ராகுலுக்கு வேலை இல்லை என்பதால் இளைஞர்களும் அப்படி இருக்கிறார்கள் என அர்த்தம் இல்லை..அண்ணாமலை அட்டாக்
சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வேலை இல்லை என்பதால் இந்திய இளைஞர்களும் அப்படி இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார்.
ராகுல் காந்திக்கு வேலை இல்லை என்பதற்காக இந்திய இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பிரபல ஆங்கில தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை கூறியதாவது:- வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் தென் இந்தியாவில் பாஜகவுக்கு நல்ல வெற்றிகரமானதாக அமையும்.

கட்சியின் வெற்றிக்கு மோடி ஃபேக்டர் முக்கிய பங்கு வகிக்கும். பிரதமர் மோடியை பாஜக தொண்டர் நான் பெருமையாக கூறுவேன். காங்கிரஸ் கட்சியின் கலாசாரத்தால் தேசிய கட்சிகள் தமிழகத்தில் மோசமான பெயரை பெற்றிருக்கிறது. ராகுல் காந்தி வேலை இல்லாமல் இருக்கிறார் என்பதற்காக இந்திய இளைஞர்கள் வேலைவாய்பு இன்றி இருக்கிறார்கள் என அர்த்தம் கொள்ளக் கூடாது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக சிறப்பாகவே செயல்பட்டு இருந்தது.
நாங்கள் வாக்கு சதவிகிதத்தை தக்க வைத்துக் கொண்டோம். புதுவையிலும் பாஜக கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கிறது. 2024 ஆம் ஆண்டு பாஜகவிற்கு சாதகமானதாக அமையும். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பாக தென் இந்திய அரசியல் மாறுபட்டு இருந்தது. தமிழ்நாட்டில் பாஜக மிக தாமதமாகவே தொடங்கியது. வாஜ்பாய் காலகட்டத்தில் பெரும் எழுச்சியை நாம் பார்த்தோம். 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு பாஜக நல்ல அபரிமிதமாக வளர்ந்துள்ளது" என்றார்.













Click it and Unblock the Notifications