Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எலும்பும் தோலுமாய்.. விஜயகாந்த் நாளைக்கு கோயம்பேடு வரப்போறாராமே.. திடீர் கோரிக்கை.. உருகிய துரை வைகோ

விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, மதிமுக துரைவைகோ பிரேமலதாவிடம் வாழ்த்து சொன்னார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று திடீரென தேமுதிக ஆபீசுக்கு, மதிமுகவின் துரைவைகோ வந்திருந்தார்.. இதையடுத்து, கோயம்பேட்டில் பரபரப்பு பற்றிக் கொண்டுவிட்டது.. என்ன காரணம்?

தேமுதிகவின் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 70வது பிறந்த நாள், நாளைய தினம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.

இதை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகத்தில், பிரேமலதா விஜயகாந்தை, மதிமுகவின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்..

இன்னொரு ஸ்வீட் நியூசும் இந்த சந்திப்பில் உள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 56 வருட கால அரசியல் பயணம் பற்றிய, டாக்குமெண்ட் படடம் வெளியிடப் போகிறார்கள்..

 துரை வைகோ

துரை வைகோ

இந்த நிகழ்ச்சிக்கும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோரை அழைக்கவும் துரை வைகோ, வந்திருந்தார்.. துரை வைகோ வந்தசமயம், பிரேமலதா தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ரத்ததான முகாம் நடந்து கொண்டிருந்தது.. துணை பொதுச்செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.. அப்போது அங்கு வந்த துரைவைகோ, ஆவணப் பட வெளியீட்டுக்கு அழைப்பிதழை, பிரேமலதா, சுதீஷிடம் வழங்கினார்.. இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ சொன்னதாவது:

Recommended Video

    Akila Exclusive | Simbu முதல் Vijayakanth வரை நான்தான் தங்கச்சி | Filmibeat Tamil
     எம்ஜிஆர் + வள்ளல்

    எம்ஜிஆர் + வள்ளல்

    "எம்ஜிஆர் போன்று வள்ளல் மனம் படைத்தவர் விஜயகாந்த்... அவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்திடம் நான் கேட்டுக்கொண்டேன்... அதோடு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்தேன்... அரசியலை தாண்டி விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர்.. அவர் பூரண உடல் நலம் பெற்று எழுச்சியுடன் விரைவில் மக்கள் பணியாற்ற வேண்டும்.. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 56 ஆண்டு கால அரசியல் வாழக்கை பற்றிய ஆவணப்படம் வெளியிடப்போகிறோம்.. அதற்கு அழைப்பு விடுப்பதற்காகவும் வந்தேன்..

     டாக்குமெண்ட்ரி

    டாக்குமெண்ட்ரி

    அந்த டாக்குமெண்ட்ரி படம் 75 நிமிடங்கள் கொண்டது.. இந்த குறும்படம் எந்த இயக்கத்தையோ அல்லது எந்த நபரையோ தாக்குவது இல்லை. முழுக்க முழுக்க வைகோவின் சாதனைகள், அவரின் அரசியல் பயணம் பற்றியது மட்டுமே அந்த குறும்படம்.. இந்த நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின்தான் துவங்கி வைக்க போகிறார்.. இதில் அதிமுக, பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது... இருந்தாலும், நாங்கள் அதிமுகவையும், பாஜகவையும் பிரித்து பார்க்கவில்லை" என்றார்.

     விஜயகாந்த் பர்த்டே

    விஜயகாந்த் பர்த்டே

    முன்னதாக, பிரேமலதா திடீரென ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.. விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது, யாரும் வதந்தி பரப்ப வேண்டாம்.. அவர் கட்சி அலுவலகத்திற்கு வந்து தொண்டர்களை சந்திக்க ஆசைப்பட்டார். அதற்காக தான் அழைத்து வந்தோம்... நாளையும் விஜயகாந்த் தலைமைக் கழகத்திற்கு வரப்போகிறார்.. தொண்டர்கள் நாளை நேரில் அவரை சந்திக்க வரலாம்... உடல் நிலை பிரச்சனையால் சோர்வு தானே தவிர அவர் எங்களுக்கு அறிவுரை அளித்து வருகிறார்" என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்..

     எலும்பும் தோலுமாக...

    எலும்பும் தோலுமாக...

    பிரேமலதாவின் இந்த திடீர் விளக்கம் எதற்காக என்ற குழப்பம் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.. சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதற்கு விஜயகாந்த் அழைத்து வரப்பட்டிருந்தார்.. பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக காணப்பட்டார். அவரால் நேராக நிமிர்ந்து உட்காரகூட முடியவில்லை.. தோளை ஒருகையில் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறார். தேசிய கொடி ஏற்றும்போது, இரு கைகளாலும் ஏற்ற முயன்றார்.. அப்போது விஜயகாந்த் அப்படியே சாய்ந்து விழ போனார்..

     கூலிங் கிளாஸ்

    கூலிங் கிளாஸ்

    இதனால், பதறிப்போன பிரேமலதா, ஒரு கையால் விஜயகாந்த்தை இழுத்து பிடித்து கொண்டு இன்னொரு கையால் கொடியேற்றினார்.. கூலிங் கிளாஸை கூட எடுத்து விஜயகாந்தால் போட்டுக் கொள்ள முடியவில்லை. பிரேமலதா தான் கண்ணாடி எடுத்து அவருக்கு மாட்டிவிட்டார்.. கடைசிவரை அவரை கீழே விழாதவாறு பிடித்துக் கொண்டேதான் நின்றார் பிரேமலதா.. இதையெல்லாம் பார்த்து, தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுதே விட்டனர்..

     விஜயகாந்த் வர்றாரு

    விஜயகாந்த் வர்றாரு

    இது தொடர்பான வீடியோவை பார்த்த இணையவாசிகள், விஜயகாந்த் ரசிகர்களிடையே வருத்தத்தையும், கவலையையும் ஏற்படுத்தியது.. இந்த நிலைமையில் அவரை வெளியே அழைத்து வர வேண்டுமா? இதெல்லாம் வன்கொடுமையில் சேராதா? அவரை இப்படி துன்புறுத்தி அரசியல் செய்ய வேண்டுமா? அவரை எங்களால் பார்க்கவே முடியல.. தயவுசெய்து டார்ச்சர் தராதீங்க.. ஏன் அவரை இப்படி பாடுபடுத்தறீங்க.. அவரை விடுங்க ப்ளீஸ்" என்று ஆதங்கத்தை கொட்டினார்கள்.

     விஜயகாந்த்

    விஜயகாந்த்

    இப்போது, நாளைய தினமும் விஜயகாந்த்தை கட்சி ஆபீசுக்கு அழைத்து வரப்போவதால், மீண்டும் இதுபோன்ற சர்ச்சைகள், வசவுகள் சோஷியல் மீடியாவில் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே பிரேமலதா, முன்கூட்டியே இப்படி சொல்கிறாரோ? என்ற சந்தேகங்களை தேமுதிகவினரே எழுப்பி வருகிறார்கள்.. வழக்கமாக பிறந்தநாள் என்றாலே, விஜயகாந்த் ஆபீஸ் களைகட்டும்.. அந்தவகையில், நாளைய தினம் எப்படி இருக்க போகிறது? விஜயகாந்த் தன்னுடைய தொண்டர்களை, ரசிகர்களை காண எப்படி வர போகிறார்? என்ற எதிர்பார்ப்புகளும் எகிறி வருகின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+