Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொங்கு லாபியை காலி செய்த முக்குலத்தோர்? கடும் அப்செட்டில் சீனியர்கள்! என்னதான் நடக்கிறது அதிமுகவில்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர் என முக்கியப் பதவிகளோடு, எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியையும் முக்குலத்தோர் சமூகத்துக்கே வழங்கியுள்ள நிலையில், கொங்கு மண்டல நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக ஊடகங்களில் ஆவேசமாகப் பேசி வந்த சில நிர்வாகிகள் தற்போது அதிகமாக வெளியே கூட வருவதில்லை என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்..

அதிமுக கிளை செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையை கிட்டத்தட்ட கைப்பற்றி விட்டார் என்றே கூறலாம்.

கூவத்தூரில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது அவரை தமிழகத்தில் பலருக்கும் தெரியாது. ஆனால் தற்போதைய சூழலில் அவரைப்பற்றி தமிழகத்தில் தெரியாதவர்களே இருக்க முடியாது என்பது உண்மை.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி பின்னர் தனது ஆதரவு வட்டத்தை பெருக்கிக் கொண்டு தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய ஆளுமைகளை ஓரம் கட்டியதோடு, பொன்னையன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார் போன்றவர்களையும் சமாளித்து எடப்பாடி பழனிச்சாமி கட்சியை கைப்பற்றி உள்ளது அவ்வளவு எளிது கிடையாது. ஆனாலும் அதனையும் சாதித்துள்ளார்.

இடைக்கால பொதுச் செயலாளர்

இடைக்கால பொதுச் செயலாளர்

பலத்த எதிர்ப்புகள் சட்ட போராட்டங்களுக்குப் பிறகு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றி இருந்தாலும் தற்போதும் அவருக்கு ஒரு சில சிக்கல்கள் சொந்த கட்சிக்குள் குறிப்பாக கொங்கு மண்டலத்திற்குள் எழுந்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பதவி ஏற்ற அடுத்த நிமிடமே ஓ.பன்னீர் செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பொருளாளர் பதவிகளை பறித்ததோடு கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார் மேலும் அவரது ஆதரவாளர்களும் அடுத்தடுத்து கட்சியிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டனர்.

முக்குலத்தோர் சமூகம்

முக்குலத்தோர் சமூகம்

முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களே பெரும்பாலும் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அதிமுக பொருளாளர் பதவியை வகித்து வரும் நிலையில் அதனை சரிகட்டும் விதமாக திண்டுக்கல் சீனிவாசனுக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும் கடந்த காலங்களில் ஓபிஎஸ் தரப்பில் இருந்த விஸ்வநாதன் கேபி முனுசாமி ஆகியோருக்கு துணை பொது செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டன. எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி எழுந்த நிலையில் அதனையும் தென் மாவட்டத்தை குறிப்பாக முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆர் பி உதயகுமாருக்கு வழங்கினார் எடப்பாடி பழனிச்சாமி. தலைமை நிலைய செயலாளர் பொறுப்பு மட்டும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எஸ்பி வேலுமணிக்கு வழங்கப்பட்டது.

எடப்பாடி மீது அதிருப்தி

எடப்பாடி மீது அதிருப்தி

மற்றபடி எதிர்பார்த்த முக்கிய பொறுப்புகள் கிடைக்காத நிலையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது அனைவருக்கும் தெரிந்தது தான். இது குறித்த தகவல் எடப்பாடி பழனிச்சாமியின் காதுகளுக்கும் எட்டிய நிலையில் அவர்களுக்கும் சில பொறுப்புகளை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக துணை பொதுச்செயலாளர் பதவியை மேலும் இருவருக்கு வழங்கலாம் எனவும் கழக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை பல சீனியர்களுக்கு கொடுக்க அவர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

 ஆர்வம் காட்டுவதில்லை

ஆர்வம் காட்டுவதில்லை

ஆனால் இதுவரை அது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக வரிந்து கட்டிக்கொண்டு ஊடகங்களை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேசி வந்த பல மூத்த முன்னாள் நிர்வாகிகள் தற்போது வெளியே கூட தலை காட்டவில்லை என்கின்றனர் அதிமுகவினர். குறிப்பாக கரூர், நாமக்கல், சென்னை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களைச் சேர்ந்த சில நிர்வாகிகள் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    ADMK டெல்லி பஞ்சாயத்து ரகசியம் சொல்லும் பத்திரிகையாளர் குபேந்திரன் *Interview
     கடும் குழப்பம்

    கடும் குழப்பம்

    இதே போல கடந்த காலங்களில் அமைச்சர்களாக இருந்து கட்சியிலும் முக்கிய நிர்வாகிகளாக வலம் வந்த பலரும் தற்போது அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர்களை சமாதானப்படுத்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தீவிரம் காட்டி வந்தாலும் அதனையே பயன்படுத்தி தங்கள் பக்கம் இழுக்கவும் ஓபிஎஸ் தரப்பு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் என்ன தான் நடக்கிறது அதிமுகவில் என தொண்டர்கள் பலரும் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+