இன்று கருணாநிதி பிறந்தநாள்.. மரியாதை செலுத்திய ஸ்டாலின்! விருது + 4 ஆண்டு சாதனை மலர் வெளியீடு
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் ‛செம்மொழி நாள்' விழாவாக இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் உருவப்படத்துக்கும், மெரினாவில் உள்ள நினைவிடத்துக்கும் மலர்தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கலைவாணர் அரங்கத்தில் நடக்கும் விழாவில் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கப்பட்டதோடு, அகவை முதிர்ந்த தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை ஒப்பளிப்பு ஆணை வழங்கினார். பிறகு நான்காண்டு சாதனை மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்..
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு கருணாநிதி. இப்போது மறைந்துவிட்டார். கருணாநிதியின் 102வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் ‛செம்மொழி நாள்' விழாவாக கருணாநிதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஸ்டாலின் உடன் மரியதை செலுத்தினர்.
அதேபோல் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
காலை 10.15 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் ‛செம்மொழி நாள் விழா' கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். அதன்பிறகு கலைஞர் மு கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய நூல்கள் வெளியிடப்படப்பட்டது.
அதன்பிறகு அகவை முதிர்ந்த தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை ஒப்பளிப்பு ஆணை வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலர் வெளியிடப்பட்டது.
-
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications