உதயசூரியன் வெளிச்சம் பாயாத "தெற்கு".. சட்டசபை தேர்தல்களில் வளைத்து போட்ட அதிமுக.. முழு ரிப்போர்ட்
தெற்கு மண்டலத்தை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: இன்று நடக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவில், தென்மண்டலங்களில் பிரதானமாக வெற்றி பெற போவது அதிமுகவா? திமுகவா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.
எந்த தேர்தல் நடந்தாலும் சரி, எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவை கொங்கு எப்போதுமே கைவிட்டதில்லை.. ஆனால் தெற்கு மண்டலம் அப்படி வெற்றியை தந்துவிடும் என்று உறுதியாக சொல்ல முடிவதில்லை.
இது தேர்தலுக்கு தேர்தல் அரசியல் களம் மாறக்கூடியது.. தென் மண்டலங்களில் உள்ள மாவட்டங்கள் எவை, இதுவரை நடந்த சட்டசபை தேர்தல்களில், அதிமுகவுக்கு இந்த மண்டலம் எந்த அளவுக்கு சாதகமாக இருந்து வந்துள்ளதை சுருக்கமாக காண்போம்.

10 மாவட்டங்கள்
திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கியதுதான் தெற்கு மண்டலம்.. இந்த மண்டலத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் திமுகவும், வேறு சில மாவட்டங்களில் அதிமுகவும் எப்போதுமே சரிக்குசரி சமமான பலத்துடன் கடந்த காலங்களில் இருந்திருக்கின்றன.. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை எடுத்து கொண்டால், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர் ஆகிய ஏழு தொகுதிகள் இங்கு இருக்கின்றன.

ஒட்டன்சத்திரம்
ஒட்டன்சத்திரம் தொகுதியை 8 முறையும், ஆத்தூர் தொகுதியை 7 முறையும், பழனியை 5 முறையும் திமுக கைப்பற்றியிருக்கிறது. அதேபோல், அதிமுகவானது, வேடசந்தூரில் 8 முறையும், ஆத்தூர், நிலக்கோட்டை தனி தொகுதியில் தலா 5 முறையும் வென்றிருக்கிறது... அதாவது, இந்த 7 தொகுதிகளில் திமுக, அதிமுக கட்சிகள் ஏறத்தாழ சமபலத்துடேனேயே கடந்த காலங்களில் இருந்திருக்கின்றன..

சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன... காரைக்குடி தொகுதியை அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும் கைப்பற்றியிருக்கின்றன. பாஜக ஒரே ஒரு முறை கைப்பற்றியிருக்கிறது... அதேபோல், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக 7 முறையும், திமுக 3 முறையும் வெற்றி வாகை சூடியிருக்கின்றன.. சிவகங்கையில் திமுக 4 முறை, மானாமதுரையில் அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.. இந்த 2 கட்சிகள் இல்லாமல் சிவகங்கையில் காங்கிரஸ் 2 முறையும், சிபிஐ 2 முறையும் வென்றெடுத்துள்ளன..

மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தில், மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான் (தனி), மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கி உள்ளன.. இதில், மதுரை வடக்கு, மதுரை தெற்கு ஆகிய இரண்டு தொகுதிகள் 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த 2 தொகுதிகளிலும் 2011, 2016ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மதுரை வடக்கில் அதிமுக 2 முறையும், மதுரை தெற்கில் அதிமுக, சிபிஎம் கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

திருப்பரன்றம்
மற்ற தொகுதிகளை பொறுத்தவரை, மேலூர், சோழவந்தானில் அதிமுக தலா 5 முறையும் வென்றிருக்கிறது. திமுகவை பொறுத்தவரை மேலூரில் இதுவரை ஒருமுறைகூட வெற்றி பெறவில்லை... அதேபோல், திருப்பரங்குன்றத்தில் 7 முறையும், திருமங்கலத்தில் 5 முறையும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது... மதுரை மேற்கிலும் அதிமுகவின் கையே ஓங்கியிருக்கிறது. அங்கு அந்த கட்சி 6 முறை வெற்றி பெற்றுள்ளது... திமுகவோ 3 முறை வென்றுள்ளது.. மதுரை மாவட்டத்தில் திமுகவை பொறுத்தவரை மதுரை மத்தியிலும், சோழவந்தானிலும் மட்டுமே அதிகபட்சமாக 5 முறை வென்றுள்ளது. ஆக மொத்தம் மதுரை மாவட்டத்தில் திமுகவின் வெற்றி மிக குறைவு என்றே சொல்லாம்..

