"அந்த வண்டியிலயா, நானா?".. பட்டென சொன்ன கிருத்திகா உதயநிதி.. மிரண்டு போன செய்தியாளர்கள்.. செம ஜாலி
கிருத்திகா உதயநிதி செய்தியாளர்களுக்கு ஜாலியான பேட்டி தந்துள்ளார்
சென்னை: சாவு வண்டி குறித்த கேள்வி ஒன்றுக்கு, கிருத்திகா உதயநிதி ஜாலி பதில், இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.. இவ்வளவு கேஷூவலாக கிருத்திகா பேசுகிறாரே என்று இணையவாசிகள் வியந்து வருகின்றனர்.
Recommended Video
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், டைரக்டருமான கிருத்திகா உதயநிதி ஸ்டாலின், சமூக அக்கறை நிறைந்தவர்..
பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்காக நடத்தி கொண்டிருப்பவர்... இதற்காகவே எளிய மக்களை தேடி சென்று அவர்கள் பயன்பெறும் வகையில், விழிப்புணர்வை ஊட்டி கொண்டிருப்பவரும்கூட..
இதைதவிர, பெண்கல்வி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விடாமல் பேசி வருபவர்.. அதேபோல, கழிவறையின் அவசியம் குறித்தும் பொதுக் கழிவறையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தது பொதுமக்களிடம் பாராட்டி பேசப்பட்டது..

கிருத்திகா
இந்நிலையில், கிருத்திகா உதயநிதி 'பேப்பர் ராக்கெட்' என்ற வெப்சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளார். காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், கே.ரேணுகா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடிப்பில் ஜீ 5 ஓடிடி தளத்தில் இந்த வெப்சீரிஸ் வெளியாகி உள்ளது.. இந்த தொடரை பார்த்த உதயநிதி, நன்றாக இருக்கிறது என்று பாராட்டியதுடன் வெப் தொடரின் சீசன் 2 க்காக காத்திருக்கிறேன் என்றும் ட்விட்டரில் முன்னதாக பதிவிட்டிருந்தார்.

பேப்பர் ராக்கெட்
இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் கிருத்திகா உதயநிதி பேசினார்.. அப்போது "பேப்பர் ராக்கெட்- சீரியல் குறித்து விளக்கமாக சொன்னார்.. "நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது... சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த தொடரை பார்க்கலாம். அழுகை, சிரிப்பு என எல்லா உணர்வுகளையும் பேப்பர் ராக்கெட் பிரதிபலிக்கும்... இறப்பு எல்லோருடைய வாழ்க்கையிலும் வரும். அதனால் நாம ஏன் அதை நினைத்து கவலைப்படணும், மாறாக அதை கொண்டாடலாம் என்ற வேறு கண்ணோட்டத்தில் தான் இந்த தொடர் எடுக்கப்பட்டது" என்றார்.

சாவு வண்டியா?
அப்போது ஒரு செய்தியாளர், "இறப்பிற்கு பிறகு எடுத்துசெல்லப்படும் வண்டியை நீங்கள் ட்ரிப்பிற்காக பயன்படுத்தியுள்ளீர்களே" என்று கேட்டார்.. அதற்கு கிருத்திகா, என்னது சாவு வண்டியைவா? என்று சொல்லி சிரித்தார்.. பிறகு தொடர்ந்தார்.. "நான் சாவையே ஒரு ட்ரிப்பாகதான் பார்க்கிறேன். சாவுன்னு சொல்றதுக்கே பயப்படுகிறோம்... அதுனாலதான் இந்த தொடரில் ஒரு சாவு வண்டியை ட்ரிப் வண்டியாக மாற்றினோம். இறந்தவர்களை சாவு வண்டியில் எடுத்து செல்லும் போது அழுறோம், வருத்தப்படுறோம். ஆனால் அவர்களும் அந்த வண்டியில் எங்கேயோ பயணிக்கிறார்கள் என்று நினைத்து கொண்டால் மனதிற்கு சிறிய ஆறுதல் கிடைக்கும்" என்றார்.

ரோட் டிரிப்ஸ்
அந்த வகையில், நீங்கள் பயணம் செய்த டிரிப் எது? என்று செய்தியாளர் இன்னொரு கேள்வியை கேட்டார்.. "நானே கார் எடுத்துட்டு டிராவல் பண்ணி இருக்கேன்.. நிறைய இடங்களுக்குபோயிருக்கேன்.. சின்ன வயசில இருந்தே ரோட் டிரிப்ஸ் நிறைய போயிருக்கேன்.. தமிழ்நாடு முழுவதுமே என் அம்மா, அப்பா அண்ணனுடன் டிராவல் பண்ணியிருக்கேன்.. கொடைக்கானலில் இருந்து ஊட்டி, ஏற்காடு, ஏலகிரி என எல்லா இடங்களுக்கும் போவோம்... ரோட் டிரிப் என்றால் அவ்வளவு பிடிக்கும்" என்றார் கிருத்திகா. அந்த வகையில், நீங்கள் பயணம் செய்த டிரிப் எது? என்று செய்தியாளர் இன்னொரு கேள்வியை கேட்டார்.. "நானே கார் எடுத்துட்டு டிராவல் பண்ணி இருக்கேன்.. நிறைய இடங்களுக்குபோயிருக்கேன்.. சின்ன வயசில இருந்தே ரோட் டிரிப்ஸ் நிறைய போயிருக்கேன்.. தமிழ்நாடு முழுவதுமே என் அம்மா, அப்பா அண்ணணுடன் டிராவல் பண்ணியிருக்கேன்.. கொடைக்கானலில் இருந்து ஊட்டி, ஏற்காடு, ஏலகிரி என எல்லா இடங்களுக்கும் போவோம்... ரோட் டிரிப் என்றால் அவ்வளவு பிடிக்கும்" என்றார் கிருத்திகா.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?











Click it and Unblock the Notifications