதித் துறையின் (யுடிடி) முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றினார். UDD இல் இருந்தபோது, அகமதாபாத்திற்கு பேருந்து விரைவான போக்குவரத்து திட்டத்தை உருவாக்கிய வழிகாட்டுதல் குழுவின் தலைவராக இருந்தார்.
மோடிக்கு நெருக்கம்: புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ள குனியில் கைலாசநாதன் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர். மோடி டெல்லி அரசியலுக்கு போன பின் குஜராத்தில் ஆட்சியை கவனிக்க குனியில் கைலாசநாதனை மோடிதான் களமிறங்கினார். இவர் இப்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்தாலும்.. வரும் நாட்களில் தமிழ்நாட்டின் ஆளுநராகவும் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் பிளான் இதுதான் என்றும் கூறப்படுகிறது. அதாவது 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இவரை உள்ளே கொண்டு வரும் திட்டங்கள் இருக்கலாம் என்கிறார்கள்.
சமீபத்தில் பல்வேறு ஆளுநர்கள் மாற்றப்பட்டனர். அதில் முக்கியமாக மகாராஷ்டிரா ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் நியமனம் ஜார்க்கண்ட், தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பொறுப்புகளை கவனித்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தேசிய அளவில் பாஜக ஆட்சியை காப்பாற்றவும், மாநில அளவில் ஆட்சி கவிழாமல் இருக்கவும் மகாராஷ்டிரா அரசியல் முக்கியம். அப்படி இருக்க அங்கே ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். தெலுங்கானா ஆளுநராக விஷ்ணு தேவ் வர்மா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மற்ற ஆளுநர்கள்: பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பஞ்சாப்பிற்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள லக்ஷ்மண் ஆச்சாரியாவிற்கு மணிப்பூர் மாநில ஆளுநர் பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் மாநில ஆளுநராக ஹரிபாவ் கிசன்ராவ் பக்தே நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சத்தீஸ்கர் மாநில ஆளுநராக ராமன் தேகா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சி எச் விஜயசங்கர் மேகாலய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள குலாப் சந்த் கட்டாரியாவிற்கு, சண்டிகர் துணை நிலை ஆளுநர் பொறுப்பும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். IAS அதிகாரியான கைலாசநாதன் மோடிக்கு மிகவும் நெருக்கம். மோடியுடன் மிக நெருக்கமாக பழகும் சிலரில் இவரும் ஒருவர். ஓம் பிரகாஷ் மாத்தூர் சிக்கிம் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சந்தோஷ் குமார் கங்குவர் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications