மருத்துவமனையில் கமல்ஹாசன்.. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகலா?.. வேதனையில் ரசிகர்கள்
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சில வாரங்களுக்கு விலகுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் அவருக்கு பதில் அந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் நடந்துள்ளன.
தற்போது 5ஆவது சீசன் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

கமல்ஹாசன்
முதல் சீசனில் இருந்த சுவாரஸ்யம் அடுத்தடுத்த சீசன்களில் இல்லை என்பதால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கமலுக்காக நிகழ்ச்சியை பார்ப்போர் அதிகரித்துள்ளனர். இந்த இரு நாட்களிலும் கமல்ஹாசன் அரசியல் பேசுவார், புத்தகங்களை பரிந்துரைப்பார், போட்டியாளர்களை லேசாக தட்டி கொடுப்பார், அபிஷேக் ராஜா போல் இருந்தால் கொட்டியும் விடுவார்.

கமலுக்கு கொரோனா
இந்த நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ள நிலையில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உடல்நிலை சீரானது
அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவர் சில நாட்களுக்கு மருத்துவமனையில் இருப்பார் என தெரிகிறது. இதனால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் கலந்து கொள்ளும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவர் சில வாரங்களுக்கு விலகியிருக்கலாம் என தெரிகிறது.
Recommended Video

கமல் விலகல்?
கமலுக்காகவே அந்த நிகழ்ச்சியை பார்த்து வரும் ரசிகர்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை எண்ணி வேதனையில் உள்ளார்கள். கமலுக்கு பதிலாக வரும் வாரங்களில் யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மேலும் கமலை விட வேறு யாராலும் இது போல் தொகுத்து வழங்க முடியாது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications