பிரபல ஹோட்டலில் சாப்பாட்டில் பல்லி.. அதுவும் "இங்கேயா".. அதிர்ச்சியில் உறைந்த சென்னை..!
ஓட்டல் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் ஸ்டேஷன் வரை புகார் சென்றுள்ளது
சென்னை: ஒரு பிரபலமான ஹோட்டலில் சாப்பாட்டில் பல்லி இருந்திருக்கிறது.. இதையடுத்து, போலீஸ் விசாரணை துவங்கிய நிலையில் சென்னையில் பரபரப்பு கூடி உள்ளது.
சென்னை குரோம்பேட்டை, ஜிஎஸ்டி சாலையில் பிரபல ஹோட்டல் இயங்கி வருகிறது.. ஒரு ஊரின் பெயரிலான இந்த ஹோட்டல் கடந்த 4 வருடமாகவே இங்கு செயல்பட்டு வருகிறது...
பிரபலமான ஹோட்டல் என்பதால், எந்நேரமும் வாடிக்கையாளர்கள் இந்த ஹோட்டலுக்கு வந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில், பாளையங்கோட்டையை சேர்ந்த இசக்கி என்பவர் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் இந்த ஹோட்டலுக்கு சாப்பிட போனார்.. முதலில் வெள்ளை சாதம் போட்டுள்ளனர்.. அதற்கு பிறகு சாம்பார் ஊற்றி உள்ளனர்.. அந்த சாம்பாரில்தான் பல்லி ஒன்று இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்...
இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டவுடன், அந்த உணவகத்தினர் மீதமிருந்த மற்ற சாப்பாடுகளை கீழே கொட்டிவிட்டனர்... இதுகுறித்து தகவலறிந்து பல்லாவரம் நகராட்சி அலுவலக சுகாதார அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்குள் நுழைந்து அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்...

ஆனாலும், இசக்கி, குரோம்பேட்டை ஸ்டேஷனில் புகார் தந்தார்.. அந்த புகாரின் பேரில் ஹோட்டல் மேனேஜர் தர்மதுரை என்பவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். சென்னையின் பிரபல ஹோட்டலிலேயே இந்த கதி என்றால், சாமான்யர்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம்? என்ற கேள்விகள் நம்மிடம் எழுகின்றன..!
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பல்லி விழும் பலன்கள்: அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? கெளளி சாஸ்திரம் சொல்லும் ரகசியங்கள்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications