Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நில அளவீடு அவசியம்.. பத்திரம், பட்டாவில் நிலத்தின் அளவை சரி பார்க்கணுமாம்.. ஏன் தெரியுமா? அடேங்கப்பா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நில அளவீடு என்றால் என்ன? பத்திரத்தில் உள்ள அளவுகள் சரியாகத்தான் இருக்கும் என்று அலட்சியம்தான், சொத்து விவகாரங்களில் பல பிரச்சனைகள் எழுவதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள். அப்படியானால் நில அளவீடு விஷயத்தில் என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் பட்டா மாறுதல், உட்பிரிவு உருவாக்குவதில் நிலத்தின் எல்லைகள், பரப்பளவு போன்ற விபரங்களில் நிறைய பிழைகள் வருவதாகவும், இதனை களையவும் தமிழக அரசு மும்முரம் காட்டி வருகிறது. எனவே, நில அளவை பணியில் தரக்கட்டுப்பாடு வழிமுறைகளை அமல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது..

land survey

இதற்காகவே, சர்வே எண், அதன் உட்பிரிவு எண்ணுக்கு உட்பட்ட நிலத்தின் அளவை, துல்லியமாக குறிப்பிட வேண்டும் என்றும், அத்துடன், நில அளவை வரைபட விற்பனை உள்ளிட்ட சேவைகளையும் வழங்கி வருகிறது.

சர்வேயர்கள்: இதைத்தவிர, மாநில அளவில் தரக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் விரைவில் ஏற்படுத்த உள்ளது. இதன்மூலம் நில அளவை துறையின் சேவைகள் குறித்த புள்ளி விபரங்களை, இணைய வழியில், உடனுக்குடன் உயரதிகாரிகள் கண்காணிக்க முடியும். அதேபோல, பொதுமக்கள் விண்ணப்பித்தவுடன் நில அளவை செய்து கொடுக்கும் அளவுக்கு, சர்வேயர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இதனால் சர்வேயர் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. நில அளவை பணி முடிந்தாலே பட்டா மாறுதல் பணிகளும் முடிந்து விடும்.. பட்டா மாறுதல் மேற்கொள்ளப்படும்போதே, நில அளவை வரைபடத்தையும் உடனடியாக பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் நம்பிக்கை கூறியிருந்தார்.

நில அளவை வரைபடம்: இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பணியாக நில அளவீட்டு பணிகள் உள்ளன.. நம்முடைய நாட்டை பொறுத்தவரை, வருவாய் துறையின் பட்டா, நில அளவை வரைபடம் ஆகியவற்றில் நிலத்தின் அளவு ஹெக்டெரில் தான் குறிப்பிடப்படுகின்றன..

பெரும்பாலான பகுதிகளில் நிலத்தின் அளவுகள் ஹெக்டேர், ஏக்கர், ஏர்ஸ் என்று குறிப்பிட்டாலும், பத்திரங்களில் நிலத்தின் அளவுகள் சதுர மீட்டர், சென்ட் என்ற அடிப்படையில் தான் குறிப்பிடப்படுகிறது. எனவே, ஒரு சொத்தை வாங்குவதற்கு முன்பு, அதன் பரப்பளவு என்ன என்பதை முழுமையாக தெளிவாக விசாரிக்க வேண்டும்...

ஆவணங்கள்: பத்திரங்களில் உள்ள பெயர்கள் சரியாக உள்ளதா? அதே விபரங்கள் பட்டா உள்ளிட்ட ஆவணங்களிலும் இருக்கிறதா? என்பதையெல்லாம் கவனிக்க வேண்டுமாம். ஒருவேளை ஆவணங்களிலுள்ள அளவுகளில் ஏதாவது சந்தேகம் என்றால், உடனடியாக நில அளவுகள் குறித்து அறிந்தவரை அணுக வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள் வல்லுநர்கள். எப்போதுமே அதிகாரிகளை வைத்தே நிலத்தினை அளக்க வேண்டுமாம்.

அதேபோல, நில அளவுகள் தொடர்பாக கன்வெர்டர்கள் இலவசமாக வெப்சைட்களில் கிடைக்கின்றன. இது போன்ற வசதிகளை பயன்படுத்தி, பத்திரம், பட்டாவில் குறிப்பிடப்பட்ட நில அளவுகள் ஒரே மாதிரி இருக்கிறதா என்பதையும் உறுதிசெய்து கொள்ளலாம்.

பக்கவாட்டு அளவுகள்: குறிப்பாக, நில அளவை வரைபடத்தை பார்க்கும்போது, அதில் மொத்த பரப்பளவு குறிப்பிடப்பட்டு இருந்தாலும், பக்கவாட்டு அளவுகளை பயன்படுத்தி சரிபார்க்க வேண்டியது கட்டாயமாகும் என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.

அதேபோல நில அளவீடுகள் என்னென்ன? நிலத்தை எப்படி அளப்பார்கள்? என்பதையும் தனிப்பட்ட முறையிலும் அறிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய நிலத்தை அளந்தும் பார்க்கலாம்.. இதற்கு முதலில் உங்களது நிலம் எத்தனை சதுர அடியில் உள்ளது? அதன் நிலத்தின் வடிவம் சதுரமாக உள்ளதா? செவ்வகமாக உள்ளதா? வெவ்வேறு கோணங்களில் உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும்.

இன்ச் டேப்: ஒரு இன்ச்டேப்பில் நிலத்தை நாமே அளக்கலாம். டேப்பின் மேலே அடி கணக்கும், இன்ச்சும் கீழே சென்ட்டி மீட்டரில் காணப்படும். இதில், ஒரு அடி என்பது 12 இன்ச்சு, 30.48 சென்டி மீட்டர் சேர்ந்ததாகும்.

மீட்டர் கணக்காக இருந்தால் டேப்பில் 1 மீட்டருக்கு 3,28 அடியாகும். 1 ஏக்கர் இருந்தால் 100 சென்ட்டும், 100 சென்ட் என்பது 43560 சதுர அடியும் வரும்.. இதனை சதுரமீட்டரில் 4048 என்றும் சொல்லலாம்.. இதனை பயன்படுத்தியே நிலத்தை அளந்து கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+