கோயம்பேடு தலைவலி.. சர்னு ஏறுது எல்லா விலையும்.. சென்னை காய்கறி மார்க்கெட்டில் வண்டியும் காணுமாமே
சென்னை: கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் காய்கறிகளின் விலையில் தாறுமாறான விலையேற்றங்கள் காணப்படுகின்றன. அந்தவகையில், கோயம்பேட்டில் என்ன நடக்கிறது தெரியுமா?
ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படுவது நம்முடைய கோயம்பேடு மார்க்கெட்தான்.. காரணம், இங்கு 1000-க்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக்கடைகள், 2000-க்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் என பிரம்மாண்டமாக செயல்பட்டு வருகின்றன.

வரத்து அதிகம்: ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்டட லாரிகளில் காய்கறிகள் வந்து குவிவது தினசரி வாடிக்கையாகும்.
எனவேதான், இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் விற்பனை நடக்கிறது.. தற்போது கோடை காலம் துவங்கியிருக்கும் சூழலில், காய்கறிகள், பழங்களின் வரத்துகள் அதிகமாக துவங்கியுள்ளன.. அதனால், நள்ளிரவு முதல் விடிகாலை வரை படுபஸியாக வாகன போக்குவரத்து காணப்படும்.
சில்லறை வியாபாரிகள்: இந்நிலையில், திடீரென அதிகாலையில் மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் வரத்து குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. இதனால் வியாபாரமும் மந்தமாகி உள்ளதாம்..
ஒருபக்கம் வரத்து அதிகரிப்பால் அவரைக்காய், வெண்டைக்காய், புடலங்காய், கோவக்காய் ஆகிய காய்கறிகளின் விலைகளும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், மற்றொருபக்கம் வரத்து குறைவு காரணமாக ஊட்டி கேரட், முருங்கைக்காய், முட்டை கோஸ் ஆகிய காய்கறிகளின் விலை அதிகரித்து காணட்பபடுகிறது.
பருவமழை: கடந்த சில தினங்களாகவே, பூண்டு விலை அதிகரித்து காணப்பட்டது.. தமிழகத்தில் பருவமழை காரணமாக, காய்கறிகளின் விளைச்சலிலும் மாற்றம் தென்பட்டது.. அந்தவகையில், கோயம்பேட்டில் வரலாறு காணாத அளவுக்கு ஒரு கிலோ பூண்டு ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பிறகு, இஞ்சி விலை உயர்ந்தது.. இப்போது, சர்ரென வரத்து காரணமாக ஊட்டி கேரட் விலையும் உயர்ந்துவிட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கும், ஊட்டி கேரட் கிலோ ரூ.90-க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறி மொத்த விற்பனை விலை விபரம்: (கிலோவில்) :-
தக்காளி-ரூ.15, நாசிக் வெங்காயம்-ரூ.20-ரூ.25வரை, ஆந்திரா வெங்காயம்-ரூ.12-ரூ.15வரை, சின்ன வெங்காயம்-ரூ.20-ரூ.40வரை, உருளைக்கிழங்கு-ரூ.22, உஜாலா கத்தரிக்காய்-ரூ.15, அவரைக்காய்-ரூ.20, வெண்டைக்காய்-ரூ.25, பீன்ஸ்-ரூ.40, ஊட்டி கேரட்-ரூ70, மாலூர் கேரட்-ரூ.35, பீட்ரூட்-ரூ.25, முட்டை கோஸ்-ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளரிக்காய்: அதேபோல, முருங்கைக்காய்-ரூ.80, பீர்க்கங்காய்-25, வெள்ளரிக்காய்-ரூ.15, புடலங்காய்-ரூ.15, காராமணி-ரூ.15, முள்ளங்கி-ரூ15, சவ்சவ்-ரூ.10, நூக்கல்-ரூ.15, காலி பிளவர் ஒன்று-ரூ.15, குடை மிளகாய்-ரூ.30, பட்டை கொத்தவரங்காய்-ரூ.25,பன்னீர் பாகற்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.20, பச்சை மிளகாய்-ரூ.20, இஞ்சி-ரூ.90 என் ரீதியில் விற்பனையாகி கொண்டிருக்கிறது.
வரத்து அதிகரிப்பால் அவரைக்காய், வெண்டைக்காய், புடலங்காய், கோவக்காய் விலைகள் வீழ்ச்சி அடைந்தாலும், கேரட், கோஸ் போன்ற காய்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளது, இல்லத்தரசிகளை கவலைக்குள்ளாக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications