• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

அப்படியே காஸ்ட்ரோ மாதிரியே.. ராத்திரியோடு ராத்திரியாக டிரோல் ஆன கெட்டப்.. கலக்கும் கமல்

|

சென்னை: அப்படியே பிடல் காஸ்ட்ரோ மாதிரியே கெட்டப்பில் வந்து நின்ற கமலை பார்த்ததுமே ஒட்டுமொத்த பார்வையாளர்களும் ஒருகணம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டனர்.. ராத்திரியோடு ராத்திரியாக கமலின் இந்த புது கெட்டப்பை சோஷியல் மீடியாவில் டிரோல் செய்தும் வருகின்றனர்.

பொதுவாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மேடையை, தன்னுடைய அரசியல் மேடையாகவே பயன்படுத்தி வருகிறார் கமல்ஹாசன் என்று ஏற்கனவே சொல்லப்பட்டு வருகிறது.

இது முதல் சீசனில் இருந்தே முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு என்றாலும் கமல் இதை கண்டுகொள்வதே கிடையாது. இப்போதுவரை அதிமுக, திமுக என எல்லாரையுமே போட்டு தாக்கி வருகிறார்.

காமெடி

காமெடி

இதைதவிர, சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள், குறைகள், அவலங்களையும் பிக்பாஸ் மேடையிலேயே அப்பட்டமாக சொல்லி, உலகமெல்லாம் கொண்டு போய் சேர்க்கிறார் கமல்.. ஆனால் அதை சீரியஸாக சொல்லாமல், நக்கலாகவும், குத்தலாகவும், காமெடியாகவும் இடித்துரைத்து வருகிறார்.

 ரசிகர் கூட்டம்

ரசிகர் கூட்டம்

ஆனால் விரைவில் தேர்தல் வருவதாலோ என்னவோ, இந்த முறை சற்று தூக்கலான மாற்றம் காணப்படுகிறது.. முக்கியமாக அவர் அணியும் உடைகள் கவனிக்கப்பட்டு வருகிறது.. வாராவாரம் கமல் அணியும் டிரஸ்ஸுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கும்.. சில தினங்களுக்கு முன்பு ஒரு கருப்பு ஊதா நிறத்தில் கோட் சூட் ஒன்றை அணிந்திருந்தார்..

 ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்

அந்த சூட்டின் ஹாண்ட் ஸ்லீவில் தனது மக்கள் நீதி மய்ய கட்சியின் கொடியின் சின்னம் காணப்பட்டது.. எதற்காக இப்படி சின்னத்துடன் வந்தார் என்று தெரியவில்லை.. கையை ஆட்டி ஆட்டி பேசி கொண்டிருந்தார். உடனே கமல் ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் #எங்கள்ஓட்டுகமலுக்கு என்ற ஹேஷ்டேக்கை ராத்திரியோடு ராத்திரியாக ட்ரெண்ட் ஆக்கியும் விட்டனர்.

 பிடல் காஸ்ட்ரோ

பிடல் காஸ்ட்ரோ

அந்த வகையில் நேற்றைய கெட்டப்பும் வித்தியாசமாக இருந்தது.. புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ கெட்டப்பில் கமல் வந்திருந்தார்.. காஸ்ட்ரோ போலவே பச்சை கலர் டிரஸ், கழுத்து வரை பட்டன், இடுப்பில் பெல்ட், என அமர்க்களமாக வந்து நின்றார் கமல்.. இதுவும் மய்ய உறுப்பினர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது.. போட்டியாளர்கள் சிலரே, சார் உங்க டிரஸ் ரொம்ப நல்லாயிருக்கு என்றனர்.. பாலாஜி ஒரு ராயல் சல்யூட்டே அடித்துவிட்டார்.. சிலர் இந்தியன் கெட்டப் போல இருக்கிறது என்றனர்.. ஆனால், அது காஸ்ட்ரோ கெட்டப் என்பதை யாரும் அறியவில்லை போலும்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

ஒருபக்கம் வரவேற்பு இருந்தாலும், கமலுக்கு எதிராக ஒருசிலர் இதையும் பேச ஆரம்பித்துள்ளனர்.. "இப்படித்தான் மோடி பாணியில் பல வேடமிடுவார்.. கேட்டால் இடதுமில்லை, வலதுமில்லை, நான் நடு என்று சொல்லி கொள்வார்.. புத்தகம், இலக்கிய ஆளுமைகள் என இடதுசாரிகளை எப்போதும் தன்னுடன் இணைத்து கொள்வார்.. ஆனால், மனுஸ்மிருதி பற்றி வாயே திறக்காமல் நழுவி கொள்வார்.

 வெறும் வேடம்

வெறும் வேடம்

இப்படி வித வித கெட்டப்புகளை போடுவதால் மட்டுமே, மக்கள் மனதில் யாரும் நிறைந்திருக்க போவதில்லை.. இதெல்லாம் ஒருவேடம்தான்.. சினிமா கலைஞர்கள் வேடம் போடுவது இயல்புதான்.. 3 மணி நேரம் சின்னத்துடன் ஒரு கட்சி தலைவர் டிவியில் ஷோ செய்தது போலவேதான் இதையும் எடுத்து கொண்டு நகர்ந்து விட வேண்டி உள்ளது" என்றனர்.

 
 
 
English summary
Kamalhasan dressing style like Fidel Castro: Bigg boss 4
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X