கலைஞர் வாட்டர் பாட்டில்... மக்களை தேடி வரப்போகுது.. ஸ்டாலின் அரசு புதிய பிளான்
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் அம்மா குடிநீர் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் படிப்படியாக முடங்கிப்போன நிலையில், கலைஞர் குடிநீர் திட்டம் என்ற பெயரில் மீண்டும் அதை கொண்டுவர தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கடந்த 2013ம் ஆண்டு கொண்டுவந்த திட்டம் அம்மா குடிநீர்.
இதற்காக, கும்மிடிப்பூண்டியில், 2.47 ஏக்கரில், 10.5 கோடி ரூபாயில், குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.பேருந்து நிலையங்களில் 10 ரூபாய்க்கு, 1 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பேருந்து நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டது.

10 ரூபாய் குடிநீர்
பொது சந்தையில் தனியார் குடிநீர் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பான 1 லிட்டர் பாட்டில் நீரை 20 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், அம்மா குடிநீர் 10 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டதால் பொது மக்களிடமும், பயணிகளிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

நின்று போன திட்டம்
2016ல் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி அரசிலும் தொடர்ந்தது. இந்த நிலையில், இந்த திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த கடந்த எடப்பாடி தலைமயிலான அதிமுக அரசு சுனக்கம் காட்டியதால் 2020-ல் இந்த திட்டம் முடங்கியது . அம்மா குடிநீர் எங்குமே கிடைக்காத நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அம்மா குடிநீர் திட்டம் நின்று போனது.

கலைஞர் குடிநீர் திட்டம்
இந்த நிலையில், அந்த திட்டத்தை தற்போது கையிலெடுக்க போக்குவரத்துதுறை முடிவு செய்கிறது. இதற்கான முதல் கட்ட ஆலோசனையும் நடந்துள்ளது. விரைவில் கலைஞர் குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தரப்பு கூறுகிறது. முதல்வர் ஸ்டாலினின் இதற்கு பச்சை கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

சூப்பர் முடிவு
பொதுவாக ஆட்சியில் உள்ள கட்சிகள் தொடங்கும் திட்டத்தை அடுத்த கட்சிகள் மூடிவிடுவது வழக்கம் ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் சற்று வித்தியாசமாக கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, கடந்த ஆட்சியிலேயே மூடப்பட்ட திட்டத்தை மீண்டும் தொடங்கப்போகிறார். வரவேற்பை பெற்ற மலிவு விலை குடிநீர் வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் துவக்கி வைப்பார் என்று எதிர்பார்க்கலாம். தமிழகத்தில் கலைஞர் குடிநீர் இனி பேருந்துநிலையங்களில் விரைவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications