தீயாகப் பரவிய வதந்தி.. கொதித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.. “பாஜகவில் சேரவே இல்லை.. எப்படி விலக முடியும்?”
சென்னை : "நான் பாஜகவில் இணையவே இல்லை. பிறகு எப்படி விலக முடியும்?" என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால் லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்ததாக ஒரு தகவல் வேகமாகப் பரவியது.
லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகிவிட்டதாக தகவல் பரவிய நிலையில், தான், பாஜகவில் இணையவே இல்லையே எப்படி விலக முடியும் எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
மேலும், நான் எந்தக் கட்சியிலும் இல்லை, நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அரசியலில் நுழையும் திட்டம் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
தமிழ்நாடு பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்த நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில், சமீபத்தில் காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தான் விலகியதற்கு அண்ணாமலை தான் காரணம் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் காயத்ரி ரகுராம்.

லட்சுமி ராமகிருஷ்ணன் விலகல்?
இந்நிலையில் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜவில் இருந்து விலகியதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டி இணையத்தில் வெளியானது. அதில், லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகுவதாகத் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இது தொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

சேரவே இல்லையே
லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நான் பாஜகவில் இணையவே இல்லை. பிறகு எப்படி விலக முடியும்? நான் கூறிய தகவலை தவறாக பதிவிட்டுள்ளார்கள். இந்த விவாதத்தில் அண்ணாமலை கூறியது சரியே. தங்களுக்கான ஒழுக்கங்களை வளர்த்துக் கொள்ளாமல் பிறரை கேள்வி கேட்க எந்த தகுதியும் ஊடகங்களுக்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வரமாட்டேன்
மேலும் மற்றொரு பதிவில், "இதன் மூலம் நான் தெளிவுபடுத்துவது, நான் எந்தக் கட்சியிலும் இல்லை, நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை, எந்தக் கட்சியாக இருந்தாலும் எனது பார்வையில் நல்லது கெட்டதுகளை மட்டுமே விமர்சிக்கிறேன். எனக்கு அரசியல் தொடர்புகளோ எந்த அரசியல் கட்சியின் ஆதரவோ இல்லை. வரும் காலத்தில் அரசியலில் நுழையும் திட்டம் இல்லை, நான் ஆன்மிகத்தை மட்டுமே தொடர விரும்புகிறேன், மதம் அல்லது மத அடையாளங்களை அல்ல." எனத் தெரிவித்துள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications