Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விஜயின் பிடிவாதம்".. அரசியல் ‛டயலாக்'கை எல்லாம் வெட்ட முடியாது.. ‛ஜனநாயகன்' தள்ளிப்போனதன் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛சென்சார்' சான்று கிடைக்காததால் ‛ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட்டப்படி கடந்த 9 ம் தேதி ரிலீஸ் ஆகவில்லை. ‛சென்சார்' சான்று வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜனவரி 27 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் ‛ஜனநாயகன்' திரைப்படத்துக்கு ‛சென்சார்' சான்று கிடைக்காததற்கு விஜயின் பிடிவாதம் தான் முக்கிய காரணம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றி இங்கு பார்க்கலாம்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் இறங்கி உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் அவரது கட்சி களமிறங்க உள்ளது. இதையடுத்து நடிகர் விஜய் நடிப்புக்கு முழுக்கு போட்டுள்ளார். தான் நடித்த ‛ஜனநாயகன்' திரைப்படம் தான் கடைசி படம் என்று அறிவித்தார்.

jana-nayagan-censor-vijay-is-the-reason-for-postpone-after-he-refuses-cuts-to-political-dialogues

இந்த ‛ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 9ம் தேதி தியேட்டரில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திரைப்படம் திட்டமிட்டப்படி ரிலீசாகவில்லை. படத்துக்கான ‛சென்சார்' சான்று கிடைக்காததால் தேதி குறிப்பிடாமல் திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தான் காரணம்

இந்நிலையில் தான் ‛ஜனநாயகன்' திரைப்படம் தள்ளிப்போக முக்கிய காரணமே நடிகர் விஜய் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ‛கிரேட் ஆந்திரா' இணையதள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், ‛‛ ஜனநாயகன் திரைப்படத்தில் சக்திவாய்ந்த அரசியல் வசனங்கள் உள்ளன. அதேபோல் உணர்வுப்பூர்வமான சில காட்சிகள் உள்ளன. இதையெல்லாம் ‛நோட்' செய்த மத்திய தணிக்கை வாரியத்தின் மறுபரிசீலனை குழுவினர் நீக்கும்படி பரிந்துரை செய்தது.

எதிர்ப்பு தெரிவித்த விஜய்

இதில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சில மாற்றங்களை செய்ய தயாராகினர். ஆனால் நடிகர் விஜய் ஒப்புக்கொள்ளவில்லை. தனது நிலைப்பாட்டில் அவர் அசைக்க முடியாத உறுதியுடன் இருக்கிறார்.

திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் வசனங்களை நீக்கவோ, அதன் வீரியத்தை குறைக்கவோ விஜய் மறுத்துள்ளார். இதுதான் ‛ஜனநாயகன்' திரைப்படத்துக்கு சென்சார் சான்று கிடைக்காததற்கு முக்கிய காரணம்.

ஆன்மாவாக இருக்கும் ‛டயலாக்’

அதாவது நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்துக்கு தயாராகி வருகிறார். இதனால் அதனை மையப்படுத்தி சில வசனங்கள் படத்தில் உள்ளது. இதனால் இந்த திரைப்படத்தை நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தின் முன்னுரையாக பார்க்கிறார்.

மேலும் இடம்பெற்றுள்ள அரசியல் வசனங்கள் தான் ஆன்மாவாக உள்ளதாக விஜய் நம்புகிறார். இதில் மாற்றங்கள் செய்யும்போது அது படத்தின் முக்கியத்துவத்தை குறைத்துவிடும் என்பதால் விஜய் அரசியல் சார்ந்த வசனங்களை மாற்ற ஒப்புக்கொள்ளவில்லை.

சமரசம் செய்யாத விஜய்

அதுமட்டுமின்றி விஜய் முழுநேரமாக அரசியலுக்கு வர உள்ளார். இதனால் தனது கடைசி திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அதனை வெளியிட விஜய் விரும்புகிறார். இதனால் தான் எப்போது இல்லாத அளவுக்கு அவர் சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 27ல் தீர்ப்பு

இதற்கிடையே தான் ‛ஜனநாயகன்' திரைப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் சென்சார் சான்று வழங்க வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தீர்ப்பு ஜனவரி 27 ம் தேதி வெளியாக உள்ளது. இந்த தீர்ப்பு தான் ‛ஜனநாயகன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை நிர்ணயம் செய்யும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+