ம்ஹூம்..மகளிர் உரிமைத் தொகை ‘இவங்களுக்கு’ கிடைக்காது! மறந்தும் இந்த தப்பை செஞ்சுறாதீங்க! ரொம்ப கவனம்
சென்னை: தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விடுபட்ட பெண்கள் மற்றும் புதிய விண்ணப்பதாரர்கள் 29ஆம் தேதி முதல் புதிய விண்ணப்பங்களை அளித்து வருகின்றனர். விண்ணப்பிக்கும் போது நடக்கும் சிறு தவறும் உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்க வைக்கலாம். எனவே விண்ணப்பிக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அது மட்டும் இல்லாமல் அரசின் விதிகளின் கீழ் குறிப்பிட்ட வரம்புக்குள் வருபவர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காது.
2021இல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணம் மகளிர் உரிமை தொகை திட்டம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இந்தியா முழுவதும் பேசுபொருளானது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் சில காரணங்களால் மகளிர் உரிமை தொகை திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவில்லை.
2023 ஜூன் மாதமே அந்தத் திட்டம் அமலுக்கு வந்தது. அப்போது கூட இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகள் கொண்ட குடும்ப அட்டைகள் இருக்கும் நிலையில் ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இதனால் பலரும் அதிருப்தியில் இருந்தனர். மேலும் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இதை அடுத்து கடந்த பட்ஜெட்டில் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும் இதற்காக புதிய விண்ணப்பங்கள் பெறப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். தொடர்ந்து மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 9000 முகாம்கள் நடத்தப்பட்டு மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த 29ஆம் தேதி முதல் நேரடியாகவும் ஆன்லைனிலும் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், திருமணமானவர்கள், ஏற்கனவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் என இலட்சக்கணக்கானோர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர்.இவர்களுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் அதாவது ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மகளிர் உரிமைத்தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கும் போது ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு, 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும் நபரின் வங்கி பாஸ்புக் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். குறிப்பாக ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண்ணில் மட்டுமே இந்த மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்படும். மேலும் ஆதார் மற்றும் வங்கி பாஸ்புக் உடன் மொபைல் எண் கட்டாயம் இணைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்களுக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் அல்லது வரவு வைக்கப்பட்டாலும் குறுஞ்செய்தி வராமல் இருக்கும். எனவே விண்ணப்பிக்கும் போது மேற்கண்ட ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
யார் யாருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என்பது குறித்து பல தகவல்கள் இருந்தாலும், நிச்சயமாக கீழ்க்கண்ட நபர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. எனவே விண்ணப்பிப்பது மற்றும் தேவையற்ற மன உளைச்சலை இதன் மூலம் தவிர்க்கலாம். அந்த வகையில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள், இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் ஈட்டி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் மற்றும் வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது.
இரண்டு லட்சத்துக்கு மேல் தொழில்வரி செலுத்துபவருக்கும், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், வாரிய உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மகளிர் தொகை கிடைக்காது.
வார்டு உறுப்பினர்களை தவிர அதாவது எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இந்த தொகை கிடைக்காது.
கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் வைத்திருப்பவர்களுக்கும், ஆண்டுக்கு 50 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள், முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர் நலவு வாரிய ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வுரியம் பெறுபவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதி கிடைக்காது. மேற்கண்ட ஏதாவது ஒரு தகுதியின்மை இருந்தாலும் அவர்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பணம் வராது என்பதை கவனிக்க வேண்டும்.
-
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications