கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்..பிப்.15ல் திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..சிஎம்டிஏ உறுதி
சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தின் திறப்பு விழா பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் என்று சிஎம்டிஏ தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்தும் மற்ற மாநிலத்தில் இருந்தும் சென்னைக்கு பயணிக்கும் வாகனங்கள் அதிகரித்து வருகிறது. இதில் பேருந்து மூலம் பயணம் செய்பவர்கள் சென்னைக்கு வருகை தந்தால் கோயம்பேட்டில் உள்ள பேருந்து முனையத்தை மட்டுமே நாடி இருக்கவேண்டிய நிலை இருந்தது. இதனால் சென்னையின் புறநகரில் வசித்து வரும் பயணிகளுக்கு பேருந்து முனையத்திற்கு பயணம் செய்வதே சவாலாக இருந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, சென்னையில் அடுத்த பெரிய பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பயணிகளுக்கு இலகுவாக இருக்கும் வகையில் மெட்ரோ ரயில் மற்றும் புதிய புறநகர் ரயில் நிலையம் ஆகியவற்றை கட்டவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ. அன்பரசன் ஆய்வு செய்தனர். இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல பேருந்து நிலையங்கள் இருந்தால்தான் நெரிசல் குறையும்.

சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 88 ஏக்கரில் ரூ.393.74 கோடி மதிப்பிட்டில் பணிகள் நடந்து வருகிறது. பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவாக கிளாம்பாக்க பேருந்து நிலைய பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னைக்கு இன்னும் 2 பேருந்து நிலையங்கள் தேவைப்படுகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை பொங்கலுக்குள் முடிக்க முயற்சி செய்வோம் என அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். தீபாவளி, பொங்கல் என்று அடுத்தடுத்து திறப்பு விழா குறித்த தகவல்கள் வெளியான நிலையில் தற்போது திறப்பு தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி பிப்ரவரி 15ஆம் தேதி கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நடைபெறும் என்று சிஎம்டிஏ தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் தென் மாவட்டங்களுக்கு இங்கிருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலும் பெருமளவில் குறையும் என்பது நிச்சயம்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications