பாஜகவையும் எதிர்க்கிறாருப்பா.. 'ஜன நாயகன்' நடத்தும் நாடகம் இது.. பத்திரிக்கையாளர் ஜீவ சகாபதன் பேட்டி
சென்னை: ஜன நாயகனில் சென்சார் போர்டு பயப்படும் அளவிற்கு, பாஜக பயப்படும் அளவிற்கு ஒன்றுமே கிடையாது.. ஆனால் இவர்களாக விஜய் எங்களை எதிர்க்கிறார் என்று நிறுவுகிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜகவை எதிர்த்தால் தான் வெற்றி கிடைக்கும்.. இல்லாவிட்டால் காமெடியாகத்தான் போவார்கள் எல்லாருமே.. பாஜகவையும் எதிர்க்கிறாருப்பா.. காண்பிப்பதற்காக நடத்துகின்ற நாடகம் என்று பத்திரிக்கையாளர் ஜீவசகாப்தன் கூறியுள்ளார்.
பத்திரிக்கையாளர் ஜீவசகாப்தன் ஒன் இந்தியா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நெறியாளர் எழுப்பியகேள்விக்க அளித்த பதில்களை பார்ப்போம். ஜனநாயகனை சுற்றியுள்ள சர்ச்சை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், சென்சார் போர்டு சொல்லியிருப்பதுஎல்லாம் ஒரு காரணமே கிடையாது. ஓ எம் என்பது அழிவு சக்தி என சொல்கிறார்கள்.. இதனை ஓம் என்று கூறி அவமானப்படுத்தும் வகையில் உள்ளது என்று கூறுகிறார்கள். ராணுவ உடையை பயன்படுத்தக்கூடாது..

ஆனால் பயன்படுத்தி உள்ளார்கள் என்கிறார்கள்.. அதன்பிறகு படத்தில் வன்முறை காட்சிகள் உள்ளதா இல்லையா என்று சொன்னார்களா என தெரியவில்லை. ஆனால் படத்தில் வன்முறை காட்சிகள் எக்கச்சக்கமாக இருக்கிறது.. இவர்கள் சொல்லியிருக்கிற காரணத்தை எல்லாம் வைத்து பார்க்கும் போது, ஓம் என்ற சொல்லி கொச்சைப்படுத்துகிறார்.. இவர் கிறிஸ்தவர், இவர் ஒரு ஆண்டிபிஜேபி என்று நிறுவ முயல்கிறார்கள்.. வழக்கம்போல் விஜய் ஆன்டிநேஷனல் என்று பாஜக கூறுவது வழக்கமாக உள்ளது.
பாஜக தவெக எதிரி என்பதை அவர்கள் மறைத்துவைக்கவில்லை.. இந்த பிரச்சனையை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றால், சினிமா, வணிகம், அரசியல் என மூன்றுக்கும் பாஜக விஜய் என இரண்டு பேருமே சாதகமாக பயன்படுத்தப் பார்க்கிறார்கள்.. தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜகவை விமர்சிப்பவர்கள் தான் நிற்க முடியும். குறிப்பாக டெல்லியை விமர்சிப்பவர்கள் தான் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் என யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியும்.. விஜய் பாஜகவின் செல்லப்பிள்ளை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பாஜகவை கணக்கிற்கு கூட விஜய் எதிர்த்து பேச மாட்டேன் என்கிறார்.புதுச்சேரிக்கே போனால் கூட திமுகவைத்தான் திட்டுகிறார்.
