சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குட்டி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை.. கூடவே வைத்துக் கொண்டு.. வலம் வரும் கமல்ஹாசன்!

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் உள்ளிட்டோருக்கு எப்படி ஆலோசனை வழங்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இருப்பார்களோ அது போல் கமல்ஹாசனை சுற்றிலும் ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் இருப்பதால் அவர் இருக்கும் இடமே மினி ஜார்ஜ் கோட்டை போல் உள்ளது.

அரசியல் என்பது அனுபவத்தின் மூலம் கற்பது. வீட்டில் எப்படி வரவுக்கேற்ப செய்கிறோமோ அது போல் மாநிலத்திலும் செய்வது ஆகும். வீட்டில் உள்ளவர்களின் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்கிறோமோ அது போல் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய நலத்திட்டங்களை கொண்டு வருவது ஆகும்.

நல்லது செய்தால் பாராட்டுவதும் தவறு செய்தால் தட்டி கேட்பதும் ஒரு அரசியல்வாதியின் கடமையாகும். அது போல் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கு முன்பிலிருந்தே தவறை தட்டிக் கேட்டும் அரசை பாராட்டியும் இருந்தார்.

இதுவரை 12 பேர்.. ஜெ.வும் இல்லை.. கருணாநிதியும் இல்லை.. புது முதல்வர் யாரு?இதுவரை 12 பேர்.. ஜெ.வும் இல்லை.. கருணாநிதியும் இல்லை.. புது முதல்வர் யாரு?

மகேந்திரன்

மகேந்திரன்

அவர் 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இவரது கட்சியில் மருத்துவரான மகேந்திரன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கோவையை சேர்ந்தவர். நேர்மையாளர், கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிட்ட இவர் 1.45 லட்சம் வாக்குகளை பெற்றார். மக்கள் நீதி மய்யத்தில் போட்டியிட்டவர்கள் அதிக வாக்குகளை பெற்றவர் இவர்.

நாடாளுமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல்

அடுத்தது ரங்கராஜன், இவர் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். தற்போது ஆபிசர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் அசோசியேட் டைரக்டர் மற்றும் பயிற்சியாளராக இருந்து வருகிறார். ஐஏஎஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் அகாதெமி இதுவாகும். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றியிருந்தார். இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை பகுதியில் போட்டியிட்டு 1,35,465 வாக்குகளை பெற்றார்.

ஐஏஎஸ் அதிகாரி

ஐஏஎஸ் அதிகாரி

அடுத்தது சந்தோஷ் பாபு. இவர் அண்மையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். ஐஏஎஸ் அதிகாரியான இவர் விருப்ப ஓய்வு பெற்றார். இவர் தொழில்நுட்பத் துறையின் செயலாளராக இருந்தார். இவர் மருத்துவம் பயின்றவர். இவர் தமிழக முதல்வருக்கு சிறப்பு அதிகாரி, தமிழக பெண்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாக இயக்குநர், எல்காட்டின் நிர்வாக இயக்குநர், தமிழக கைத்தறி மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வந்தார். அநேகமாக இவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

யோசனைகள்

யோசனைகள்

இவர் தனது பதவிக் காலத்தில் நேர்மையாக இருந்தவர் என பெயர் பெற்றுள்ளார். நல்ல பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இவர் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியான துறை ரீதியிலான 7 அம்ச திட்டங்களையும் தேர்தல் வாக்குறுதிகளையும் வடிவமைத்தவர்களில் இவரும் ஒருவர். பொருளாதாரத்தை எப்படி திரும்ப பெறுவது என்பது குறித்தும் இவர் கமல்ஹாசனுக்கு சில யோசனைகளை தெரிவித்துள்ளார்.

சிறப்பு பாதுகாப்பு குழு

சிறப்பு பாதுகாப்பு குழு

அடுத்தது ஏ.ஜி. மயூர்யா, இவர் மக்கள் நீதி மய்யத்தின் (வட மற்றும் கிழக்கு தமிழகம்) பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியாவார். இவர் சமூக விரோதிகளால் எளிதில் கடத்தப்படும் பள்ளிக் குழந்தைகள் சிறப்பு பாதுகாப்பு குழுவில் இருந்தார். தெருக்களில் ஆதரவற்று கிடப்போரை பாதுகாக்கிறார். இவர் வடசென்னையை சேர்ந்தவர். கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் இருந்து மின்சாரம் தயார் செய்யும் திட்டம் குறித்து பேசியுள்ளார்.

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

வடசென்னையில் உள்ள 72 குடிசை வாழ் பகுதிகளுக்காக போராடுபவர். தொகுதி மக்களின் குடிநீருக்காக போராடுபவர். இவர் காற்று மாசு மற்றும் நிலத்தடி நீர் மாசு குறித்தும் பேசி வருகிறார். ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே இவரது லட்சியமாக உள்ளது. இப்படி கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்புகள், சட்டம் ஒழுங்கு, தொழில் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் துடிக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மருத்துவர்கள், உயர் அதிகாரிகள் என ஒரு மினி புனித ஜார்ஜ் கோட்டையையே தன்னை சுற்றி வைத்துள்ளார் கமல்ஹாசன்.

English summary
Makkal Needhi Maiam President Kamal Haasan is having mini St George fort in his office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X