சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விரைவில் அமைச்சரவையில் இடம்பெறப்போகும் உதயநிதி.. கடைசி படம் இதுதான்! ஸ்டாலின் போட்டுக் கொடுத்த ரூட்!

Google Oneindia Tamil News

சென்னை : உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது தொடர்பாக அவ்வப்போது பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி உறுதி என்கிற தகவல்கள் அறிவாலய வட்டாரத்தில் உலவி வருகின்றன.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் பலரும் வலியுறுத்திய நிலையிலும், முதல்வர் ஸ்டாலின், அதில் அவசரம் காட்டாமல் இருந்து வந்தார். உதயநிதி ஸ்டாலின், சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பதால், இப்போது அமைச்சர் பதவி தருவது சரியாக இருக்காது என முதல்வர் ஸ்டாலின் யோசித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் தான், உதயநிதி ஸ்டாலின், தனது நடிப்பு பயணத்தை முடிவுக்குக் கொண்டு வர இருப்பதாக கூறி இருக்கிறார். இதன் மூலம், கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தை முடித்த கையோடு, கேபினட்டில் இடம்பெறுவார் என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.

லைஃப் லைன் வேணும்.. சட்டென கேட்ட உதயநிதி.. 10 வருஷமா எதுவும் மாறவில்லை.. கலகலத்த கிருத்திகா! லைஃப் லைன் வேணும்.. சட்டென கேட்ட உதயநிதி.. 10 வருஷமா எதுவும் மாறவில்லை.. கலகலத்த கிருத்திகா!

அமைச்சர் பதவி

அமைச்சர் பதவி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அவருக்கு ஆட்சி அமைக்கும்போது அமைச்சரவையில் இடம் வழங்கப்படாத நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று அமைச்சர்கள், திமுக வட்டாரத்தில் கோரிக்கை எழுந்தபடி உள்ளது. உதயநிதி அமைச்சர் பதவி ஏற்க வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் பலரும் தங்கள் மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினர். இதையடுத்து, தலைமைக்கு அழுத்தம் கொடுத்து தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என உதயநிதியே கேட்டுக்கொண்டார்.

 6 மாதங்களுக்கு முன்பே

6 மாதங்களுக்கு முன்பே

உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாவிட்டாலும், தி.மு.க நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, அரசு சார்பில் நடைபெற்ற விழாக்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவடைந்த தருணத்திலேயே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், முதல்வர் ஸ்டாலின், இந்த விஷயத்தில் அவசரம் காட்டாமல் தள்ளி வைத்தார். உதயநிதி சினிமாவில் தொடர்ந்து நடித்து வருவதால், அமைச்சர் பதவி தற்போது வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.

முக்கிய பொறுப்புகளில்

முக்கிய பொறுப்புகளில்

திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு கடந்த 2019ஆம் ஆண்டில்தான் இளைஞரணி செயலாளராக பொறுப்பு கொடுக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அந்தத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட தீவிர பிரச்சாரத்திற்கு பரிசாக இந்த பதவி கொடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பிருந்தே உதயநிதி, கட்சிக்குள் தனது ஆதரவுப் படையைக் கட்டமைக்கத் தொடங்கிவிட்டார். சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளிலும் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள் முக்கியப் பொறுப்புகளுக்கு வந்துள்ளனர்.

தலைமை முடிவு

தலைமை முடிவு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலினிடம், உங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதா என கேள்வி எழுப்பியதற்கு அவர், 'தலைமை முடிவு எடுக்கும்' என்று பதிலளித்து இருந்தார். இதனால், உதயநிதி ஸ்டாலின் எந்த நேரத்திலும் அமைச்சரவையில் இடம் பிடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் நிலவி வருகிறது. கட்சித் தலைமையும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படுவதாக பரவும் தகவல்களுக்கு எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறது. இதனால், உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கும் விருப்பம் தலைமையிடமும் இருப்பது தெளிவானது.

 3 படங்கள்

3 படங்கள்

இதற்கிடையே, உதயநிதி ஸ்டாலின் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருவதால் தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்குவதில் இழுபறி நீடிப்பதாகவும் ஒரு தகவல் உலவி வந்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி இருக்கும் 'கலகத் தலைவன்' படம் வரும் 18-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

கடைசி படம்

கடைசி படம்

கலகத் தலைவன் ரிலீஸையொட்டி, ஊடகங்களுக்கு படம் குறித்து பேட்டி அளித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அதன்படி சமீபத்தில் அளித்துள்ள பேட்டிகளில், கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் படம் தான் தனது சினிமா கேரியரில் கடைசி படமாக இருக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறி வருகிறார். மாமன்னன் படத்துடனே நடிப்பதை விட்டுவிட நினைத்ததாகவும், கமல்ஹாசன் கேட்டுக்கொண்டதாலேயே மேலும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் உதயநிதி.

முழு நேர அரசியல்

முழு நேர அரசியல்

தொகுதிப் பணிகள், அரசியல் வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, நடிப்பில் இருந்து விலக உதயநிதி முடிவெடுத்துள்ளாராம். அரசியல் முழு நேர சேவையாற்றவேண்டிய பணி என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக நடிப்பை விட உள்ளதாக தெரிவித்துள்ளார் உதயநிதி. தனது அம்மா துர்கா ஸ்டாலின், தான் சினிமாவை விட்டுவிட்டு முழுநேர அரசியலுக்கு வரவேண்டும் என்று பெரிதும் விரும்புவதாகவும் பேட்டியில் தெரிவித்துள்ளார் உதயநிதி.

அமைச்சரவையில் இடம்

அமைச்சரவையில் இடம்

முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு முழுக்க சூறாவளி பயணங்கள் மேற்கொண்டு, திமுகவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவைப் பெருக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளாராம். சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டால் அரசியலில் முழு கவனம் செலுத்த முடியும், அமைச்சரவையிலும் கொண்டு வந்துவிடலாம் என ஸ்டாலின் தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதை ஏற்றுக்கொண்டே, உதயநிதி நடிப்பைக் கைவிட முடிவெடுத்திருக்கிறாராம்.

சில மாதங்களில்

சில மாதங்களில்

உதயநிதி தனது சினிமா கேரியரில் கடைசி படமாக கமல்ஹாசன் தயாரிக்கும் படம் இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார். அந்தப் படம் முடிந்த கையோடு அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதோடு, தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் வகையில், கட்சியில் முக்கியமான பணிகளும் வழங்கப்படும் எனத் தெரிகிறது. நடிப்பை விட்டுவிட்டு அமைச்சர் ஆனாலும், தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் பேனரில் படங்களை தயாரிப்பதும், வெளியிடுவதும் தொடரும் என்கிறார்கள்.

English summary
There are reports in dmk circles that Udhayanidhi Stalin will be appointed as a minister in few months. Udayanidhi Stalin has announced that he is going to end his acting career. Sources say that Udhayanidhi will feature in the cabinet after completing the film produced by Kamal Haasan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X