சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆசை ஆசையாய் KFC சிக்கன் ஆர்டர் செய்த நபர்.. ஸ்விகி மூலம் வந்த பார்சல்.. திறந்து பார்த்தால்.. ஓ காட்

கேஎப்சியில் வேகாத சிக்கனை டெலிவரி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: வாடிக்கையாளர் ஒருவருக்கு, அம்பத்தூர் கேஎப்சியில் சிக்கன் டெலிவரி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.

2 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு சம்பவம் நடந்தது.. திருவெற்றியூர் பகுதியில் வசிப்பவர் ஹரிஹரன். இவர் ஆன்லைன் மூலமாக, எஸ்எஸ் ஹைதராபாத் சிக்கன் பிரியாணி கடையில், சிக்கன் பிரியாணியும், சிக்கன் லாலிபாப்பும் ஆர்டர் செய்துள்ளார்.

ஆர்டர் செய்த சிறிது நேரத்தில் உணவு டெலிவரி செய்யப்பட்டது. ஆனால், ஆர்டர் செய்த பிரியாணி கெட்டுப்போனதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிக்கன் லாலிபாப்பும் துர்நாற்றம் வீசியுள்ளதாக தெரிகிறது..

உயிரை குடித்த சிக்கன் பிரியாணி.. சோகமான வளைகாப்பு விழா..திருவாரூர் மருத்துவமனையில் 5 பேர் அனுமதி உயிரை குடித்த சிக்கன் பிரியாணி.. சோகமான வளைகாப்பு விழா..திருவாரூர் மருத்துவமனையில் 5 பேர் அனுமதி

 SS பிரியாணி

SS பிரியாணி

இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிஹரன், சம்பந்தப்பட்ட ss ஹைதராபாத் பிரியாணி என்ற ஓட்டல் நிர்வாகத்திடம் நேரடியாக சென்று விளக்கம் கேட்டுள்ளார். நிர்வாகத்தினரும், வேறு பிரியாணி தருவதாக சொல்லவும், ஆத்திரமடைந்த ஹரிஹரன், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு போன் மூலம் புகார் தரவும் அது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. இந்நிலையில், கேஎப்சியில் இருந்து டெலிவரி செய்யப்பட்ட சிக்கன் வேகாமல் இருந்ததாக மற்றொரு புகார் கிளம்பி உள்ளது.

 GRILLED CHICKEN

GRILLED CHICKEN

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் சேகர்.. ஸ்விகி ஆன்லைன் உணவு டெலிவரி மூலம் KFC-ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்துள்ளார்... ஆர்டர் செய்யப்பட்ட உணவு, வந்தவுடன் அதனை வாங்கி திறந்து பார்த்துள்ளார்... அப்போது அந்த சிக்கன் வேகாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து கேஎப்சி அம்பத்தூர் கிளையில் புகார் தெரிவித்துள்ளார்.. ஆனால் அவர்கள் எந்த பதிலும் இதற்கு சொல்லவில்லை என தெரிகிறது.. அதனால், நடந்த சம்பவம் அத்தனையையும், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுவிட்டார்..

 SWIGGY

SWIGGY

அத்துடன், இந்த பதிவை, SWIGGY நிறுவனம், KFC நிறுவனம் மற்றும் இந்திய உணவு தர கட்டுப்பாட்டு வாரியம் (FSSAI) ஆகியவற்றையும் tag செய்துவிட்டார்.. இதற்கு ஸ்விகி + கேஎப்சி நிறுவனங்கள் பதிலளித்து, தங்கள் செயலுக்கு வருத்தமும் தெரிவித்துள்ளன.. அத்துடன், இது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்வதாகவும் உறுதி கூறியுள்ளனர்.. இதற்கு நடுவில், சமைக்காத சிக்கனை கஸ்டமருக்கு தந்தது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்..

 KFC Delivery

KFC Delivery

அப்போது, சேகர் என்பவருக்கு வழங்கப்பட்ட சிக்கன் மட்டுமே, வேகாத நிலையில் வழங்கப்பட்டதாக கேஎசி சார்பில் சொல்லப்பட்டது.. எனினும், கேஎப்சில் எந்த புகார் பதிவிட்டாலும், அதற்கு எந்த பதிலையும் நிர்வாகம் சொல்வதில்லை என்று KFC வாடிக்கையாளர் வேதனை தெரிவித்து வருகின்றனர். கெட்டுப்போன சிக்கனை அம்பத்தூர் கேஎப்சியில் இருந்து டெலிவரி செய்தது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

KFC விளக்கம்

KFC விளக்கம்

"KFC இந்தியாவில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த அளவிலான உணவுப் பாதுகாப்பை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எங்கள் உணவகங்களில் வழங்கப்படும் அனைத்துகோழி இறைச்சி உணவு வகைகளும் தினமும் புதிதாகத் தயாரிக்கப்படுகின்றன.

குறிப்பாக ஸ்மோக்கி ரெட் சிக்கன் உணவு வகை (Smoky Red chicken variant) 180 முதல் 250 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் பொறிக்கப்படுகின்றன. கூடுதலாக, KFC உணவகங்களில் நாங்கள் பரிமாறும் கோழி, சப்ளையர்களின் பண்ணையில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு 34 தர சோதனைகளுக்கு உட்பட்ட பிறகே வழங்கப்படுகின்றன.

KFC இல் வழங்கப்படும் தயாரிப்புகள் மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை மற்றும் நுகர்வுக்கு முற்றிலும் பாதுகாப்பானவை என்பதை வாடிக்கையாளர்களுக்கு உறுதிப்பட தெரிவித்துக்கொள்கிறோம்

English summary
KFC Chicken delivered uncooked meat via swiggy and customer complaints
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X