விக்ரமன் மீது பரபர புகார்.. பொய் சொல்கிறாரா கிருபா? ஸ்க்ரீன்ஷாட் கலரே மாறுதே - ஜோ மைக்கேல் கேள்வி
சென்னை: உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞரான கிருபா முனுசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விக்ரமன் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில் அவர் பகிர்ந்த ஸ்க்ரீன்ஷாட் எடிட் செய்யப்பட்டதுபோல் உள்ளதாக கூறி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் பிக்பாஸ் விமர்சகரும், யூடியூப் பிரபலமுமான ஜோ மைக்கல்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான விக்ரமன் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். அதில் 2 வது இடத்தை பிடித்த அவர் அறம் வெல்லும் என்ற பெயர் சட்ட உதவி மையத்தை தொடங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். விடுதலை சிறுத்தைகள் சார்பில் விவாதங்களிலும் பங்கேற்று வருகிறார்.

இவர் தன்னை காதலிப்பதாக கூறி பணம் பெற்று ஏமாற்றிவிட்டதாகவும், சாதி ரீதியாக அவமதித்ததாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக கடந்த மே மாதம் விசாரணை குழுவை அமைத்த திருமாவளவன் இருவரையும் நேரில் அழைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தற்போது விக்ரமன் தன்னுடன் வாட்ஸ் அப்பில் பேசியதாக கூறி ஏராளமான ஸ்க்ரீன்ஷாட்களையும், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்து கடுமையாக விமர்சித்து இருக்கிறார் கிருபா முனுசாமி. அவரது இந்த பதிவு அதிகளவில் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மிஸ் தமிழ்நாடு அழகி போட்டியின் நிறுவனரும், பிக்பாஸ் விமர்சகருமான ஜோ மைக்கேல் பிரவீன், கிருபா முனுசாமியின் ட்விட்டர் பதிவு மற்றும் அவர் பகிர்ந்த ஸ்க்ரீன்ஷாட்டுகளில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பி நீண்ட பதிவை எழுப்பி உள்ளார். அதில் கிருபா முனுசாமி பகிர்ந்த வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட்டில் விக்ரமன் என்ற பெயருக்கு அருகே மஞ்சள் நிறத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி எடிட் செய்யப்பட்டதைபோல் உள்ளதாக கேள்வி எழுப்பி உள்ளார்.
#Kirubhamunuswamy Accusation And Doubts !!
— Joe Michael Praveen (@RazzmatazzJoe) July 16, 2023
1. She had displayed a Narrative and Supporting Documents For that Narrative then first she need to Prove it in front of Judiciary that The Screenshots she displayed was True Not Photoshopped In the First Place In Evidence Act !!
2.…
அடுத்து அவர் வெளியிட்ட பதிவில்,
"1. அவர் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அதனை நிரூபிக்க சில ஆதாரங்களை காட்டுகிறார். முதலில் அவர் நீதித்துறையிடம் அதை நிரூபிக்க வேண்டும். எவிடன்ஸ் வழக்கின் கீழ் அவரது ஸ்க்ரீன்ஷாட்டுகள் உண்மையா போட்டோஷாப் செய்யப்பட்டதா என்பதை நிரூபிக்க வேண்டும்.
2. ஒவ்வொரு ஸ்க்ரீன்ஷாட்டில் வெவ்வேறு தேதிகள் இருப்பது பற்றி அவர் விளக்கவில்லை. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரவில்லை. அவரது நோக்கம் நீதி பெறுவதா அல்லது அவதூறு பரப்புவதா?
3. பணம் அனுப்பி இருந்தால், அது திரும்ப பெறப்பட்டதா? அல்லது நிலுவையில் உள்ள என்பதையும் சொல்லவில்லை.
4. விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விக்ரமனை நீக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக உள்ளது. நீதிமன்றத்தில் அவரை ஒப்படைக்க வேண்டும் என்பது இல்லை. பெண் வழக்கறிஞர் இவ்வாறு செய்வது சந்தேகமாக உள்ளது.
5. விக்ரமன் அவரை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாக எந்த ஸ்க்ரீன்ஷாட்டையும் நான் பார்க்கவில்லை. யாராவது பார்த்தால் சொல்லுங்கள்.
6. அனைத்து ஸ்க்ரீன்ஷாட்டுகளிலும் 2020, 2021 மற்றும் ஜனவரி 2022 வரை உள்ளது. 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொம்மை நாயகி பட நிகழ்விலும் அவர் விக்ரமனுடன் இயல்பாகவே நடந்துகொண்டார்.
7. விக்ரமன் மீது குற்றம்சாட்டுவதற்கு முன்பும் பின்பும் கிருபா முனுசாமி தனது அனைத்து பேஸ்புக் பதிவுகளையும் நீக்கியது ஏன்? அவர் பகிர்ந்த ஸ்க்ரீன்ஷாட்டுகளில் இருந்த ஆண்டுகளில் தன்னை சிங்கில் என்று கிருபா கூறிக்கொண்டார்.
8. அந்த முழு உரையாடலுமே அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை.
பாதிக்கப்பட்டவர் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அது கிருபா முனுசாமியாகவும் இருக்கலாம். விக்ரமனாகவும் இருக்கலாம். இந்த சந்தேகங்கள் எனக்கு ஏற்பட்டதுதான். நீதித்துறையால் மட்டுமே நீதியை வழங்க முடியும். ட்விட்டராலோ, எலான் மஸ்க் மற்றும் போலி ஐடிக்களால் அல்ல." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான்












Click it and Unblock the Notifications