சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிவிட்டாரா கமல்?.. கோவையிலிருந்து பயணம் தொடங்குகிறதா?

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தயாராக தொடங்கிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதையும் கோவையிலிருந்து தொடங்குகிறாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தொகுதிகளில் பிரச்சாரம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

இதையடுத்து தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் நட்சத்திர போட்டியாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் மீது எதிர்பார்ப்புகள் எழுந்ததை போல் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி எதுவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.

கோவை தெற்கு தொகுதி

கோவை தெற்கு தொகுதி

இதையடுத்து அவர் கோவை தெற்கு பகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதிக்கு சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார். நடைப்பயிற்சிக்கு சென்றவர்களிடமும் மாஸ்க் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்தபடியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

அது போல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தினார். இந்த தேர்தலில் அவர் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்ததால் அவர் நிச்சயம் சட்டசபைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாலை நேரத்தில் எண்ணப்பட்ட சுற்றுகளில் வானதி அதிக வாக்குகளை பெற்று வென்றார்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டி

உள்ளாட்சித் தேர்தலில் போட்டி

இதையடுத்து தற்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வியூகங்களை கமல் வகுத்து வருகிறார். தேர்தலுக்கு தயாராகும் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் நாளை கோவைக்கு செல்கிறார். அங்கு மக்களை சந்திப்பதற்காகவும் அவரது கட்சி சார்பில் நலத்திட்டங்களை வழங்குகிறார். இரு தினங்கள் அங்கு இருப்பார் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள்

வேட்பாளர்கள்

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிக வாக்குகளை பெற்ற ஒரே நபர் கமல்ஹாசன்தான். மேலும் கடந்த தேர்தலில் 2-ஆம் இடத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை 3-ஆவது இடத்திற்கு தள்ளினார். அந்த அளவிற்கு அரசியலுக்கு புதிய முகமாக இருந்தாலும் கமலுக்கு கோவை தெற்கு மக்கள் பேராதரவை கொடுத்துள்ளார்கள்.

கமல் தயாராகிறாரா

கமல் தயாராகிறாரா

எனவே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு கோவை தொகுதியில் இருந்தே கமல் தயாராகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது டாக்டர் மகேந்திரனின் செல்வாக்கு கமலுக்கு கிடைத்தது. இந்த முறை மகேந்திரன் திமுகவில் இணைந்துவிட்டார். எனவே தற்போது கமலுக்கு கோவை தொகுதியை பொருத்தமட்டில் உள்ளாட்சி தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் கமல் விஸ்வரூபம் எடுக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Makkal Needhi Maiam Kamal Haasan is ready for TN Civic polls 2021?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X