Jade Plant Vastu Benefits! வறுமையை விரட்டும் பச்சை வைரம்! வீட்டில் இந்த செடி இருந்தால் பணம் கொட்டும்
சென்னை: ஒரு சிறிய பச்சை செடி... ஆனால் அதன் பின்னால் மறைந்திருக்கும் செல்வ ரகசியம் பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.. வீட்டில் வைத்த சிலருக்கு எதிர்பாராத பணவரவு அதிகரித்ததாக கூறப்படும் இந்த அதிர்ஷ்ட செடி என்ன தெரியுமா?.. வாஸ்து மற்றும் ஃபெங் சுயி நிபுணர்கள் கூட பரிந்துரைக்கும் இந்த "ஜேட் பிளாண்ட்" பற்றி இப்போது அதிகம் பேசப்படுகிறது.. நாணயத்தைப் போன்ற இலைகள் கொண்ட இந்த செடி, வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது என நம்பப்படுகிறது.. உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக வேண்டுமா?.. இந்த பச்சை செடியின் சீக்ரெட் பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
வீட்டின் முன் ஒரு செடி இருந்தால் அது அழகிற்கு மட்டுமல்ல, அதிர்ஷ்டத்திற்கும் அடையாளமாக மாறும் என்பது பலரது நம்பிக்கை. நீண்டகாலமாக 'மணி பிளாண்ட்' வளர்ப்பதுதான் செல்வத்தை ஈர்க்கும் வழியாகப் பார்க்கப்பட்டது.

ஜேட் பிளாண்ட் பயன்கள்
ஆனால், தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் ஒரு புதிய டிரெண்ட் "ஜேட் பிளாண்ட்" (Jade Plant). இது வெறும் அலங்காரச் செடி மட்டுமல்ல, ஒரு காந்தத்தைப் போல பணத்தை உங்கள் வீட்டிற்கு இழுத்து வரும் ஆற்றல் கொண்டது என்று வாஸ்து மற்றும் ஃபெங் சுயி நிபுணர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.
ஜேட் பிளாண்ட் அறிவியல் ரீதியாக 'கிராசுலா ஓவாட்டா' (Crassula Ovata) என்று அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் தடிமனாகவும், வட்டமாகவும், பார்ப்பதற்கு பச்சை நிற நாணயங்கள் போலவும் இருக்கும்.. ஃபெங் சுயி கலையில், நாணயங்களை போன்ற வடிவம் கொண்ட இலைகள் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகின்றன.
மணி பிளாண்ட் இப்போது எல்லோர் வீட்டிலும் சாதாரணமாகிவிட்ட நிலையில், மக்கள் ஒரு புதிய மற்றும் ஆச்சரியமான மாற்றத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வெற்றிடத்தைத்தான் இந்த ஜேட் பிளாண்ட் நிரப்புகிறது. இது 'நட்பின் மரம்' மற்றும் 'அதிர்ஷ்ட செடி' என்றும் உலகமெங்கும் புகழப்படுகிறது.
பச்சை வைரம் நன்மைகள்
அதுமட்டுமல்ல, இந்த செடியை வளர்ப்பதற்குப் பின்னால் ஒரு முக்கிய விதி உள்ளது. இது வளர வளர உங்கள் பொருளாதார நிலையும் உயரும் என்பது நம்பிக்கையாகும்.
குறிப்பாக, இதை வீட்டின் நுழைவு வாயிலின் வலது புறத்தில் வைப்பது மங்கலமானதாகக் கருதப்படுகிறது. சூரிய ஒளி படும் இடத்தில் இந்தச் செடி செழித்து வளர்ந்தால், அந்த வீட்டில் பாசிட்டிவிடி எனர்ஜி அதிகரித்து, தேங்கி நிற்கும் பண வரவு சீராகும் என்று சொல்லப்படுகிறது. மற்ற செடிகளைப் போல இதற்கு அதிக பராமரிப்பு தேவையில்லை... குறைந்த தண்ணீரிலேயே நீண்ட காலம் உயிர்வாழும் என்பதுதான் இந்த செடியின் ஸ்பெஷாலிட்டியாகும்.
ஒரு வகையில், மிகக் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழிலைப் போல, குறைந்த பராமரிப்பில் நிறைந்த அதிர்ஷ்டத்தை இது தருகிறது.
வீட்டிற்குள் பாசிடிவ் எனர்ஜி
ஏன் இப்போது இந்தச் செடி இவ்வளவு வேகமாகப் பரவுகிறது தெரியுமா? இதற்கு முக்கியக் காரணம் இதன் கியூரியாசிட்டி கேப் தான்.. அதாவது இதுவரை கேள்விப்படாத ஒரு விஷயம் பணத்தை ஈர்க்கிறது என்று சொல்லும்போது, இயல்பாகவே மக்கள் அதன் மீது ஈர்க்கப்படுகிறார்கள். மேலும், இதன் இலைகள் அடர் பச்சை நிறத்தில் மினுமினுப்பாக இருப்பதால், வீட்டின் உட்புற அழகை இது உடனடியாக மேம்படுத்துகிறது.
அத்துடன் அலுவலக மேசைகள், வரவேற்பு அறைகள் என எங்கும் வைக்க ஏற்றதாக இருப்பதால், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஜேட் பிளாண்டை நோக்கி நகர்கிறார்கள்.
பணம், செல்வம் பெருக
ஆக, ஜேட் பிளாண்ட் என்பது வெறும் செடியல்ல, அது ஒரு நம்பிக்கையின் குறியீடு. உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்கிவிட்டு, ஒரு புத்துணர்ச்சியான சூழலை இது உருவாக்குகிறது. பணம் என்பது உழைப்பால் வருவது என்றாலும், அந்த உழைப்பிற்கு துணையாக ஒரு நேர்மறை அதிர்வலை உங்கள் வீட்டில் இருப்பது அவசியம். அந்த அதிர்வலையைத் தரும் "பச்சை வைரம்" தான் இந்த ஜேட் பிளாண்ட்.
உங்கள் வீட்டிலும் அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கப்பட வேண்டுமென்றால், ஒரு ஜேட் பிளாண்டை நட்டு அதன் வளர்ச்சியை கவனித்துப் பாருங்கள், மாற்றத்தை நீங்களே உணர்வீர்களாம்..!!!!












Click it and Unblock the Notifications