சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவ்ளோ ஆக்டிவா பிரசாரம் பண்ணாங்களே.. சொர்ணலதாக்கு என்னாச்சு.. ஓட்டு போட கூட வரல.. கவலையில் காடுவெட்டி

ஐஜேகே வேட்பாளர் சொர்ணலதா உடல்நலக்குறைவால் ஓட்டுப்போடவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. எனவே, நேற்றைய தினம், ஜெயங்கொண்டம் தொகுதி ஐஜேகே வேட்பாளரான சொர்ணலதாவால், ஓட்டு போட முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.

இந்த முறை தேர்தலில், வழக்கமான புள்ளிகள், தலைவர்கள், மாஜிக்கள் போட்டியிட்டாலும் ஒருசில புதுமுகங்கள் மக்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தினர்.. புதுமுகங்கள் என்று இவர்களை சொன்னாலும், அரசியலின் ஆழம், வலி தெரியாதவர்கள் இல்லை.. அந்த வகையில் எதிர்பார்க்கப்பட்ட ஒரு வேட்பாளர்தான் சொர்ணலதா.

மநீம கூட்டணியின் ஐஜேகே சார்பில் போட்டியிட்டவர்.. பாமக கடுவெட்டி குருவின் மனைவி.. ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் திமுகவின் கேஎஸ்கே கண்ணன் ஆகியோருக்கு நடுவில் களம் புகுந்தவர்தான் சொர்ணலதா.

வன்னியர்கள்

வன்னியர்கள்

அரசியல் பரிச்சயம் அதிகம் இருந்தாலும், இந்த தொகுதியை பொறுத்தவரை வன்னியர்கள் நிறைந்த பகுதி.. அடுத்து, தலித்துகள் முதலியார் சமூகம் என கணிசமாக இருக்கின்றனர்.. எனினும், ஜெயங்கொண்டம் தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில், வன்னியர்களின் கைகளே ஓங்கி வருகிறது.
அதனால்தான், சொர்ணலதாவும் போட்டியிட்டுள்ளார்.. இதை நம்பிதான் பாமகவும் போட்டியிட்டுள்ளது..

 இளைஞர் படை

இளைஞர் படை

பாமகவின் பாலு பற்றி சொல்லவே தேவையில்லை.. தொகுதியில் மட்டுமல்ல தமிழகத்துக்கே பரிச்சயம் என்றாலும், பாமகவே கலங்கும் அளவுக்கு சொர்ணலதாவுக்கு தொகுதியில் பிரச்சாரங்களின்போது மவுசு கூடியது உண்மையே.. ஆயிரக்கணக்கான இளைஞர் படையுடன் ஊர்வலமாக சென்று சொர்ணலதா மனு தாக்கல் செய்தபோதே மற்ற கட்சிகள் மிரண்டு போய் பார்த்தன.. வன்னியர் சமுதாய நலனுக்காக குரு செய்த காரியங்கள், பாமக மீதான அதிருப்தி, போன்றவை சொர்ணலதாவுக்கு சாதகமாக இருக்கும் என்றுகூட அரசியல் நோக்கர்கள் கணிப்பாக சொல்லி உள்ளனர்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

இந்த சமயத்தில்தான் நேற்றைய தின தேர்தலும் நடந்து முடிந்தது.. ஆனால், சொர்ணலதாவால் ஓட்டு போட முடியாமல் போய்விட்டது.. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் வாக்களிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.. இவருக்கு ஆதரவு தெரிவித்து சமகவின் ராதிகா சரத்குமார், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், அக்கட்சி தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோரும் ஜெயங்கொண்டத்தில் தீவிரமாக வாக்கு சேகரித்திருந்தனர்.

 சிகிச்சை

சிகிச்சை

எனினும், திடீர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சொர்ணலதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.. திங்கட்கிழமையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுவிட்டதால், நேற்றைய தினம் நடந்த வாக்குப்பதிவில் சொர்ணலதாவால் ஓட்டுப்போட முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. எனினும், களத்தில் இவருக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்க போகிறது? குரு இழந்த பொறுப்பை சொர்ணலதா மேற்கொள்வாரா? பார்ப்போம்..!

English summary
Jayankondam IJK candidate Swarnalatha could not vote, due to ill health
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X