காதல்+சினிமா+அரசியல்.. தொட்டதெல்லாம் வெற்றி! உதயநிதியின் “பெர்சனல்” பக்கங்கள்.. ரொம்ப ஜாலியான மனுசன்
சென்னை: தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்க இருக்கும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பரபரப்பான அரசியலை பயணங்களை கடந்து அவரது தனிப்பட்ட மற்றும் சினிமா பக்கங்களை புரட்டிப் பார்ப்போம்.
அரசியலை தவிர்த்துவிட்டு உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யம் மிக்கது. அரசியல் செல்வாக்கும் மிக்க பெரிய குடும்பத்திலிருந்து வந்தாலும் இயல்பாகவே பழகும் தன்மை கொண்டவராக உதயநிதி அறியப்படுகிறார்.
1977 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி பிறந்த உதயநிதி ஸ்டாலினுக்கு தற்போது 44 வயதாகிறது. சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் படித்த இவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடிகர் விஷால் போன்றவர்கள் இளம் வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாம்.

கலகலப்பான மனிதர்
சமீபத்தில் விஷாலும், உதயநிதியும் ஒரு நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கலாய்த்து பேசிக்கொண்டது பலராலும் ரசிக்கப்பட்டது. எப்படிப்பட்ட கேள்வி கேட்டாலும் கோபப்படாமல் வெளிப்படையாகவும் கலகலப்பாகவும் பதிலளிக்கும் உதயநிதி ஸ்டாலின் பேட்டிகளை திமுகவினர் கடந்து, பொதுமக்களும், மாற்று கட்சியினருமே விரும்பி கேட்கும் வகையில் இருக்கும்.

ரசிக்கப்படும் பேட்டிகள்
ஒரு பேட்டியில் அன்பின் மகேஷுக்கும் தனக்கும் இருக்கும் நெருக்கம் குறித்தும் பள்ளி பருவத்தில் தாங்கள் செய்த சேட்டைகள் பற்றியும் நகைச்சுவையாக பேசி இருப்பார். சமீபத்தில் நடிகர் ஆர்யா நடித்த கேப்டன் திரைப்படத்தை கலாய்த்து உதயநிதி அளித்த பேட்டியும் அதிகளவில் ரசிக்கப்பட்டு டிரெண்டானது.

அழகிரியுடன் உறவு
ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் மோதல் இருப்பதாக பேசப்பட்டு வரும் சூழலில் அழகிரியிடம் தான் அடிக்கடி பேசி வருவதாகவும், தனக்கு அவரை பிடிக்கும் எனவும் வெளிப்படையாகவே அழகிரியுடனான தனது சிறுவயது நினைவுகளை அவர் பகிர்ந்து இருந்தார். உதயநிதி தனது மனைவி கிருத்திகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

காதல் கதை
முதலில் உதயநிதி கிருத்திகாவிடம் காதலை சொன்னபோது அதை அவர் ஏற்க மறுத்ததாகவும் அதன் பின்னர் எப்படியே தன்னை சம்மதிக்க வைத்துவிட்டார் எனவும் கிருத்திகா ஒரு நேர்காணலில் தெரிவித்து இருப்பார். கிருத்திகா, வணக்கம் சென்னை, காளி ஆகிய திரைப்படங்களையும் பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸ்களையும் இயக்கி உள்ளார்.

குடும்பம்
இந்த தம்பதிக்கு இன்பநிதி, தன்மயா என்ற 2 பிள்ளைகள் உள்ளார்கள். திமுகவின் வாரிசு அரசியலை விமர்சிப்பவர்கள் உதயநிதியின் மகனான இன்பநிதியையும் விட்டுவைப்பதில்லை. இதனால் இன்பநிதியின் பெயரும் தமிழ்நாடு மக்கள் மத்தியில் பரிட்சமையானதாகவே மாறிவிட்டது. அரசியல், சினிமா என்று பிஸியாக இருந்தாலும் குடும்பத்துக்கு அதிக நேரத்தை உதயநிதி கொடுப்பதாக கூறுகின்றனர் நெருக்கமானவர்கள்.

சினிமா அறிமுகம்
அரசியலின் தளபதியாக பார்க்கப்படும் மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின், சினிமாவின் தளபதி என ரசிகர்களால் கொண்டாப்படும் விஜய் நடித்த குருவி படத்தின் மூலமாகவே திரையுலகிற்குள் தயாரிப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து அவது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை விநியோகம் செய்தார் உதயநிதி ஸ்டாலின்.

நடிகராக முதல் படம்
உதயநிதி நடிகராக அறிமுகமான திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி என்றே பலரும் நினைத்திருப்பீர்கள். ஆனால், அதுதான் இல்லை. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து 2009 ஆம் ஆண்டு வெளியான ஆதவன் திரைப்படமே உதயநிதியின் முதல் படமாகும். அதில் வடிவேலுவின் உறவினராக சில நிமிடங்கள் வருவார் உதயநிதி ஸ்டாலின்.

கதாநாயகனாக முதல் படம்
அதை தொடர்ந்து அவர் கதாநாயகனாக அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி பெரும் வெற்றியை பெற்றது. இதற்கு அடுத்து ஒரு கதிவேலன் காதன், நண்பேன்டா, கெத்து என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் ஒரு நடிகராக உதயநிதிக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

நடிப்பு + அரசியல்
அடுத்து சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம், இப்படை வெல்லும், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவர் என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் அவர் நடித்து உள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாக உள்ளது. இப்படி நடிப்பு, அரசியல் என இரு துறைகளில் சமநிலையில் பயணித்து வருகிறார் உதயநிதி.
-
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
உதயநிதி பட நடிகையிடம் அத்துமீறிய இளைஞர்.. டாட்டூ போட சென்றபோது ரசிகர் செய்த செயல்! ஷாக்












Click it and Unblock the Notifications