ரெயின் ரெயின் கோ அவே! மோடி மோடி கம் கம்! எல்கேஜி ரைம்ஸ் மாதிரி பாடிய ஜெயக்குமார்.. திமுக மீது சாடல்
சென்னை: சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆங்கில ரைம்ஸை பாடினார்.
தமிழகத்தில் திமுக அரசின் மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கடந்த 3 தினங்களாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்தது. அந்த வகையில் இன்றைய தினமும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆரின் படமான வேட்டைக்காரன் படத்தில் வரும் "உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் பாடலை பாடி தொண்டர்களை குஷிப்படுத்தினார். இந்த பாடலை கேட்ட தொண்டர்கள் அண்ணன் டிஜே, அண்ணன் டிஜே என கோஷமிட்டனர்.

ஜெயக்குமார்
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தின் முடிவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் மூக்கு மேல் விரலை வைக்கும் அளவுக்கு 4 ஆண்டுகள் மக்களுக்கான சிறப்பான ஆட்சியை தந்தவர் எடப்பாடி பழனிச்சாமி.

விபத்தில் வந்த ஆட்சி
ஆனால் இந்த திமுக ஆட்சியோ விபத்தில் வந்தது. நகர்ப்புற தேர்தலுக்கு முன்பு சொத்து வரியை உயர்த்தி இருந்தால் தேர்தல் முடிவுகளே தலைகீழாக மாறியிருக்கும். திமுகவின் மூலதனமே பொய் வாக்குறுதிகள். அவர்களை ஓட ஓட விரட்டி அடிப்போம். ஆட்சிக்கு வரும் போது ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என திமுக இருக்கிறது.

திராவிட மாடல்
இதுதான் திராவிட மாடல். அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்திய துரோகிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்போம். சின்ன வயதில் பசங்களுக்கு ரைம்ஸ் சொல்லி கொடுப்பார்கள். நான் கூட கார்பரேஷன் ஸ்கூலில் படித்த போது ஒன்று சொல்லிக் கொடுத்தார்கள்.

திமுகவின் ரைம்ஸ்
அதாவது rain rain go away, come again another day ஆகும். அது போல் அதிமுக ஆட்சி காலத்தில் பிரதமர் மோடி மக்கள் நல தி்ட்டங்களை செயல்படுத்த தமிழகம் வந்தால் modi modi go go...என சொன்னார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் modi modi come come என சொல்கிறார்கள். இதுதான் திமுகவின் தற்போதைய ரைம்ஸாக இருக்கிறது என ஜெயக்குமார் விமர்சித்தார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications