திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை.. கனிமொழி கொடுத்த முக்கிய அப்டேட்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகின்றன. அதை சரி செய்வதற்காக அடுத்தடுத்து முக்கிய சந்திப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து கனிமொழி [Kanimozhi] முக்கிய தகவல் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. 4 முனை போட்டியால் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி
திமுக - காங்கிரஸ் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. திமுக தங்களின் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டனர். காங்கிரஸ் கட்சியினர் மதில் மேல் பூனையாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை, காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் சந்தித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து கனிமொழி எம்பி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் சந்திப்பு மரியாதை நிமத்தமானது. இதில் வேறு எதுவும் பேசவில்லை. தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக இனிதான் பேச வேண்டும். முதலமைச்சருக்கு எதை எப்படி செயல்படுத்த வேண்டும், முன்னேறி செல்ல வேண்டும் என்பது என தெரியும்.
மகளிருக்கான உரிமை
ஒவ்வொரு பூத்திலும் 10 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தொடங்கியுள்ளனர். சட்டமன்ற தேர்தலில் என் பெயரில் விருப்ப மனு அளித்தது பற்றி நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. மகளிர் எந்தளவுக்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது முதலமைச்சருக்கு நன்கு தெரியும்.
மகளிரின் உரிமைகளுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2 மாநாடுகள் நடத்தி எல்லாவற்றையும் தெளிவுபடுத்தியுள்ளோம். இது மகளிருக்கான ஆட்சி என்று சொல்லுமளவுக்கு திட்டங்கள் வருகின்றன. மகளிருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சமூக அங்கீகாரத்திற்கான ஆட்சியாக இந்த ஆட்சி அமைந்துள்ளது. அந்த முதலமைச்சர் மகளிருக்கு அரசியல் அங்கீகாரம் வழங்குவார் என்கிற நம்பிக்கை உள்ளது" என்றார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications