அடிதூள்.. சென்னை மக்களுக்கு செம குட்நியூஸ் சொன்ன அரசு.. 2.0 திட்டத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு!
பொதுவாக புட் ஸ்ட்ரீட்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்க கூடியவை.
சென்னை: சென்னையில் முதல்முறையாக மிகப்பெரிய அளவில் புட் ஸ்ட்ரீட் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் அண்ணா நகரில் உள்ள கோரா புட் ஸ்ட்ரீட் சில உணவு சாலைகள் மிகவும் பிரபலம். ஆனால் இவை எதுவும் மிக நீளமானது கிடையாது.
அதாவது ஒரு சில கடைகளோடு இருக்கும் இந்த புட் ஸ்ட்ரீட்கள் மிகப்பெரிய அளவில் இல்லை. மற்ற பெருநகரங்களில் இதை விட புட் ஸ்ட்ரீட்கள் பெரிய அளவில் அமைக்கப்பட்டு உள்ளன.

பயணம்
பொதுவாக புட் ஸ்ட்ரீட்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்க கூடியவை. அதேபோல் அதிக அளவில் வருமானமும் இதனால் வரும். முக்கியமாக மாநகராட்சிக்கு நேரடியாக வாடகை வருவாய் இதன் மூலம் கிடைக்கும். அந்த வகையில்தான் சென்னையில் முதல்முறையாக மிகப்பெரிய அளவில் புட் ஸ்ட்ரீட் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் முதல் முறையாக ரூ.20 கோடியில் இந்த புட் ஸ்ட்ரீட் அமைக்க உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில்தான் மாநகராட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

ஒரே இடம்
சென்னையின் அனைத்து உணவும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையிலும், தென் இந்திய உணவுகள், வடஇந்திய உணவுகள், அமெரிக்க உணவுகள், இத்தாலின் உணவுகள், சீன உணவுகள், மத்திய கிழக்கு நாடுகளின் உணவுகள் என்று பல உணவு வகைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் விதமாக அரசு சார்பாக இந்த புட் ஸ்ட்ரீட் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 2 கிமீ நீளத்தில் இந்த புட் ஸ்ட்ரீட் அமைக்கப்பட உள்ளது. உள்ளே பல அரங்குகள் இருக்கும் விதமாகவும், சிறிய பூங்கா இருக்கும் வகையில், சர்வதேச தரத்தில் இந்த புட் ஸ்ட்ரீட் அமைக்கப்பட உள்ளது.

சின்னமலை
சென்னையில் சின்னமலை பகுதியில் இந்த புட் ஸ்ட்ரீட் அமைக்கப்பட உள்ளது. அங்கே இருக்கும் ராஜீவ் காந்தி சிலையில் இருந்து ராஜ்பவன் சாலை வரை இருக்கும் பகுதியின் 2 கிமீ தூர சாலையில் இந்த புட் ஸ்ட்ரீட் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 20 கோடி செலவு செய்யப்பட உள்ளது. சாலையின் இரண்டு புறமும் கடைகள் அமைக்கப்படும். அதோடு சாலை பெரிதாக்கப்படும். விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு அதன்பின் கடைகள் வாடகைக்கு விடப்படும். சிங்கார சென்னை 2.0 திட்டத்தை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே திமுக அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு கடந்த பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின.

சிங்கார சென்னை 2.0
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை அருகே 300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். அதேபோல் துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு 1,825 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலையை மீட்டெடுத்து நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது; 20 கிமீ தொலைவு ஈரடுக்கு உயர்மட்ட சாலையாக அமையவுள்ளது. மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் ஒரு கட்டமாக இந்த திட்டமும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications