கமல்ஹாசன் சொத்து மதிப்பு எவ்வளவு? கடன் இவ்வளவா? ராஜ்யசபா வேட்பு மனு மூலம் வெளியான தகவல்!
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் நேற்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில் தமது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 ராஜ்யசபா பதவியிடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் ராஜ்யசபா தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக சார்பாக 4 பேரை தேர்வு செய்ய முடியும். அதிமுக சார்பாக 2 பேரை தேர்வு செய்ய முடியும்.

ராஜ்யசபா தேர்தல்
இதனையடுத்து திமுக சார்பாக வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, திமுக நிர்வாகி சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இதே போல அதிமுக சார்பாக வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
வேட்புமனு தாக்கல் வரும் ஜூன் 9 ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் நேற்று தங்களது வேட்புமனுவை தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தனர். இதனையடுத்து கமல்ஹாசன் உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த மனுவில் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் சொத்து மதிப்பு
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், சென்னை புரசைவாக்கம் சர் எம் சிடி. முத்தையா செட்டியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் தமக்கு 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.78.90 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி. ஒட்டுமொத்த அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.245.86 கோடி. கடனாக ரூ.49.67 கோடி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை, உத்தண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் மொத்தம் நான்கு வணிகக் கட்டிடங்களை அவர் வைத்திருக்கிறார். இவற்றின் மொத்த சந்தை மதிப்பு ரூ.111.1 கோடி. திண்டுக்கல்லில் உள்ள வில்பட்டி கிராமத்தில் ரூ.22.24 கோடி மதிப்புள்ள விவசாய நிலமும் கமலுக்கு உள்ளது.
கமல் மொத்த சொத்து மதிப்பு
மேலும், கமல்ஹாசன் கையிருப்பில் உள்ள ரொக்கம் ரூ.2.60 லட்சம். மகேந்திரா பொலிரோ, மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ., லக்சஸ் ஆகிய நான்கு கார்கள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த சொத்து மதிப்பு 305.55 கோடி ரூபாய் என்று கமல் குறிப்பிட்டுள்ளார். கமலின் வருமானம் 2019-2020 ஆம் ஆண்டில் ரூ.22.1 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.78.9 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021ல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் வேட்பு மனுவுடன் சொத்து விவரங்களை தாக்கல் செய்திருந்தார். அப்போது, கமல் ஹாசன் தமக்கு 45,09,01,476 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 131,84,45,000 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்திருந்தார்.
மொத்த சொத்து மதிப்பு 176.93 கோடி ரூபாய் என்றும், தமக்கு 49 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 10 ரூபாய் கடன் இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
மக்கள் நீதி மய்யம்
மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி அரசியல் பிரவேசம் செய்தார் கமல்ஹாசன். கட்சி ஆரம்பித்த சமயத்தில் பிரபலங்கள் அவரது கட்சியில் சேர்ந்தனர். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அடிக்கடி ஆலோசனை என அதிரடி காட்டினார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் முதன் முறையாக தேர்தல் களம் கண்ட மக்கள் நீதி மய்யம் 3.72% வாக்குகளைப் பெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்திருந்தாலும், பல நகர்ப்புற தொகுதிகளில் நாதக, அமமுகவை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
திமுக ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பி
2021 சட்டமன்றத் தேர்தலில் 182 இடங்களில் போட்டியிட்ட மநீம 2.62 சதவீத வாக்குகளைப் பெற்றது. கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தார்.
2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்தார் கமல். அதற்கு ஈடாக மாநிலங்களவை தேர்தலில் கமலஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தது. அதன் அடிப்படையில் தற்போது நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஒரு சீட்டை கமல்ஹாசனுக்கு கொடுத்துள்ளது. இதன் மூலம் ராஜ்யசபாவுக்குள் அடியெடுத்து வைக்கிறார் கமல்ஹாசன்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications