நெருப்பை போன்றவர் நடிகை பானுமதி- அண்ணாவுடன் இணைத்து பேசுவது அவதூறின் உச்சம்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்
சென்னை: நடிகை பானுமதியை பேரறிஞர் அண்ணாவுடன் இணைத்து பேசுவது அவதூறின் உச்சம் என சமூக செயற்பாட்டாளர் மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணாவை விமர்சித்திருந்தார். இதற்கு அதிமுக, திமுக தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் சிலர் அண்மையில் பேரறிஞர் அண்ணாவையும் நடிகை பானுமதியையும் இணைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். பின்னர் இந்தப் பதிவுகளை நீக்கிவிட்டனர்.

இது தொடர்பாக கே.எஸ். ராதாகிருஷ்ணன் தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளதாவது: சமீபத்திய ஊடகங்களில் மட்டுமல்லாமல் வெகு நாட்களாகவே மறைந்த முதல்வர் அண்ணா மற்றும் தசாவதானி பானுமதி இருவர் பற்றியும் உண்மைக்கு மாறாக, முரணான விதத்தில், தவறான கண்ணோட்டத்துடன் இங்கே பலரும் வதந்தியாக பேசிக் வருகிறார்கள்.
மிஸ்டர் எம்ஜிஆர், மிஸ்டர் சிவாஜி கணேசன்: நடிகை பானுமதி அம்மா எல்லோரையும் மிஸ்டர் எம்ஜிஆர் மிஸ்டர் சிவாஜி கணேசன் என்று பெயர் சொல்லி தான் கூப்பிடுவார். ஆந்திர முதல்வராய் இருந்த திரு ராமராவ் அவர்களை அண்ணா என்று அழைப்பார். கலைகளில் தீவிர மனோநிலையையும் இல்லத்தில் அதீத பக்தி மார்க்கத்தையும் கொண்டவர் திருமதி பானுமதி அவர்கள். எளிதில் யாரையும் அருகில் அண்ட விட மாட்டார்.
இழுக்கு வராத கதாபாத்திரங்கள்: தனக்கு கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக செய்துவிட்டு யாருடைய தயவும் இன்றி வெளியேறி செல்கிறவர் அவர். பலமுறை அவரை நடிக்க வற்புறுத்தி கேட்டுக்கொண்ட பிறகுதான் தன்னுடைய கௌரவத்திற்கு இழுக்கு வராத பாத்திரங்களை மட்டும் கம்பீரமாக ஏற்று நடித்து திரையுலகில் வலம் வந்தவர். எனது மனைவியின் குடும்பத்துக்கு நெருங்கியவர்.திருமணத்திற்கு வர இருந்தும் சில தவிர்க்க இயலாத காரணங்களால் அவர் வர இயலவில்லை. வெளி நாட்டுக்கு சென்று திரும்பிய உடன் எங்களை அழைத்து உபசரித்து வாழ்த்தினார்.
ஒழுக்கம் விஷயத்தில் நெருப்பு: ஒழுக்கம் விஷயத்தில் நெருப்பை போன்றவர். யாருக்கும் அடிபணியாதவர். பொது வாழ்க்கைக்கு அல்லது கலைக்கு என ஒருவர் வந்து விட்டால் அவர் குறித்து யாரும் எதை வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம் என்பது மாதிரியான நபர்கள் சற்று நிதானமாக தனது கருத்துக்களை சொல்ல வேண்டும்! வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது மாதிரி இருக்க கூடாது. நாகரீகம் முக்கியம். இதையெல்லாம் எளிதில் நானும் கூட கடந்து போக முடியும். திருமதி பானுமதி அவர்களை முற்றிலும் அறிந்தவன் என்கிற முறையில் இவ் வதந்திகள் வெறும் வாயை மெல்லும் அவல் தான்.
முன்மாதிரியாக திகழ்ந்தவர்கள்: அவர் ஒரு கலைகளின் அரசி. சுயமரியாதையிலும் சுய கௌரவத்திலும் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு நெருப்பை போன்றவர். இறந்தவர்களை அவர்களின் மகத்தான செயலின் பொருட்டு நினைவு கூறுங்கள். அரசியலிலும் கலைகளிலும் இருவரும் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள். இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா?












Click it and Unblock the Notifications