சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிறைவேறா ஆசை.. கருணாநிதி இறப்பதற்கு முன்பே தன் உயிர் பிரிய விரும்பிய ஜெ அன்பழகன்

Google Oneindia Tamil News

சென்னை: கருணாநிதி இறப்பதற்கு முன்பே தனது உயிர் பிரிய வேண்டும் என்றும் அவரது கண்ணீர் துளிகள் தனது உடலின் மேல் பட வேண்டும் என்றும் விரும்பியவர் அன்பழகன். ஆனால் கருணாநிதி முன்கூட்டியே இறந்துவிட்டதால் அந்த ஆசை நிறைவேறாததை அடுத்து அன்பழகன் மனம் வருந்தினார்.

கருணாநிதியின் பேச்சாலும் இலக்கிய திறமையாலும் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தவர்கள் ஏராளம். அதே நேரத்தில் சுயமரியாதை, திராவிட கொள்கைகளினாலும் திமுகவில் இணைந்தவர்கள் ஏராளம்.

அது போல் கருணாநிதியால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தவர்தான் ஜெ அன்பழகன். இருவரும் பரஸ்பரத்தின் பேரில் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

ஹு சொன்ன வழிமுறை.. கொரோனாவால் பலியான அன்பழகன்.. உடல் அடக்கம் செய்யப்பட்டது எப்படி? முழு விபரம்!ஹு சொன்ன வழிமுறை.. கொரோனாவால் பலியான அன்பழகன்.. உடல் அடக்கம் செய்யப்பட்டது எப்படி? முழு விபரம்!

பேரன்பு

பேரன்பு

அன்பு, அன்பு என அனைவராலும் பேரன்புடன் அழைக்கப்பட்ட அன்பழகன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு காரணமாக குரோம்பேட்டையில் உள்ள ரீலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் பிரச்சினையும் கூடவே இருந்தாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். இந்த நிலையில் அவர் இன்று காலை இயற்கை எய்தினார்.

தொண்டர்கள்

தொண்டர்கள்

அவரது மரணம் திமுகவினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கும் கருணாநிதிக்குமான நட்பு, அவருக்கும் ஸ்டாலினுக்குமான நட்பு, அவரது தயாளு குணம் குறித்து அனைவரும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். பெருந்தலைவர்களிடத்தில் மட்டுமல்லாது சாதாரண தொண்டர்களிடமும் அவர் அன்பு செலுத்துவார்.

அன்பழகன்

அன்பழகன்

இந்த நிலையில் திமுகவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றாமல் ஓய மாட்டேன் என அன்பழகன் முழங்கினார். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் இறந்துவிட்டார். இந்த ஆசையை போல் இன்னொரு ஆசையும் அன்பழகனுக்கு நிறைவேறாமல் போய்விட்டது என்கிறார்கள்.

ஜெ அன்பழகன் இல்ல திருமணம்

ஜெ அன்பழகன் இல்ல திருமணம்

ஆம், கடந்த 2014-ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையில் அன்பழகன் வீட்டு திருமண விழா நடந்தது. அப்போது அவர் பேசுகையில் கருணாநிதி இருக்கும் போதே எனது உயிர் பிரிய வேண்டும். என் உடல் மீது கருணாநிதியின் கண்ணீர் துளிகள் பட வேண்டும். அவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்ததை பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என மிகவும் உணர்ச்சிவயப்பட்டு பேசினார்.

கருணாநிதி இறப்பு

கருணாநிதி இறப்பு

ஆனால் இது அப்படியே நேர் எதிராக மாறிவிட்டது. தனக்கு முன்பே கருணாநிதி இறந்து லட்சோப லட்ச தொண்டர்கள் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதை தனது குடும்பத்தினரிடமும் ஆதரவாளர்களிடமும் கூறி அன்பழகன் கண்ணீர் விட்டதாகவும் சொல்கிறார்கள்.

English summary
J Anbalagan wished to last his breathe before Karunanidhi's. But his wishes didnt come true.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X