திமுக எதிர்ப்பு ஓட்டு என்பது என்ன..ஏற்கனவே அதிமுக, பாஜகவிற்கு வரும் ஓட்டு தான்.. இவரை தனியாக நிற்க வைத்தால், அந்த ஓட்டு தான் பிரியப்போகிறது.. திமுகவின் ஓட்டு வங்கி என்பது தலித், முஸ்லிம், கிறிஸ்தவர்கள்.. இந்த கட்டமைப்பை உடைக்க வேண்டும்.. விஜய்க்கு பாஜக மீது மோகம். அவர் பாஜகவை எதிர்க்க மாட்டார் என்றால் , அவர்கள் ஓட்டுப்போட மாட்டார்கள்... அவர் எதிர்ப்பது இல்லை.. சும்மா திமுகவை திட்டுகிறார் என்று பேசுவார்கள்.. ஆனால் இப்போது ஓம் என்ற சொல்லை கூறி மத ரீதியாக விமர்சிப்பதாக குற்றச்சாட்டு வந்துள்ளது.
ஒரு விஷயத்தை பாஜக கையில் எடுத்தாலே மக்கள் அதனை காமெடியாகத்தான் பார்ப்பார்கள்.. இவர்களுக்கு வேறு வேலையில்லப்பா..எல்லாரும் ஒற்றுமையாக இருப்பார்கள்.. ஆனால் இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் என்று பிரிவினை பேசுவார்கள்.. பாஜக வழக்கம் போல் விஷயத்தை கையில் எடுத்துள்ளது. ஓம் என்பதில் என்ன விமர்சிக்க இருக்கிறது.. அது ஓ எம் தான்.. ஓமா என்று கூட எனக்கு தெரியவில்லை.. ஏதோ ஒரு குறியீடு, பைத்தியக்கரத்தனமாக வைத்து, பான் இந்தியா கான்செப்ட்டோ சினிமாக்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.. இதை வந்து உடனே இந்து மதத்திற்கு எதிராக செய்கிறார் என்று பிரச்சனை கிரியேட் செய்கிறார்கள்.. இந்த படத்தோடு தெலுங்கு பதிப்பு கேசரி செம்ம காமெடியாக இருக்கும்..
ஜனநாயகனில் சென்சார் போர்டு பயப்படும் அளவிற்கு, பாஜக பயப்படும் அளவிற்கு ஒன்றுமே கிடையாது.. ஆனால் இவர்களாக விஜய் எங்களை எதிர்க்கிறார் என்று நிறுவுகிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜகவை எதிர்த்தால் தான் வெற்றி கிடைக்கும்.. இல்லாவிட்டால் காமெடியாகத்தான் போவார்கள் எல்லாருமே.. பாஜகவையும் எதிர்க்கிறாருப்பா.. காண்பிப்பதற்காக நடத்துகின்ற நாடகம்..
இன்னொன்று வணிகமாக பார்த்தீர்கள் என்றால் 1200,1300 தியேட்டரில் படங்கள் வருகிறது... ஒருவேளை பராசக்தி வரவில்லை என்றால் 1000 தியேட்டரும் ஜனநாயகனுத்தான் கிடைத்திருக்கும்... பராசக்தி வருவதால் 400 தியேட்டர் வரை குறையும்.. ஜனநாயகனுக்கத்தான் கூடுதல் தியேட்டர் எப்படி என்றாலும் கிடைக்கும். இப்போது பிரச்சனை என்னவென்றால் படம் குப்பை என்று காரி துப்பினாலும் மூன்று நாளில் கலெக்சனை பார்த்துவிட்டு போய்விடுவான்.
பொங்கல் நம்ம மட்டுமே அடிக்கலாம் என நினைக்கும் போது பராசக்தி வந்துவிட்டது. தியேட்டர் பாதிக்கு பாதி பிரிகிறது.. படம் நன்றாக இருந்தால், அதற்க ஸ்கிரீனை அதிகமாக்கிவிடுவார்கள்.. அந்த பயம் எல்லாம் இருக்கிறது.. " என்று ஜீவ சகாப்தன் கூறினார். பாஜக தவெக இடையே உள்ள தொடர்பு மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து நிறைய பேசி உள்ளார். அதுபற்றி செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பாருங்கள்.
-
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications