சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோடை வெயிலுக்கு ரெஸ்ட் கொடுக்குமா மழை? இந்த தேதிகளில் பலத்த காற்று வீசும்! மீனவர்களுக்கு எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை : இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Recommended Video

    வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது... வானிலை ஆய்வு மையம் தகவல்!

    தமிழகத்தில் கோடை காலத்தில் கத்திரி வெயில் உச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது இருக்கும் நிலையில் பகல் நேரங்களில் மிகக் கடுமையாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊர் ஓர பண்ணை வீடு! இருட்டறையில் 2 நாளாக 5 பேர்! நம்பிவந்த காதலியை மிருகங்களுக்கு இரையாக்கிய கொடூரன் ஊர் ஓர பண்ணை வீடு! இருட்டறையில் 2 நாளாக 5 பேர்! நம்பிவந்த காதலியை மிருகங்களுக்கு இரையாக்கிய கொடூரன்

    அதே நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாலை நேரங்களில் கோடை மழை பெய்து மக்களை சற்றே நிம்மதியின் ஆழ்த்தி வருகிறது. சென்னை தவிர தமிழகத்தின் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்?

    காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்?

    இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் எனவானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இது 08.05.2022 அன்று புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து 10.05.2022 அன்று மாலை வட ஆந்திரா-ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு வடகிழக்கு திசையில் ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும்.

    மழைக்கு வாய்ப்பு

    மழைக்கு வாய்ப்பு

    இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மிதமான மழைக்கு வாய்ப்பு

    மிதமான மழைக்கு வாய்ப்பு

    10 மற்றும் 11ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

    மழை அளவு

    மழை அளவு

    கடந்த 24 மணி நேரத்தில் மணமேல்குடி (புதுக்கோட்டை), ஜெயம்கொண்டம் (அரியலூர்) தலா 7, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 6, திருத்தணி (திருவள்ளூர்) 5, கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை) 4, விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), திருத்தணி PTO (திருவள்ளூர்), திருத்தணி AWS (திருவள்ளூர்) சிதம்பரம் (கடலூர்), மங்களபுரம் (நாமக்கல்), மயிலாடுதுறை, புவனகிரி (கடலூர்), (இராணிப்பேட்டை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பலத்த காற்று வீசும்

    பலத்த காற்று வீசும்

    7ஆம் தேதி அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 8ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    சூறாவளி காற்று

    சூறாவளி காற்று

    9ஆம் தேதி மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    தென்கிழக்கு வங்க கடல்

    தென்கிழக்கு வங்க கடல்

    10ஆம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் வடக்கு ஆந்திர கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    11ஆம் தேதி வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஒடிஷா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடல் பகுதி, மத்திய மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ் கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என கூறப்பட்டுள்ளது.

    English summary
    The Meteorological Department said that the depression in the south-eastern Bay of Bengal will move in a north-westerly direction and strengthen into a depression today as deep depression prevails over the southern Andamans and adjoining areas.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X