Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்என் ரவி ஆளுநராக செயல்படுவது அவருக்கும் நல்லது.. அவரை நியமித்த அரசுக்கும் நல்லது.. திருநாவுக்கரசர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் போல் செயல்படுவது அவருக்கும், அவரை நியமித்துள்ள அரசுக்கும் நல்லது என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் ஆட்சி செய்ய முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கேற்ப மேற்கு வங்கம், கேரளா, தெலங்கானா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர் - ஆளுங்கட்சி இடையே மோதல் நிலவி வருகிறது.

இதேபோல் தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்என் ரவி - தமிழக அரசு இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சனாதனம், இந்து மதம், திராவிடம், திருவள்ளுவர், திருக்குறள் உள்ளிட்டவை பற்றி சர்ச்சையான கருத்துக்களை பேசி வருகிறார்.

திமுக கூட்டணி கட்சிகள் அறிக்கை

திமுக கூட்டணி கட்சிகள் அறிக்கை

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகிவிட்டு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசட்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில், "பொறுப்பில் இருந்துக் கொண்டு பேசுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக் கொள்ள வேண்டும். பெரிய பதவி எதையாவது எதிர்பார்த்து பா.ஜ.க. தலைமையை மகிழ்விக்க ஆளுநர் விரும்பினால் அவர் பதவி விலக வேண்டும்.

ஆளுநர் ஆர்என் ரவி

ஆளுநர் ஆர்என் ரவி

ஆளுநர் உதிர்க்கும் அபத்த கருத்துகளுக்கு எதிராகப் பலர் சொல்லும் விளக்கங்களை அவர் ஏற்றதாக தெரியவில்லை. ஆளுநர் ரவி பேசுவது அவர் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கே எதிரானது என்பதை உணர்ந்து தான் பேசுகிறாரா? வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தும் எண்ணத்தோடு ஆளுநர் பேசுகிறார் என்றே பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசர் பேட்டி

திருநாவுக்கரசர் பேட்டி

இந்த நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்கத் தேவர் உருவப்படத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசரிடம் ஆளுநர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஆளுநர் ரவி ஆளுநராக செயல்படுவது அவருக்கும் நல்லது, அவரை நியமித்துள்ள அரசுக்கும் நல்லது. ஆளுநர் ரவி அரசியல்வாதியை போல் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்லி வருகிறார்.

கண்டனம்

கண்டனம்

சுதந்திர போராட்ட வரலாறு பற்றி ஆளுநரும், பாஜகவைச் சேர்ந்த யாரும் பேசுவதில் நியாயமில்லை. இந்திய சுதந்திரத்திற்காக போராடியது காங்கிரஸ் கட்சி. அக்கட்சியின் தலைவர்கள் பலரும் சுதந்திரத்திற்காக வாழ்வை அர்ப்பணித்தார்கள். அதைப் பற்றியெல்லாம் ஆளுநர் விமர்சிப்பதன் மூலம் அவர் தனது எல்லையை கடந்து செயல்படுவதை காட்டுகிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+