தேனி மாவட்டம்
தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூர், கம்பம் என நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன. மாவட்டத்தில் அதிமுகவின் செல்வாக்கு அசுர பலத்துடன் கடந்த காலங்களில் இருந்திருக்கிறது... பெரியகுளம் மற்றும் போடிநாயக்க்னூரை தலா 7 முறை கைப்பற்றிய அதிமுக, ஆண்டிபட்டியை 8 முறையும் கம்பத்தை 4 முறையும் வென்றுள்ளது... திமுகவைப் பொறுத்தவரை போடி மற்றும் கம்பத்தை தலா 3 முறையும், பெரியகுளத்தை 4 முறையும் கைப்பற்றியுள்ளது. அதாவது தேனி மாவட்டத்தில், திமுகவுக்கு சாதகமாக இருந்ததில்லை.

விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.. விருதுநகர் தொகுதி தவிர்த்து மற்ற தொகுதிகளில் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது.. ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டையில் தலா 6 முறை வென்றிருக்கும் அதிமுக ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி தொகுதிகளில் தலா 5 முறை வென்றிருக்கிறது.

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன... பரமக்குடியில் அதிமுக 7 முறையும், திமுக 3 முறையும், திருவாடானையில் திமுக, அதிமுக தலா இரண்டு முறையும் வென்றுள்ளன. ஆனால், அந்த தொகுதியில், காங்கிரஸ் கட்சி 5 முறை தனது கையை உயர்த்தியுள்ளது. ராமநாதபுரத்தில் அதிமுக 6 முறையும், திமுக 4 முறையும், முதுகுளத்தூரில் 2 கட்சிகளும் தலா 2 முறையும் வென்றிருக்கின்றன.

விளாத்திகுளம்
தூத்துக்குடி மாவட்டத்தில், விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்டுள்ளது. விளாத்திகுளத்தில் அதிமுக 8 முறையும், திமுக 4 முறையும் வென்றுள்ளன. 2 கட்சிகளும் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் தலா 6 முறை வெற்றி பெற்றிருக்கின்றன.ஸ்ரீவைகுண்டத்தில், 5 முறையும், ஒட்டப்பிடாரத்தில் 4 முறையும் வென்றிருக்கும் அதிமுக கட்சியானது கோவில்பட்டியில் 4 முறை வென்றிருக்கிறது. கோவில்பட்டியில் திமுக ஒருமுறைகூட இதுவரை வென்றதில்லை.

கடையநல்லூர்
தென்காசி மாவட்டத்தில், சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன. இந்த மாவட்டத்திலும் அதிமுகவே அதிக முறை வென்றிருக்கிறது.. சங்கரன்கோவிலில் அந்தக் கட்சி 8 முறையும், கடையநல்லூரில் 5 முறையும், தென்காசி மற்றும் ஆலங்குளத்தில் தலா 4 முறையும் வென்றுள்ளது.. வாசுதேவநல்லூரில் திமுக, அதிமுக 2 கட்சிகளும் தலா 2 முறை வென்றுள்ளன. இங்கேயும் திமுகவுக்கு சாதகமான சூழல் இதுவரை இருந்தது அபரிமிதமாக இல்லை.

திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன.. இந்த மாவட்டத்தில் திமுகவும், அதிமுகவும் ஏறத்தாழ ஒரே அளவு பலத்துடன் கடந்த தேர்தல்களில் இருந்திருக்கின்றன.. திருநெல்வேலி தொகுதியை 2 கட்சிகளும் தலா 2 முறை கைப்பற்றியுள்ள நிலையில், அம்பாசமுத்திரத்தை அதிமுக 5 முறை வென்றுள்ளது.. அதேபோல், நாங்குநேரியில், அதிமுக 5 முறையும், பாளையங்கோட்டையில் திமுக 7 முறையும் வெற்றி கண்டுள்ளன. ராதாபுரத்தில் 2 கட்சிகளும் தலா 2 முறை வென்றுள்ளன.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன...இங்கு திமுக அதிமுகவைவிட காங்கிரஸின் கை பலமாக கடந்த காலங்களில் இருந்துள்ளது.. கன்னியாகுமரி தொகுதியை அதிமுக 6 முறையும், திமுக 5 முறையும் கைப்பற்றியிருக்கின்றன...

திமுக எதிர்பார்ப்பு
அதேபோல், நாகர்கோவிலில் திமுக 4, அதிமுக 3, காங் 2 முறை வென்றிருக்கின்றன. ஆனால், கிள்ளியூரில் திமுகவும் அதிமுகவும் ஒருமுறைகூட வெல்லவில்லை. ஆக மொத்தம் தென்மண்டலங்களில் திமுகவை காட்டிலும் அதிமுகவே அதிக முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த முறை யாருக்கு வெற்றி கிடைக்க போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்புதான்.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்!











Click it and Unblock the Notifications