வடிவேலு பார்த்திபன் காமெடி ஸ்டைலுக்கு மாறி.. விரலை கட் செய்த கே.எஃப்.சி.. "இது நல்ல சிக்கன்"மட்டுமே!
சென்னை: வடிவேலு பார்த்திபன் காமெடி போல் கேஎப்சி தனது பிரபல ஸ்லோகனான Finger Lickin good என்ற வார்த்தையை கொரோனா பரவல் காரணமாக கென்டக்கி நிறுவனமே நீக்கிவிட்டது.
கென்டக்கி பிரைடு சிக்கன் எனப்படும் கேஎஃப்சி சிக்கனுக்கு மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு அந்த நிறுவனத்தின் ரெசிபிக்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
ஜங்க் புட்களை உண்ணக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் இந்த கேஎஃப்சி சிக்கன் மீதான மோகம் மட்டும் இன்னும் குறையவே இல்லை.

பொருள்
இந்த நிறுவனத்தின் முக்கிய ஸ்லோகன் finger linkin good. அதாவது உண்ட பிறகும் விரலை சப்பும் அளவுக்கு ருசியாக இருக்கும் என்பதுதான் இதன் பொருள். அதனால் விரலை சப்புவது நல்லது என்ற முழக்கத்தை இவர்கள் தங்கள் பிராண்டை புரமோட் செய்ய பயன்படுத்தி வருகிறார்கள்.

கைவிரலை சப்புவது
தற்போதைய கொரோனா காலகட்டத்தில் கை விரலை குலுக்குவதே தவறு. இதில் கை விரலை சப்புவது எந்தளவுக்கு தவறு என்பதை உணர்ந்த நிறுவனம் அந்த ஸ்லோகனை நீக்கியது. இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில் தற்போதைய சூழலில் ஃபிங்கர் லிக்கின் குட் என்ற ஸ்லோகன் பொருத்தமானதாக இல்லை.

முகத்தில்
உயிர் கொல்லியான கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர முகத்தில் கூட கைகளை வைக்கக் கூடாது என சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வரும் நிலையில் நாங்கள் இதுபோல் வைத்துள்ள ஸ்லோகன் அவர்களின் அறிவிப்பிற்கு எதிரானதாகிவிடுகிறது.

மீண்டும் பயன்படுத்துவோம்
அதனால்தான் அந்த ஸ்லோகனை நீக்கினோம். ஆனால் நாங்கள் பரிமாறும் உணவு வகைககளில் எந்த வித மாற்றமும் இல்லை. இந்த கொரோனா பரவல் காலம் எல்லாம் முடிவடைந்தவுடன் அந்த ஸ்லோகனை நாங்கள் மீண்டும் பயன்படுத்துவோம் என தெரிவித்தது.

ஸ்லோகன் நீக்கம்
கடந்த 2019-ஆம் ஆண்டு நிலவரப்படி, 150 நாடுகளில் 22 ஆயிரம் இடங்களில் கேஎஃப்சி உள்ளன. தற்போது அதிகரித்திருக்கக் கூடும். இந்த ஸ்லோகன் நீக்கமானது வடிவேல் பார்த்திபனின் "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்" காமெடி போல் நல்ல சிக்கன் விற்கப்படும் என்பதை குறிப்பிடுவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications