இந்தியாவில் பர்ஸ்ட்.. தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சர்வதேச தரச்சான்று.. .. செம..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தபின்பு காவல் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. தமிழக டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற சைலேந்திர பாபு காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அவர்களின் திருமண நாள், பிறந்தநாளில் கண்டிப்பாக விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவித்தார்.

காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

ISO certification has been issued to the TN police Control Room

இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் மாநிலக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்ட ISO 27001:2013 சர்வதேச தரச்சான்றைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காவல்துறை தலைமை இயக்குநருக்கு வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (3.11.2021) தலைமைச் செயலகத்தில், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநிலக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு British Standards Institution வழங்கிய ISO 27001:2013 சர்வதேச தரச்சான்றைக் காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபுவிடம் வழங்கினார்.சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநிலக் காவல் கட்டுப்பாட்டு அறையில், அவசர கால உதவி எண்கள் 100, 112 மற்றும் 101 அழைப்புகள் கையாளப்படுகின்றன.

இது நவீன ஒருங்கிணைந்த தரவுத் தளம் மற்றும் இதர தொழில்நுட்பக் கட்டமைப்புகளுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த நவீன ஒருங்கிணைந்த தரவுத் தளத்தில் இதுநாள் வரையில் 1.12 கோடி அவசர கால அழைப்பு விவரங்கள் மற்றும் 14.5 லட்சம் 'காவலன்' செயலி பயன்படுத்துவோரின் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நவீன ஒருங்கிணைந்த தரவுத் தளத்தின் தகவல்கள் பாதுகாப்பு அமைப்பிற்கு British Standards Institution-னால் ISO 27001:2013 சர்வதேச தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

இச்சான்றானது, இந்தியாவிலேயே முதல் முறையாகத் தமிழ்நாடு காவல்துறையின் மாநிலக் காவல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டிற்குப் பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், உள்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சைபர் கிரைம்) அமரேஷ் புஜாரி, காவல்துறை கூடுதல் இயக்குநர் (தொழில்நுட்ப சேவை) வினித் தேவ் வான்கடே, காவல்துறை துணைத் தலைவர் (தொழில்நுட்ப சேவை) எஸ்.மல்லிகா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+