ஜேஇஇ மெயின் தேர்வு ஜூன் 20 முதல் 29 வரை நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
ஜேஇஇ முதன்மை தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர் அதனை ஏற்றுஜேஇஇ மெயின் தேர்வு ஜூன் 20 முதல் 29 வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
சென்னை: ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வு ஜூன், ஜூலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு ஜூன் 20 முதல் 29 வரை நடைபெறும் எனவும், 2ஆம் கட்டஜேஇஇ மெயின் தேர்வு ஜூலை 21 முதல் 30 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஜேஇஇ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும்.

இதில் முதல்நிலைத் தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெற்று வந்த நிலையில், 2022-23-ம் கல்வியாண்டில் இருந்து 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இந்தாண்டுக்கான முதல்கட்ட தேர்வு ஏப்ரல் 21 முதல் மே 4ஆம் தேதி வரையும், 2ஆம் கட்ட தேர்வு மே 24 முதல் 29ஆம் தேதி வரையும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை முன்னர் அறிவித்திருந்தது.
இதனிடையே முதன்மை தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ. முதன்மை தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.
ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த தேர்வு ஜூன், ஜூலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு ஜூன் 20 முதல் 29 வரை நடைபெறும் எனவும், 2ஆம் கட்டஜேஇஇ மெயின் தேர்வு ஜூலை 21 முதல் 30 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications