சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் விரிசல் விழுமா அதிமுகவில்.. ஓங்கும் ஓபிஎஸ் கை.. பெரும் அதிர்ச்சியில் எடப்பாடியார் தரப்பு!

அதிமுகவுக்குள் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே விரிசல் அதிகமாகும் என தெரிகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓ.பி.எஸ். மகனுக்கு அமைச்சர் பதவி... அதிமுகவில் விரிசல் ஏற்படுமா?- வீடியோ

    சென்னை: ஏற்கனவே உடைஞ்சது இல்லாமல், அதிமுக மேலும் ரெண்டாக உடைஞ்சாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. அப்படி இருக்கு இப்போ நிலைமை!

    ஏற்கனவே ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பனிப்போர் தொடர்ந்து வந்தது. தேர்தலில் சீட் வழங்கும் விவகாரத்திலும் இவர்களுக்குள் இணக்கம் இல்லாமல் போனது.

    ஒருகட்டத்தில், மகனை வாரணாசிக்கு அழைத்து சென்று, கட்சியில் முன்பு போல தனக்கு மரியாதை இல்லை என்று ஓபிஎஸ் புலம்பியதாகவும் சொல்லப்பட்டது. அப்போதே மகனுக்கு மத்திய அமைச்சர் சீட் கன்பார்ம் பண்ணிவிட்டார் ஓபிஎஸ் என்று தகவல்கள் கசிந்தன.

    4.30 மணிக்கு பிரதமருடன் மீட்டிங்... இவர்கள்தான் அமைச்சராகிறார்கள்! 4.30 மணிக்கு பிரதமருடன் மீட்டிங்... இவர்கள்தான் அமைச்சராகிறார்கள்!

     சீனியர் வைத்திலிங்கம்

    சீனியர் வைத்திலிங்கம்

    எனினும் கட்சிக்குள் ஏராளமான சிக்கல்கள் எழ ஆரம்பித்தன. இப்போதான் ஜெயித்து வந்திருக்கிறார் ரவீந்திரநாத், அதற்குள் எப்படி அமைச்சர் பதவி என்று சலசலப்பு எழுந்தது. ஒரு கட்டத்தில் சீனியர் உறுப்பினர் வைத்திலிங்கம், "இவ்வளவு நாளா எம்பியாக இருக்கும் எனக்கு மத்திய அமைச்சர் பதவி இல்லையா?" என்று சீறினார். இதையடுத்து முதல்வரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து நெருக்கடி தந்தார்.

     தேனி தொகுதி

    தேனி தொகுதி

    எல்லாவற்றுக்கும் மேலாக, ஓபிஎஸ் மீது எல்லாருக்குமே ஒட்டுமொத்த கோபம் உள்ளது. தேனி தொகுதிக்கு முதல்வரை அழைத்தது முதல், வாரணாசி சென்றதுவரை அவரது செயல்பாடுகள் யாருக்குமே பிடிபடாமல் இருந்தது. மகனுக்கு எப்படியும் சீட் கேட்பவர், கண்டிப்பாக ராஜ்ய சபா சீட் பற்றி ஓபிஎஸ் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஒரு விஷயத்தையே ஓபிஎஸ் பாஜக மேலிடத்தில் சொல்லவில்லை போல தெரிகிறது. இதனால்தான் அவர் மீது ஏக கடுப்பில் உள்ளனர் அதிமுகவின் முக்கிய புள்ளிகள்.

     தம்பிதுரை

    தம்பிதுரை

    இப்போது மகனுக்கு சீட்டும் உறுதியாகிவிட்டதால், இன்னும் அப்செட்டில் உள்ளனர். இபிஎஸ்-ஐ விட ஓபிஎஸ்-ன் பேச்சு டெல்லி வட்டாரத்தில் எடுபட்டுள்ளதாகவே தெரிகிறது. அதனால், தம்பிதுரை, மைத்ரேயன் இவர்களில் யாரையாவது ஒருத்தரை எப்படியாவது ராஜ்ய சபாவுக்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு கண்டிப்பாக முதல்வர் வருவார் என்றே தெரிகிறது.

    முயற்சி

    முயற்சி

    ஏனெனில் ஓபிஎஸ்-ன் செல்வாக்கு இனி தேசிய அளவில் விரிவடையவே செய்யும். மேலும் டெல்லியில் அதிமுகவுக்கு எதிராக என்ன நடக்கிறது என்று கூட தெரிந்து கொள்ள முடியாத நிலை எடப்பாடிக்கு ஏற்பட்டுவிடும் என்பதாலேயே நம்பிக்கையான ஒருவரை அனுப்ப முதல்வர் முயற்சி செய்யக்கூடும்.

     அதிமுக என்னாகும்?

    அதிமுக என்னாகும்?

    அதே சமயம், இப்படி மகனை அமைச்சராக்கத்தான், சசிகலா குடும்பத்தை அதிமுகவிலிருந்து காய் நகர்த்தி ஓபிஎஸ் காலி செய்தாரா என்று அதிமுகவில் குரல் எழ ஆரம்பித்துள்ளது. அதனால் ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சரானது, அதிமுகவில் பெரிய புயலை கிளப்ப போகிறதா என்று தெரியவில்லை. அதே சமயத்தில் எடப்பாடி அதிமுக ஆட்சியை காப்பாற்ற யாருடனாவது இணக்கமாக செல்ல தயாராகிறாரா என்றும் புரியவில்லை. ஆனால் அதிமுக, அதிமுகவாக மட்டும் இருக்காது என்றே தெரிகிறது.

    English summary
    OP Ravindranath is said to be in the Union Cabinet. In the meantime, there seems to be an internal conflict in AIADMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X