ஜெய் பீம் பற்றி சந்தானம் தந்த ஸ்டேட்மென்ட்.. பழைய போட்டோவை தோண்டி எடுத்த நெட்டிசன்கள்.. என்ன இது?
சென்னை: ஜெய் பீம் பட சர்ச்சை குறித்து நடிகர் சந்தானம் கருத்து தெரிவித்த நிலையில் அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Recommended Video
ஜெய் பீம் படம் தொடர்பான சர்ச்சைகள் காரணமாக நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாமகவினர் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். படம் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவிற்கு கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கு நடிகர் சூர்யாவும் விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் படத்தில் குறிப்பிட்ட ஜாதியை குறிப்பது போல காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி பாமகவினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும், மன்னிப்பு கோர கோரியும் வன்னியர் சங்கம் சார்பாக படக்குழுவிற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

வன்னியர்
இந்த படத்தில் வன்னியர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டதாக வன்னியர் சங்கம் புகார் வைத்துள்ளது. அதேபோல் பாமகவினரும் இதில் இருக்கும் சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வில்லன் பெயர் குருமூர்த்தி என்று வைக்கப்பட்டதற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது மறைந்த குருமூர்த்தி அவர்களை குறிப்பது போல இருப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளனர்.

போலீஸ்
அதேபோல் போலீஸ் அதிகாரி குருமூர்த்தி வீட்டில் அக்னி சட்டி கலசம் இருந்ததையும் பாமகவினர் விமர்சனம் செய்துள்ளனர். இந்த சர்ச்சையில் சூர்யாவிற்கு ஆதரவாக திரையுலகினர் பலர் குரல் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது நடிகர் சந்தானம் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் சந்தானம் நடித்திருக்கும் சபாபதி படத்தின் பிரஸ் மீட்டில் ஜெய்பீம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எந்த படத்திலும் யாரையும் குறைவாக பேச கூடாது.

தாழ்த்தி பேச கூடாது
ஒருமுறை உயர்த்தி பேசலாம். ஆனால் தாழ்த்த கூடாது. இந்துக்களை உயர்த்தி பேசும் வகையில் படம் எடுக்கலாம். அதற்காக கிறிஸ்துவர்களை தாழ்த்தி பேச கூடாது. அப்படி பேசுவது தேவையில்லாத ஒன்று. எல்லோரும், எல்லா மதத்தினரும் படம் பார்க்க வருவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இனி இளைஞர்கள் சமுதாயத்திற்கு நாம் நல்ல சினிமாவை தர வேண்டும்.

அறிவுரை
படத்திற்காக யாரையும் தாழ்த்தி பேசுவது சரியாக இருக்காது, என்று சந்தானம் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் சந்தானத்திற்கு கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையத்தில் நிறைய கருத்துக்கள் பரவி வருகின்றன. சூர்யாவிற்கு சினிமா துறையை சேர்ந்தவர் என்ற வகையில் சந்தானம் ஆதரவு அளிக்கவில்லை. இது தவறு என்று கூறி சந்தானத்திற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கிண்டல்
அதேபோல் சந்தானம்தான் பொதுவாக படங்களில் தனது சக நடிகர்களின் உடலை, தோற்றத்தை கிண்டல் செய்து தாழ்த்தி பேசுவார். மற்றவர்களை தாழ்த்தி பேசி காமெடி செய்வார். ஆனால் அவரே இப்போது இப்படி பேசலாமா என்றும் சில நெட்டிசன்கள் ட்வீட் செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் சந்தானம் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும் டேக் உருவாக்கி, அவர் பேசியது தவறு இல்லை என்று கூறி டிரெண்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

மோதல்
இந்த மோதல் ஒரு பக்கம் இருக்கும் நிலையில்தான் கலகலப்பு படத்தில் சந்தானம் நடித்த காட்சி ஒன்றின் புகைப்படமும் வைரலாகி வருகிறது. அந்த படத்தில் சந்தானம் உள்ளூர் அரசியல்வாதியாக வருவார். வெட்டுப்புலி என்ற பெயரில் வரும் இவர் உள்ளாட்சி தேர்தலில் நிற்பார். இதற்கு அவர் பயன்படுத்திய சின்னம் தீ சட்டி சின்னம் ஆகும். ஜெய் பீம் படத்தில் எந்த சின்னத்திற்காக சர்ச்சை உருவானதோ அதே சின்னத்தை இவரும் தனது படத்தில் பயன்படுத்தி இருப்பார்.

காமெடி
இதை வைத்து நிறைய காமெடிகளை சந்தானம் அந்த படத்தில் செய்து இருந்தார். இதைத்தான் தற்போது நெட்டிசன்கள் வெளியிட்டு கேள்வி எழுப்பி உள்ளனர். என்ன நீங்களே அக்னி சட்டியை வைத்து காமெடி எல்லாம் செய்து இருக்கிறீர்கள். நீங்கள் இப்போது இதில் கருத்து தெரிவிக்கலாமா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications