அந்த "சம்பவம்".. அமித்ஷா வர போகிறாராம்.. ஆட்சி கவிழ போகிறதாம்.. செம நெருக்கடியில் "சாமி"
புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி கவிழ போவதாக கூறப்படுகிறது
சென்னை: புதுச்சேரி அரசியலில் புயல் அடிக்க ஆரம்பித்துவிட்டது.. அநேகமாக ஆட்சி கவிழும் என்ற பேச்சும் எழுந்துள்ளதையடுத்து, பாஜக படுபிஸியாகிவிட்டது..!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி இருக்கிறது. என்.ஆர். காங்கிரசின் தலைவர் ரெங்கசாமி முதலமைச்சராக இருக்கிறார். உள்துறை அமைச்சராக இருக்கிறார் பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம்.
புதுச்சேரிக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் கைப்பற்றி கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது. மேலும், 3 நியமன எம்.எல்.ஏ.க்களை பாஜகவே நியமித்துக்கொண்டது.

அமித்ஷா - தமிழிசை
ஆட்சி அமைப்பதில் தொடங்கி இப்போது வரை ரெங்கசாமிக்கும் பாஜகவுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. வாரிய பதவிகளை நிரப்புவதில் பாஜகவுக்கே எதிராகவே இருக்கிறார் ரெங்கசாமி. ஒரு இடம் கூட பாஜகவுக்கு விட்டுத்தர முடியாது என பாஜக தலைமைக்கு கட்-அண்ட் ரைட்டாக தெரிவித்துவிட்டாராம். துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கும் முதல்வர் ரெங்கசாமிக்கும் இடையே நல்ல உறவுகள் இல்லை. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த தமிழிசை, புதுச்சேரியின் ஆட்சி நிலைமை குறித்து பல காண்ட்ராவெர்சி தகவல்களை தெரிவித்துவிட்டு வந்தார்.

ரகசியம்
இந்த சந்திப்புக்கு பிறகு உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு சில உத்தரவுகளை டெல்லி பிறப்பித்துள்ளது. அதன்படி, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலரிடம் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ரெங்கசாமிக்கு எதிராக 4 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியடைந்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில் அவர்களிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சில எதிர்பார்ப்புகள் இறுதி செய்யப்படாததால் பாஜகவின் திட்டம் முழுமையாகவில்லை.

ரெங்கசாமி
அனேகமாக எதிர்பார்ப்புகளை பாஜக தலைமை ஏற்றுக்கொள்ளும் என்கிறார்கள் பாஜகவினர். என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் ரெங்கசாமி தலைமையிலான புதுச்சேரி ஆட்சியை கவிழ்ப்பது உறுதியாகும். புதிய ஆட்சியை பாஜக அமைக்கும் என்பதே தற்போது கிடைக்கிற ரகசிய தகவல்கள். வருகிற 24-ந்தேதி புதுச்சேரிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதாக திட்டமிடப்பட்டிருக்கிறது. அவர் புதுச்சேரி வருகிறபோது, ஆட்சி கவிழ்ப்புக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும் என்கிறார்கள் பாஜகவினர்.

நமச்சிவாயம்
ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாஜக ஆட்சி அமைத்தால் அதன் முதலமைச்சராக நமச்சிவாயம் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், நமச்சிவாயத்திற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.க்கள் சிலர் வரிந்து கட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.. குறிப்பாக, சபாநாயகராக இருக்கும் செல்வமும் முதல்வர் கோதாவில் குதித்திருக்கிறாராம். ஆக மொத்தம் புதுச்சேரி அரசியல் களை கட்ட போகிறது..!












Click it and Unblock the Notifications