என்ன நடக்குது.. அலறும் அதிமுக! மீண்டும் டெல்லிக்கு போகும் செங்கோட்டையன்? வீட்டில் குவிந்த தலைகள்
சென்னை: கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் இல்லத்தில் நிர்வாகிகள் குவிய தொடங்கி உள்ளனர். அவர் மீண்டும் டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் மீண்டும் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலால், வழக்கத்தை விட அதிக அளவிலான நிர்வாகிகள் அவரது வீட்டிற்கு வந்து செல்கின்றனர். அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில்.. செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கே பெரிய தலை ஒருவரை.. அதன்பின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்ததாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சராக இருக்கும் இன்னொருவரையும் செங்கோட்டையன் சந்தித்ததாக கூறப்படுகிறது.
எடப்பாடி - அமித் ஷா சந்திப்பு காரணமாக தனக்கு ஏற்பட்ட "சில நெருக்கடி" தொடர்பாக செங்கோட்டையன் அந்த டெல்லி புள்ளியிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு ஏற்பட்ட சில பிரச்சனைகள் பற்றி இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்த சந்திப்பிற்கு பின் என்ன நடக்கும்.. என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எடப்பாடி டெல்லி பயணம்
சமீபத்தில்தான் டெல்லி பயணம் மூலம் அதிமுக - பாஜக கூட்டணியை அதிகாரபூர்வமற்ற முறையில் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில்.. செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சமீபத்தில்தான் தனக்கு நெருக்கமானவர்களுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஹெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் ஆலோசனை நடத்தியிருக்கிறார் செங்கோட்டையன். அந்த ஆலோசனையில், "திமுகவுக்கு வந்திடுங்களேன். உங்களுக்கான அங்கீகாரத்தை திமுக உங்களுக்குக் கொடுக்கும். நீங்கள் வந்தால் எனக்கு ரொம்ப சந்தோசம்னு என்னிடம் சொன்னார் முதல்வர்.
ஆனால், இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை. காலம் எப்படி நகர்கிறதின்னு பார்ப்போம்னு மட்டும் சொல்லிட்டு வந்தேன். திமுகவுக்கு போனால் அமைச்சர் பதவி கிடைத்தாலும் கிடைக்கக்கூடும். ஆனா, சசிகலாவும் தினகரனும் 'தேர்தலுக்குள் அதிமுக நம் கைக்கு வந்துடும். நீங்கதான் பொதுச்செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர். அதனால் எந்த அரசியல் முடிவையும் எடுக்காதீர்கள்னு சொல்றாங்க. நானும், அது தான் சரின்னு நினைக்கிறேன்" என்று செங்கோட்டையன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அதனைக்கேட்ட அவரது ஆதரவாளர்கள், "நீங்க நினைப்பது சரிதான் அண்ணே. அதிமுகவில் இருந்து கொண்டு கட்சித் தலைமைக்கு நீங்கள் வரவேண்டும். அதுதான் சரி. கோர்ட்டில் எடப்பாடி தலைமைக்கு எதிராகப் போடப்பட்ட சிவில் வழக்கின் போக்கினை அறிந்து, அது நமக்கு எதிராக இருந்தால் மாற்றி யோசிக்கலாம் அண்ணே"என்று சொல்லியிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, அதிமுகவிலிருந்து விலக முடிவு செய்து, ராஜினாமா கடிதத்தை செங்கோட்டையன் தயாரித்ததாகவும், ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பி வைக்காமல் கிடப்பில் வைத்து விட்டார் என்றும் ஒரு தகவல் செங்கோட்டையன் தரப்பில் பரவியுள்ளது.
மீண்டும் டெல்லி செல்லும் எடப்பாடி
கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் இல்லத்தில் நிர்வாகிகள் குவிய தொடங்கி உள்ளனர். அவர் மீண்டும் டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் மீண்டும் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலால், வழக்கத்தை விட அதிக அளவிலான நிர்வாகிகள் அவரது வீட்டிற்கு வந்து செல்கின்றனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications