சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சிக்ஸர்".. திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறாரா?.. மாறும் கோலம்.. போடும் கணக்கு.. செம

திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பது குறித்து திருமாவளவன் உறுதிபடுத்தி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: வரப்போகும் எம்பி தேர்தலுக்கு தமிழக பாஜக இப்போதே தயாராகி உள்ளது.. அதற்காக 2 விதமான அதிரடிகளையும் கையில் எடுத்துள்ளது.. மற்றொரு புறம், வரப்போகும் எம்பி தேர்தலில் விசிக கூட்டணி குறித்து திருமாவளவன் தன் கருத்தை தெரிவித்துள்ளார்..!

பாஜக மேலிடத்தை பொறுத்தவரை, "திமுகதான் நம்பர் ஒன் எதிரி" என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. அதனால்தான் தமிழக அரசை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்தினால், இதற்கு பாஜக தலைமை முழு ஆதரவு தரும்" என்று பச்சை கொடி காட்டி நம்பிக்கையை ஏற்கனவே தந்தாராம் அமித்ஷா...

இப்போது விஷயம் என்னவென்றால், எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், பாஜக சில புதிய வியூகங்களை கணக்கு போட்டு வருகிறது..

உப்புக்கு கூட ஆகாத விஷயம்! “அவர்” உடனடியாக பதவி விலகனும்! போட்டு தாக்கிய திருமாவளவன்! என்ன காரணம்?உப்புக்கு கூட ஆகாத விஷயம்! “அவர்” உடனடியாக பதவி விலகனும்! போட்டு தாக்கிய திருமாவளவன்! என்ன காரணம்?

திருமா கோபம்

திருமா கோபம்

அதன்படி ஒன்றுதான், வரப்போகும் எம்பி தேர்தலில் திமுக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியை கையில் எடுக்க போகிறதாம்.. அதாவது, திமுகவின் கூட்டணியை பலவீனப்படுத்தி, அதன்மூலம் பாஜக கூட்டணியை வலுப்படுத்துவது என்பதுதான் அந்த பிளான்.. இப்படி ஒரு திட்டத்தை கடந்த சட்டசபை தேர்தலின்போதே பாஜக எதிர்பார்த்தது.. திமுக எப்படியும் குறைந்த சீட்களை, அதன் கூட்டணிக்கு ஒதுக்கவே செய்யும், அதை நிச்சயம் கூட்டணி கட்சிகள் ஏற்காது, உடனே திமுகவுடன் கூட்டணியை முறித்து கொள்வார்கள் என்று நம்பியது.. ஆனால், பாஜகவின் இந்த நம்பிக்கையை நொறுக்கி தள்ளியதே திருமாவளவன்தான்..

திருமாவளவன்

திருமாவளவன்

இதை பற்றி அப்போதே செய்தியாளர்கள்கூட திருமாவிடம் கேட்டார்கள்.. அதற்கு அவர், "இந்த திருமாவளவனை சீண்டினால் ஆவேசப்படுவார், ஆத்திரப்படுவார், கூட்டணியை விட்டு வெளியே வருவார்.. இதனால் கூட்டணி சின்னாபின்னமாகிவிடும் என்று பலர் நினைத்தார்கள்.. ஆனால், நான்தான் கூட்டணியில் முதல் ஆளாக போய் கையெழுத்து போட்டேன்.. சீட்டுக்கள் எண்ணிக்கை ஆறா அல்லது பத்தா என்பது பிரச்சனை இல்லை.. இந்த நாட்டில் பாஜக இங்கு வரணுமா, வரவேண்டாமா என்பதுதான் பிரச்சனை" என்று சீறியிருந்தார்.

எம்பி சீட்

எம்பி சீட்

திருமாவின் கூட்டணி பிளானும், அவர் மேற்கொண்ட பிரச்சாரங்களும்தான், திமுக இன்று ஆட்சியை பிடிக்கவே முக்கிய காரணமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.. இப்போதும் பாஜக அதே பிளானை கையில் எடுத்துள்ளது.. போதாக்குறைக்கு, திமுக சமீபகாலமாகவே பாஜகவின் அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் தென்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் என கூட்டணி தலைவர்கள், திமுகவை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் மென்று விழுங்கி கொண்டிருக்கின்றன.. இதைதான் அதிமுக & பாஜக சரியாக பயன்படுத்தி காய் நகர்த்த துவங்கி உள்ளன..

காங்கிரஸ்

காங்கிரஸ்

ஏற்கனவே, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள், பாஜகவுக்கு எதிரான மனப்பான்மையில் இருந்தாலும், அதிமுகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தையை மறைமுகமாக துவங்கிவிட்டதாக செய்திகள் கசிந்தன. இந்த லிஸ்ட்டில் திருமாவளவனும் இருக்கிறாரா என்ற சந்தேகம் வலுத்து வந்தது.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு தனியார் டிவிக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், கூட்டணி குறித்து தெளிவுப்படுத்தி உள்ளார் திருமாவளவன்.

சங்பரிவார்

சங்பரிவார்

"2024 தேர்தலில், கூட்டணியில் இருந்து பாஜக விலகும் பட்சத்தில், அதிமுகவுடன் நீங்கள் கூட்டணி வைப்பீர்களா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு திருமாளவன், "நாங்க ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறோம்.. தமிழ்நாட்டை குறி வைத்திருக்கிற சங் பரிவார்களையும், அகில இந்திய அளவில் சங்பரிவாரின் ஆதிக்கத்தையும் வீழ்த்துவது இன்றைக்கு உடனடி தேவையாக இருக்கிறது..

கன்பார்ம்

கன்பார்ம்

எனவே இந்த அரசு மீண்டும் 2024-ல் உருவாகிவிடக்கூடாது.. அதை தடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஜனநாயக சக்திக்கும் இருக்கிறது.. அதனால், இடதுசாரிகள், காங்கிரஸ் அகில இந்திய அளவில் ஒருங்கிணையும் தேவை இருக்கிறது.. அதேபோல எல்லா மாநில கட்சிகளம் ஒருங்கிணைய வேண்டிய தேவை இருக்கிறது.. அது விசிகவின் செயல்திட்டமாகவும் அமைந்துள்ளது.. எனவே, திமுக, காங்கிரஸ், விசிக என்ற இந்த அணிகள்தான், வகுத்தாக வேண்டும். தொடர வேண்டும் என்பதே எங்கள் திட்டம்" என்று திட்டவட்டமாக கூட்டணியை தெளிவுபடுத்தி உள்ளார் தொல். திருமாவளவன்.

கடவுள் நம்பிக்கை

கடவுள் நம்பிக்கை

தொடர்ந்து திருமாவளவனிடம், இந்து மதக் கடவுளையே அதிகம் பேசுகிறீர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளதே என்று கேட்கப்பட்டது.. அதற்கு திருமாவளவன், "இந்து மதத்தை நான் புண்படுத்தவில்லை.. யாருடைய நம்பிக்கையையும் குறைக்கவில்லை.. அப்படி குறைக்கவும் கூடாது.. என் அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது..

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

நான் வீட்டுக்கு போனால், எனக்கு திருநீறு வைத்து விடுவார்கள்.. நான் வேண்டாம் என்று தடுக்க மாட்டேன்.. உறவினர்கள் கும்பாபிஷேகம் நடத்தினார்கள்.. என்னை அழைத்தார்கள்.. நான் சென்றேன்.. தலையில் கலசம் வைத்தார்கள்.. அவர்களையும் நான் தடுக்கவில்லை.. பக்தி அடிப்படையில் இதை செய்யவில்லை.. ஆனால் அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தக்கூடாது என்பதற்காக செய்தேன்.. நுபுர்ஷர்மா விவகாரம் அப்படி இல்லை.. விமர்சனமாக மட்டுமல்லாமல், ஒரு வெறுப்பரசியலை வளர்க்கிறார்கள்.. அதுதான் பிரச்சனை

English summary
Is thirumavalan leaving the DMK alliance and With whom is vck going to form an alliance in the 2024 MP electionதமிழகத்தில் 10 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்றாராம் அமித்ஷா
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X